கியாக்கு விழுந்த திடீர் அடி! என்னதான் 5வது இடத்துல இருந்தாலும் இது உஷாரா இருக்க வேண்டிய தருணம்!
கியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்ற விற்பனை அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் விற்பனையில் சற்று சரிவை சந்தித்துள்ளது. கியா நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த ஜனவரி மாத விற்பனை விவரங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது கியா நிறுவனமும் தனது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 23,769 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை விட 17 சதவீதம் குறைவான விற்பனையாகும். அந்த காலகட்டத்தில் 28,684 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது.

இதுவே கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது டிசம்பர் மாதத்தில் வெறும் 12,536 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. அத்துடன் ஒப்பிட்டால் 89.6 சதவீத விற்பனை வளர்ச்சியாகும். கியா நிறுவனம் தற்போது ஒட்டுமொத்த விற்பனையில் இந்தியாவில் ஐந்தாவது மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக மாறி வருகிறது.
டொயோட்டா, ஹோண்டா, ரெனால்ட், எம்ஜி, போக்ஸ்வேகன், நிஸான், ஸ்கோடா, சிட்ரோன் மற்றும் ஜீப் ஆகிய நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி கிய நிறுவனம் இந்தியாவில் ஐந்தாவது மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது. முதல் நான்கு இடத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. வழக்கம் போல மாருதி, ஹூண்டாய், டாடா, மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் தான் இடம் பிடித்துள்ளன.

கியா நிறுவனத்தின் சோனட் தான் மிக அதிகமான விற்பனையில் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 11,530 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9261 வாகனங்கள் தான் விற்பனையாக இருந்தது. இது 25 சதவீதம் வளர்ச்சியாகும். இதற்கு அடுத்த இடத்தில் கியா செல்டோஸ் கார் தான் இருக்கிறது.
செல்டோஸ் காரை பொறுத்தவரை மொத்தம் 6391 வாகனங்கள் கடந்த ஜனவரி மாதம் விற்பனையாகிய இருந்தன. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10,470 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 39 சதவீதம் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆட்டோ காரில் பெரிய அளவில் அப்டேட் எதுவும் சமீப காலமாக இல்லை என்பதால் இந்த காரின் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. விரைவில் இதற்கான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த இடத்தில் கியா கேரன்ஸ் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜனவரி மாதம் மற்றும் 5848 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7900 கார்கள் விற்பனையாக இருந்தது தற்போது 26 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த காரும் பெரிய அளவில் அப்டேட் எதுவும் இல்லாததால் விற்பனை நாளைக்கு நாள் சரிந்து கொண்டே இருக்கிறது.
கியா நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய அறிமுகமாக 4ம் தலைமுறை கார்னிவெல் கார்தான் இருக்கிறது. இது ஒரு பிரீமியம் எம்பிவி ரக காராகும். இந்த காரின் உட்புறமும் வெளிப்புறமும் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட உள்ளன. இந்த கார் 7 மற்றும் 9 சீட்டர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வர உள்ளது. இதன் இன்ஜினை பொறுத்தவரை 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 200 பிஎஸ் பவரையும் 440 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வருகைக்காக அதன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த கார் நிச்சயம் பிரீமியம் செக்மெண்ட் என்பதால் அதிக விலையில் தான் விற்பனைக்கு வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் நல்ல விற்பனை வளர்ச்சியை பெற்றிருந்தாலும், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனை ஒப்பிடும்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆனால் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாத விற்பனை ஒப்பிடும்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்துள்ளது. கியா நிறுவனம் தனது தயாரிப்புகளை அப்டேட் செய்வது மற்றும் புதிய தயாரிப்பில் கொண்டு வருவதன் மூலம் தொடர்ந்து சிறப்பான விற்பனையை பெற முடியும்.


Click it and Unblock the Notifications









