4 சின்ன பசங்கள வெச்சுகிட்டு பெரிய சம்பவத்தை செய்த கியா! இனிதான் ஆட்டமே இருக்கு! கிலியில் போட்டி நிறுவனங்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). தென் கொரியாவை (South Korea) சேர்ந்த கியா நிறுவனம், ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான கியா நிறுவனத்தின் மாடல் வாரியான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதில், கியா செல்டோஸ் (Kia Seltos) முதல் இடத்தை பிடித்துள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 6,554 ஆக இருந்த கியா செல்டோஸ் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 7,912 ஆக உயர்ந்துள்ளது. இது 21 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த பட்டியலில், கியா கேரன்ஸ் (Kia Carens) கார் 2வது இடத்தை பிடித்துள்ளது. இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 6,102 ஆக இருந்த கியா கேரன்ஸ் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 4,737 ஆக குறைந்துள்ளது. இது 22 சதவீத வீழ்ச்சி ஆகும்.

Kia Carens

இந்த பட்டியலில் (Kia Sonet) கார், 3வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 8,677 ஆக இருந்த கியா சொனெட் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 8,750 ஆக உயர்ந்துள்ளது. இது 1 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்த பட்டியலில் 4வது மற்றும் கடைசி இடத்தை கியா இவி6 (Kia EV6) பிடித்துள்ளது. இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் கியா இவி6 எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்த நிலையில், நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 1 கியா இவி6 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Kia Seltos

கியா நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் இந்த 4 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால் கூடிய விரைவில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், கியா க்ளாவிஸ் (Kia Clavis) மிகவும் முக்கியமானது ஆகும். இந்திய சாலைகளில் தற்போது மிக தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் கியா க்ளாவிஸ் கார், நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர கியா கார்னிவல் (Kia Carnival) காரும் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது.

கியா கார்னிவல், ஏற்கனவே விற்பனையில் இருந்து வந்த ஒரு கார்தான். ஆனால் கார்னிவல் காரின் விற்பனையை தற்போது நிறுத்தியுள்ள கியா நிறுவனம், பல்வேறு அப்டேட்களுடன் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தீவிரமாக தயாராகி வருகிறது. இதுதவிர கியா கேரன்ஸ் மற்றும் கியா க்ளாவிஸ் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் கியா நிறுவனம் விற்பனைக்கு களமிறக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா நிறுவனம் மிக குறுகிய காலத்தில், இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்திய சந்தையில் வரும் காலங்களில் பல்வேறு புதிய கார்களை களமிறக்கவுள்ளதால், கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை சிறப்பான முறையில் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.

குறிப்பாக கியா க்ளாவிஸ் கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற விலையில் வரவிருப்பதுதான் இதற்கு காரணம். மறுபக்கம் கியா கார்னிவல் காரானது, பல்வேறு சொகுசு வசதிகளுடன் மிகவும் விலை உயர்ந்த ஒன்றாக வரவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 13, 2024, 12:50 [IST]
English summary
Kia sales report march 2024 ev6 sonet carens seltos
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+