இருங்க பாய்... விலை குறைவான காரை களத்தில் இறக்க ரெடியாகும் முன்னணி நிறுவனம்... தரமான சம்பவம் காத்திருக்கு...

இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்த நிறுவனம் கியா (Kia). 5 வருடங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், இந்தியர்களின் விருப்பமான கார் நிறுவனங்களில் ஒன்றாக கியா மாறியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) அதை உறுதி செய்கிறது. இது கியா இந்தியா நிறுவனத்தின் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் ஆகும். இதன்படி கியா இந்தியா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28,545 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது.

ஆனால் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 21,941 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் கார் விற்பனையில் 30 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து கியா இந்தியா நிறுவனம் அசத்தியுள்ளது. கியா நிறுவனம் தற்போதைய நிலையில் மொத்தம் 6 கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது.

2024 Kia Sonet

அவை கியா செல்டோஸ் (Kia Seltos), கியா சொனெட் (Kia Sonet), கியா கேரன்ஸ் (Kia Carens), கியா கார்னிவல் (Kia Carnival), கியா இவி9 (Kia EV9) மற்றும் கியா இவி6 (Kia EV6) ஆகியவை ஆகும். வரும் காலங்களில் இன்னும் பல்வேறு புதிய கார்களை கியா இந்தியா நிறுவனம் களமிறக்கவுள்ளது.

இதில், கியா க்ளாவிஸ் (Kia Clavis) காரும் ஒன்றாகும். நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற விலையில் கியா க்ளாவிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது (ஆரம்ப விலை 6-8 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்). இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா க்ளாவிஸ், இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது.

2024 Kia Sonet Interior Design

இதன் வருகைக்கு பின்னர், கியா இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா இந்தியா நிறுவனம் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற கார்களை விற்பனை செய்து வருகிறது. இதன் காரணமாகவே பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை அந்நிறுவனத்தால் பதிவு செய்ய முடிகிறது.

கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகியவை, எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள் ஆகும். அதே நேரத்தில் கேரன்ஸ் மற்றும் கார்னிவல் ஆகியவை, எம்பிவி ரகத்தை சேர்ந்தவையாக உள்ளன. எஞ்சிய 2 கார்களும், அதாவது இவி9 மற்றும் இவி6 ஆகிய இரண்டும், எலெக்ட்ரிக் கார்கள் ஆகும்.

இதில், கார்னிவல், இவி6 மற்றும் இவி9 ஆகிய 3 கார்களும், மிகவும் விலை உயர்ந்த பிரீமியம் கார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எஞ்சிய 3 கார்களும், அதாவது செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் ஆகிய 3 கார்களும், நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களும் வாங்க கூடிய விலையில் விற்பனையாகி கொண்டுள்ளன. இதன் மூலமாக பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் கியா இந்தியா நிறுவனம் பூர்த்தி செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா இந்தியா நிறுவனத்தின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு, நடப்பு 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் பண்டிகை காலமும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. ஏனெனில் கியா நிறுவனத்தை போலவே இன்னும் பல்வேறு நிறுவனங்களும் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Sunday, November 3, 2024, 15:06 [IST]
English summary
Kia sales report october 2024 30 per cent growth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+