22 கிமீ மைலேஜ் தரும் இந்த கியா காரையா டெஸ்ட் பண்ணுறாங்க? இதை யாருமே எதிர்பார்க்கலயே!
கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரின் சிஎன்ஜி வேரியண்ட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வரும் தகவல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இந்த காரை தற்போது அந்நிறுவனம் இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. இந்த ஸ்பை புகைப்படங்களும் தற்போது நமக்கு கிடைத்துள்ளன. இதன்படி கியா நிறுவனம் இந்த காரில் என்னென்ன அப்டேட்களை கொண்டு வரலாம்? தற்போது இருக்கும் கியா செல்டோஸ் காருக்கும், இதுக்கும் என்ன வித்தியாசங்கள் இருக்கிறது? என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் விற்பனை செய்யும் கார்களிலேயே சிறப்பான விற்பனையில் இருக்கும் கார் என்றால் அது இதுதான். கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையை எண்ணிக்கையை உயர்த்திப் பிடிப்பதற்கு இந்த கார் மிகப்பெரிய அளவில் உதவுகிறது.

கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரை சமீபத்தில் தான் அப்டேட் செய்து புதிய அம்சங்கள் மற்றும் புதிய இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் இந்திய சாலைகளில் கியா செல்டோஸ் கார் முற்றிலுமாக மூடப்பட்டு சோதனை செய்து செய்யப்பட்டு வரும் புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.
ஏற்கனவே கியா நிறுவனம் சமீபத்தில் தான் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இதில் சிஎன்ஜி வேரியன்டை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கலாம். இந்த காரை தான் அந்நிறுவனம் இந்திய சாதனைகளில் சோதனை செய்து வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினில் சிஎன்ஜி வேரியன்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிஎன்ஜி ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமைந்துள்ளது. இந்த இன்ஜின் 1.5 லிட்டர் இன்ஜினாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகமானால் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட முதல் சிஎன்ஜி கார் இதுவாக தான் இருக்கும்.
இது மட்டுமல்லாமல் தற்போது சிஎன்ஜி டேங்கில் இரண்டு டேங்க் கொண்ட வடிவமைப்பை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. டாடா நிறுவனம் ஏற்கனவே தனது சிஎன்ஜி கார்களில் இரண்டு டேங்க் கொண்ட செட்டப்பை அறிமுகப்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் டாடா நிறுவனத்தின் கார்களின் விற்பனையை அதிகரித்துள்ளது.

சிஎன்ஜி கார்களில் பூட் வசதி மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. பெரிய சிலிண்டர் இருப்பதால் அதிக பூட் இடத்தை இந்த சிலிண்டர் எடுத்துக் கொள்கிறது. இந்த பிரச்சினையை சமாளிக்க எடுப்பதற்காக தான் டூயல் சிலிண்டர் டெக்னாலஜியை கொண்டு வந்துள்ளார்கள். இதன் மூலம் பூட் பகுதியில் அதிக இடம் சிலிண்டருக்கு தேவைப்படாது. இதனால் பொருட்களை அதிகமாக எடுத்துச் செல்ல முடியும்.
இந்தியாவில் சமீப நாட்களாக சிஎன்ஜி கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போது ஹூண்டாய் குழுமமும் டூயல் சிலிண்டர் டெக்னாலஜி அறிமுகப்படுத்தும் பட்சத்தில் ஹூண்டாய் மற்றும் கியா பிராண்டில் உள்ள கார்களில் டூயல் சிலிண்டர் சிஎன்ஜி அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளன. கியா செல்டோல், கேரன்ஸ் மற்றும் கிரெக்டா ஆகிய கார்களில் இந்த செட்டப் பொருத்தப்பட அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.
சிஎன்ஜி தொழிற்நுட்பம் இந்த இன்ஜினில் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பவர் மற்றும் டார்க் சற்று குறைய வாய்ப்பிருக்கிறது. பெட்ரோல் எரிபொருளில் இயங்கும் அளவிற்கு பவர் சிஎன்ஜி-ல் இருக்காது. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடனும் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடனும் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளன.
தற்போது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட கியா செல்டோஸ் கார் 17.9 கிமீ மைலேஜை வழங்கி வருகிறது. இதில் சிஎன்ஜி வேரியன்ட் அறிமுகமானால் இந்த கார் 22 கிமீ வரை ஒரு கிலோ சிஎன்ஜிக்கு மைலேஜ் தரும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த காரின் அறிமுகத்தின் போது தான் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினில் சிஎன்ஜி செட்டப்பை வெற்றிகரமாக ம் சோதனை செய்து முடித்தால் இந்த செட்டப் கியா செல்டோஸ் மற்றும் ஹுண்டாய் கிரெக்டா ஆகிய கார்களில் இடம் பெற அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. இந்த கார்கள் எல்லாம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









