10 லட்ச ரூபா காருக்கு இந்தியர்கள் மத்தியில் குவியும் புக்கிங்.. வசியம் எதாச்சும் பண்ணியிருக்குமோ!!
இந்தியாவில் வாகன விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் கியா (Kia)-வும் ஒன்றாகும். இதுவே ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆகும். இந்த பிராண்டுடைய பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக செல்டோஸ் (Seltos) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும்.
இந்த கார் மாடலுக்கே இந்தியர்கள் மத்தியில் புக்கிங் மழை பொழிந்துக் கொண்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். இந்தியாவில் தற்போது எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு மிக மிக அமோகமான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு சான்றாக இருக்கும் ஒரு சில எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றே கியா செல்டோஸ் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதிக்கும் விதமாக விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் கார் மாடலே இதுவே ஆகும். இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கியா இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
செல்டோஸுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே அதன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அறிமுகம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே அரங்கேறியது. இந்த நிலையிலேயே இப்போதும் இந்த காருக்கு இப்போதும் புக்கிங் குவிந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புக்கிங் மழை இந்த காருக்கு கூரையை பிய்த்துக் கொண்டிருக்கின்றது என கூறும் அளவிற்கு புக்கிங் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போது வரை மட்டுமே ஒரு லட்சத்திற்கும் அதிகமான புக்கிங்கை அந்த கார் குவித்து இருக்கின்றது. குறிப்பாக, கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 7 மாதங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிக புக்கிங்கை செல்டோஸ் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாதம் ஒன்றிற்கு சராசரியாக 13,500 புக்கிங்குகளை இந்த கார் பெற்றுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இதன் உயர்நிலை தேர்வான எச்டிகே பிளஸ் வேரியண்டிற்கான புக்கிங் 80 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றது. உயர்நிலை தேர்விலேயே கியா நிறுவனம் அடாஸ் மற்றும் சன்ரூஃப் போன்ற பிரீமியம் மற்றும் நவீன அம்சங்கள் பலவற்றை வாரி வழங்கி இருக்கின்றது.
இதுபோன்று அதிக பிரீமியம், தொழில்நுட்பங்கள் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை செல்டோஸ் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே நல்ல விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. 7 மாதங்கள் ஆகியும் இந்த காருக்கு இப்போதும் டிமாண்ட் குறையாமல் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. கியா செல்டோஸ் இந்தியாவில் ரூ. 10.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை முதன் முதலில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே கியா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இப்போது வரை 6 லட்சம் யூனிட்டுகள் செல்டோஸ் கார்கள் கியா நிறுவனம் இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்திருக்கின்றது.
இந்த ஒட்டுமொத்த உற்பத்தியில் 75 சதவீதத்திற்கு அதிகமானவை இந்தியாவிலேயே விற்பனைச் செய்யப்பட்டு இருக்கின்றன. இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை வைத்து பார்க்கையில் வரும் நாட்களிலும் இந்த சதவீதம் இன்னும் பலமடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாகவே 2023ம் ஆண்டு உள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 1.04 யூனிட்டுகள் செல்டோஸ் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. பனோரமிக் சன்ரூஃப், புதிய பம்பர், பெரிய கிரில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட ஹெட்லைட் பகல் நேரத்தில் ஒளிரும் டே டைம் லைட் என ஏகப்பட்ட புதிய அம்சங்களுடனேயே புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, 10.25 அங்குல இணைப்பு வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவையும் ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸில் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், 17 வகையான தனித்துவமான வசதியை வழங்கும் அடாஸ் தொழில்நுட்பம், 15க்கும் மேற்பட்ட உயர்நிலை பாதுகாப்பை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் 32 வகையான இணைப்பு அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதில் வழங்கப்பட்டு இருக்கும் லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பத்தின் வாயிலாக அவசரகால ஆட்டோமேட்டிக் பிரேக்கிங், ஃபார்வார்டு கொலிசன் வார்னிங் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட் ஆகிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, கூடுதல் பாதுகாப்பை வழங்கும் விதமாக ஆறு ஏர் பேக்குகள், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்டவைக் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டிபிஎம்எஸ் மற்றும் மும்முனை சீட் பெல்ட் என எக்கசக்க அம்சங்கள் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா செல்டோஸ் கார் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற அம்சங்களை இந்த கார் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் அமோகமான வரவேற்பை செல்டோஸ் குவித்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனாலேயே சில முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் எஸ்யூவி ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் முழுக்க முழுக்க எஸ்யூவி கார் உற்பத்திக்கே மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. கியா தற்போது மாருதி, டாடா மற்றும் மஹிந்திரா என முன்னணி நிறுவனங்கள் பலவற்றிற்கு மிகப் பெரிய போட்டியாளனாக மாறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








