செல்டோஸ்-இல் புதிய நிற தேர்வு அறிமுகம்.. ஏற்கனவே விற்பனையில பட்டைய கிளப்பிட்டு இருக்கு.. இதுல இது வேறையா!!
கியா (Kia), நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் செல்டோஸ் (Seltos)-ம் ஒன்றாகும். இதுவே நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலும் ஆகும். ஆமாங்க, இந்த மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-Size SUV) காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான், இந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக செல்டோஸில் எக்ஸ்-லைன் (X-Line) எனும் பதிப்பை நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பதிப்பின் பக்கம் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டே இப்போது ஓர் புதிய நிற தேர்வை கியா சேர்த்திருக்கின்றது.
கருப்பு நிற தேர்வையே இதில் கியா அறிமுகம் செய்து உள்ளது. ஆரோரா பிளாக் பெர்ல் (Aurora Black Pearl) என்கிற பெயரிலேயே அந்த புதிய நிற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிறமே காரின் பெரும்பாலான பாகங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

கிரில், பம்பர் மற்றும் ரியர் வியூ மிர்ரர் என பலவற்றில் கருப்பு நிறத்தையே பார்க்க முடிகின்றது. இத்தகைய அலங்கரிப்பால் இந்த புதிய நிற தேர்வின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் கூடுதல் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. இந்த கவர்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக கான்ட்ராஸ்டான ஆரஞ்சு நிறம் ஸ்கிட் பிளேட்டுகள், டோர் கார்னிஷ் மற்றும் வீலின் மைய பகுதி மூடி ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதேபோல், இந்த புதிய நிற தேர்வின் உட்பக்கமும் அட்டகாசமான நிறங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றன. கருப்பு (Black) மற்றும் ஸ்பிளெண்டிட் சேஜ் கிரீன் (Splendid Sage Green) ஆகிய நிறங்ளாலேயே இதன் உட்பக்கம் அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. இதுமட்டுமில்லைங்க, செல்டோஸ் எக்ஸ்-லைன் பதிப்பில் 18 அங்குல பெரிய அளவிலான வீலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இத்தகைய தரமான சிறப்புகளுடனேயே புதிய கியா செல்டோஸ் எக்ஸ்-லன் கருப்பு நிற தேர்வு நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. கியா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான செல்டோஸில் இந்த வேலை பார்க்கப்பட்டு இருப்பது அதற்கு கிடைக்கும் டிமாண்டை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கியா நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து 5 ஆண்டுகளை நிறைவுச் செய்ய இருக்கின்றது. இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அந்த நிறுவனத்தின் ஜாக்பாட் சந்தோஷமாக கார் விற்பனை இருக்கின்றது. இதுவரை 10 லட்சம் கியா கார்கள் விற்பனையாகி இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் 5 லட்சம் யூனிட் வரை விற்பனையாகியிருப்பது செல்டோஸ் ஆகும். மேலும், இரண்டாவது இடத்தில் சொனெட்-ம், மூன்றாவது இடத்தில் கேரன்ஸ்-ம் இருக்கின்றன. நான்காவது இடத்தில் இவி6 இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் விலை உயர்ந்த தயாரிப்பு ஆகும். இது ஓர் எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கியா நிறுவனம் இப்போதைக்கு நான்கு கார் மாடல்களை மட்டுமே நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. விரைவில் இவற்றின் வரிசையில் கார்னிவல் (Carnival), இவி9 (EV9) மற்றும் கிளாவிஸ் (Clavis) உள்ளிட்ட கார் மாடல்களையும் கியா நிறுவனம் விற்பனைக்கு இணைக்க இருக்கின்றது.
இதில் இவி9 என்பது எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். உலக புகழ்பெற்ற இந்த கார் மாடல் பல்வேறு விருதுகளை வென்ற கார் மாடலாகவும் காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலையே விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, கியா. இத்துடன், ஆடம்பர கப்பல் போன்ற கார்னிவல் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவில் கிளாவிஸ்ஸையும் அது விற்பனைக்கு இணைக்க இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா செல்டோஸ்-இன் வழக்கமான பதிப்பைக் காட்டிலும் அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடிய மற்றும் அதிக கவர்ச்சியான ஓர் பதிப்பாகவே எக்ஸ்-லைன் இருக்கின்றது. இதில் புதிய நிற தேர்வு சேர்க்கப்பட்டு இருப்பது செஸ்டோஸ் கார் பிரியர்களை குஷியில் ஆழ்த்தக் கூடியதாக அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








