இந்த காரை மட்டும் வாங்கிடாதீங்க.. காருல இடம் இல்லனு பொய் சொல்ல முடியாது.. 2-3 குடும்பம் ஒன்னா போகலாம்!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கின்றது தென் கொரியாவைச் சேர்ந்த கியா. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு அந்-நிறுவனம் விரைவில் சில புதுமுக கார்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த நிலையிலேயே வருகின்ற அக்டோபர் மாதம் 3ஆம் தேதி அன்று, கியா நிறுவனம் இரண்டு புதிய கார்களை நாட்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக புதிய கார்களின் அறிமுக நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக அது முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அன்றைய தினத்தில் புதிய கார்னிவல் (Carnival) மற்றும் புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடலான இவி9 (EV9) ஆகிய கார் மாடல்களையே நாட்டில் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுதவிர, சில புதிய அனிவர்சரி எடிசன் (Anniversary Editions)-களும் அன்றைய நாளில் அறிமுகம் செய்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Kia to unveil new carnival and ev9 in india

இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருந்த ஓர் கார் மாடலே கார்னிவல் ஆகும். இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக கார் மாடலாகும். இந்த கார் மாடலையே தற்போது புதுப்பிக்கப்பட்ட நிலையில், அதாவது, புதிய லுக், பலதரப்பட்ட தொழில்நுட்ப மற்றும் சொகுசு அம்சங்களைத் தாங்கிய கார் மாடலாக கியா விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இதனுடனேயே இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக பார்க்கப்படும் இவி9 எலெக்ட்ரிக் கார் மாடலையும் அந்த நிறுவனம் நாட்டில் அறிமுகம் செய்து வைக்க இருக்கின்றது. இந்த இரண்டு கார் மாடல்களும் மிகப் பெரிய உருவம் கொண்ட மற்றும் அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடல்கள் ஆகும். மேலும், இவற்றை ஏற்கனவே கியா இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Kia ev9

கியா கார்னிவல்: இது ஓர் சொகுசு சொகுசு அம்சங்கள் நிறைந்த எம்பிவி (Luxury MPV) ரக கார் மாடல் ஆகும். சமீபத்திலேயே இதன் அப்டேட் வெர்ஷனை உலக சந்தையில் கியா விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவிலும் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் அது களமிறங்கியிருக்கின்றது.

இந்த சொகுசு எம்பிவி ரக காரை முழுமையாக கட்டப்பட்ட யூனிட் (CBU)-ஆகவே நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பின்னாளில், இதற்கு வரவேற்பு அதிகரிக்கும் பட்சத்தில் உற்பத்தி உள்ளூர் மயமாக்கப்படும் என தெரிகின்றது. இந்த சொகுசு எம்பிவி காருக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.

இதை உணர்ந்தே புதுப்பிக்கப்பட்ட கார்னிவலை விற்பனைக்குக் கொண்டு வருகின்றது, கியா. இப்போதைய நிலவரப்படி, உலக சந்தையில் இந்த கார் மாடல் மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 3.5 லிட்டர் வி6 பெட்ரோல், 1.6 லிட்டர் பெட்ரோல்-ஹைபிரிட் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே அவை ஆகும்.

இதில் எந்தெந்த எஞ்சின் தேர்வு இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பது இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து, 7, 9 மற்றும் 11 இருக்கைகள் தேர்விலேயே கியா கார்னிவல் எம்பிவி எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே ஒரு குடும்பம் மட்டுமல்ல இந்த காரில் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட மூன்று குடும்பம் கூட தாராளமாக பயணிக்க முடியும் என தெரிகின்றது. மேலும், காரில் இடம் இல்லை என்றும் சொல்ல முடியாது.

கியா இவி9: கியா கார்னிவல் எம்பிவி கார் மாடலைப் போலவே அதிக இருக்கைகள் மற்றும் பிரமாண்ட உருவம் கொண்ட கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. ஆனால், இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். மிகுந்த கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களை தாங்கிய வாகனமாகவும் இது காட்சிளிக்கின்றது.

இதன் காரணத்தினாலேயே உலகின் உயரிய விருதுகள் பலவற்றை இந்த கார் வாங்கிக் குவித்திருக்கின்றது. அந்தவகையில், சமீபத்தில் நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு நிறுவனம் (Insurance Institute for Highway Safety), 'டாப் சேஃப்டி பிக்' (Top Safety Pick) எனும் விருதை இவி9 எலெக்ட்ரிக் காருக்கு வழங்கியது.

அதாவது, மிக அதிக பாதுகாப்பு தரம் வாய்ந்த கார் என்கிற நற்சான்றை இந்த கார் பெற்றநிலையிலேயே இந்த உயரிய விருது அக்காருக்கு வழங்கப்பட்டது. இதுமட்டுமில்லைங்க ஆண்டின் மிக சிறந்த கார் (World Car Of The Year), ஜெர்மனி நாட்டின் சொகுசு கார் விருது (Luxury Category in German Car of the Year 2024 Awards) உள்ளிட்ட பலதரப்பட்ட அவார்ட்களை இந்த கார் வென்று குவித்திருக்கின்றது.

இத்தகைய ஓர் கார் மாடலேயே இந்தியர்களுக்காக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, கியா. இது ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். ஆறு மற்றும் ஏழு பேர் வரை இந்த காரில் அமர்ந்து பயணிக்க முடியும். எனவே இரண்டு குடும்பம்கூட இந்த காரில் அமர்ந்து பயணிக்க முடியும்.

இதுதவிர, இன்னும் வியக்க வைக்கும் வசதிகள் பலவற்றை இந்த கார் தாங்கியிருக்கும் என கூறப்படுகின்றது. அந்வகையில், டிவி போன்ற பெரிய திரைகள், பன்முக ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், லெவல் 2 அடாஸ் அம்சம், ஆர்ம் ரெஸ்ட், பெரிய சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களே இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது. மேலும் ஓர் முழு சார்ஜில் இந்த காரில் 400 கிமீ முதல் 500 கிமீ தூரம் வரையில் பயணிக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே லக்சூரி அம்சங்களை அதிகம் விரும்பும் இந்தியர்களுக்காக கியா இவி9 மற்றும் கார்னிவல் கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரும் பணயில் களமிறங்கி இருக்கின்றது. இவற்றிற்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2024, 12:06 [IST]
English summary
Kia set to launch new carnival and ev9 in india on october 3 2024 here is more details
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+