வெறும் 18 ஆயிரம் ரூபாய் இருந்தாலே இந்த காரை வாங்கீரலாமா! சண்முகம் வண்டிய நேரா ஷோரூமுக்கு விட்றா!

இந்தியாவில் கார்களை தற்போது சந்தா முறையில் (Car Subscription) வாங்கி கொள்ளும் திட்டம் வெகு வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இந்த முறையில் நீங்கள் காரை வாங்குவதாக இருந்தால், முன்பணம் கட்ட வேண்டியதில்லை. காரை சொந்தமாக வாங்குவதற்கு 'லோன்' எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இன்சூரன்ஸ், பராமரிப்பு மற்றும் ரிப்பேர் ஆகிய விஷயங்களுக்கும் கூட தனியாக பணத்தை செலவு செய்ய தேவையில்லை. இவை அனைத்தும் நீங்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்தும் சந்தா தொகையிலேயே அடங்கி விடும். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்தபின் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமே காரை ஒப்படைத்து விட வேண்டும்.

சொந்தமாக ஒரு காரை வாங்குவதை காட்டிலும், மாத சந்தா முறையில் வாங்கி காரை பயன்படுத்துவதன் மூலம் நிறைய நன்மைகள் உள்ளன. இதன் காரணமாக கார்களை மாத சந்தா முறையில் வாங்குவதற்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு, மாத சந்தா திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

Kia Sonet

இதில், கியா (Kia) நிறுவனமும் ஒன்றாகும். கியா நிறுவனம் கியா லீஸ் (Kia Lease) என்ற பெயரில் ஏற்கனவே மாத சந்தா திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தில், 24-60 மாதங்கள் வரை பயன்படுத்துபவர்களால் மட்டுமே கார்களை மாத சந்தா முறையில் வாங்க முடியும்.

குறைந்தபட்சம் 24 மாதங்கள் என்பது, 2 வருடங்கள் ஆகும். அதிகபட்சம் 60 மாதங்கள் என்பது, 5 வருடங்கள் ஆகும். எனவே இந்த திட்டம் நீண்ட காலம் காரை வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே ஏற்றதாக கருதப்படுகிறது. அதாவது குறுகிய காலத்திற்கு மட்டும் பயன்படுத்தினால் போதும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றதல்ல.

Kia Seltos

இது ஒரு குறையாக இருந்த நிலையில், அதை நிவர்த்தி செய்யும் வகையில், தற்போது அதிரடியான புதிய திட்டம் ஒன்றை கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு 'கியா சப்ஸ்க்ரைப்' (Kia Subscribe) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறுகிய காலம் மட்டும் காரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றதாகும்.

ஏனெனில் 12-36 மாதங்கள் வரை பயன்படுத்தும் எண்ணத்தில் இருப்பவர்கள், இந்த புதிய திட்டத்தின் மூலம் காரை பெற்று கொள்ளலாம். அதாவது குறைந்தபட்சம் 1 வருடமும், அதிகபட்சம் 3 வருடங்கள் வரையும் காரை பயன்படுத்த கூடியவர்கள், இந்த புதிய திட்டத்தை தேர்வு செய்யலாம்.

கியா சொனெட் (Kia Sonet), கியா செல்டோஸ் (Kia Seltos), கியா கேரன்ஸ் (Kia Carens) மற்றும் கியா இவி6 (Kia EV6) ஆகிய 4 கார்களை, இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் வாங்கி கொள்ள முடியும். சென்னை, பெங்களூர், ஐதராபாத், மும்பை, புனே, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், ஜெய்ப்பூர், நொய்டா, காஸியாபாத், ஃபரிதாபாத், குர்கான் மற்றும் இந்தூர் ஆகிய 14 நகரங்களில் இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், கியா சொனெட் காரை வெறும் 17,999 ரூபாய் என்ற மாத சந்தாவில் பெற்று கொள்ள முடியும். அதே நேரத்தில் கியா செல்டோஸ் காருக்கு 23,999 ரூபாய் என்ற மாத சந்தாவும், கியா கேரன்ஸ் காருக்கு 24,999 ரூபாய் என்ற மாத சந்தாவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பதிலேயே அதிகபட்சமாக கியா இவி6 காருக்கான மாத சந்தா 1.29 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறுகிய காலம் ஒரு காரை பயன்படுத்தியாக வேண்டிய தேவையில் உள்ளவர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். அதேபோல் அடிக்கடி காரை மாற்றி, பல்வேறு புதிய கார்களை ஓட்ட வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கும் கூட இது ஏற்றதாகவே இருக்கும் என்பது எங்களுடைய கருத்து.

More from DriveSpark

Article Published On: Saturday, August 31, 2024, 19:07 [IST]
English summary
Kia short term lease plans for sonet seltos carens ev6 all you need to know
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+