எதோ பெட்டி கடைல கடலை மிட்டாய் வாங்கற மாதிரி வாங்கீட்டு இருக்காங்க! இவ்ளோ சூப்பரான காரோட விலை இவ்ளோதானா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4 Metre Compact SUV) ரகத்தை சேர்ந்த கியா சொனெட் கார், விற்பனையில் தற்போது பிரம்மாண்டமான மைல்கல் (Sales Milestone) ஒன்றை கடந்துள்ளது.

4 லட்சம் கியா சொனெட் கார்கள் விற்பனை என்பதுதான் அந்த பிரம்மாண்டமான மைல்கல். கியா சொனெட் கார் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது சந்தையில் களமிறக்கப்பட்டு சுமார் 44 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், அதற்குள்ளாக 4 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கியா சொனெட் கார் கடந்துள்ளது. இது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் இது ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை ஆகும். அதாவது இந்தியாவின் உள்நாட்டு சந்தை + ஏற்றுமதி ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கைதான் இந்த 4 லட்சம் என்ற பிரம்மாண்டமான எண்.

Kia Sonet

அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் 3,17,754 கியா சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து 85,814 கியா சொனெட் கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் 4,03,568 கியா சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கியா நிறுவனம் சொனெட் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ததில் இருந்தே, சீரான இடைவெளிகளில் பல்வேறு புதிய அம்சங்களுடன் தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டே வருகிறது. இந்த வரிசையில் கியா சொனெட் காரின் அப்டேட் செய்யப்பட்ட 2024 மாடல், கடந்த ஜனவரி மாதம்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

Kia Sonet SUV

கியா சொனெட் காரின் இந்த புதிய மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.2 லிட்டர் பெட்ரோல் (83 பிஎஸ்/115 என்எம்), 1.0 லிட்டர் பெட்ரோல் (120 பிஎஸ்/172 என்எம்) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (116 பிஎஸ்/250 என்எம்) ஆகியவை ஆகும். டிரான்ஸ்மிஷனை (Transmission) பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி என கியா சொனெட் காரில் மொத்தம் 5 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) கொடுக்கப்பட்டுள்ளன.

கியா கார்களில் பொதுவாக அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமிருக்காது. இதற்கு 2024 கியா சொனெட் காரும் விதிவிலக்கு அல்ல. 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் மற்றும் பாஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இந்த காரின் முக்கியமான வசதிகள் ஆகும்.

இதுதவிர அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), 2024 கியா சொனெட் காரில் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 15.75 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற கார்களுக்கு, கியா சொனெட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2024, 14:02 [IST]
English summary
Kia sonet 4 lakh sales milestone all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+