மிடில்-கிளாஸ் மக்களின் நம்பிக்கைக்குரிய கார் - கியாவில் இந்த கார் மட்டும் தனி ரகம்!!

கியா (Kia), உலகளவில் பிரபலமான தென்கொரிய கார் நிறுவனம். இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் செல்டோஸ் மூலமாக நுழைந்த கியா நிறுவனம் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சொனெட் என்கிற கேம் சேஞ்சர் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. கடந்த செப்டம்பர் 18ஆம் தேதியோடு கியா சொனெட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு 4 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இந்திய சந்தையில் சொனெட் கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை கியா நிறுவனம் கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்திய சந்தையில் கடந்த காலங்களில் இருந்து பல்வேறு கார் நிறுவனங்கள் நுழைந்துள்ளன. ஆனால், அவற்றுள் நம் நாட்டு மார்க்கெட்டில் வெற்றி பெற்றவை என்று பார்த்தால் மிகவும் குறைவுதான். அந்த குறைவான கார் நிறுவனங்களுள் ஒன்றுதான் கியா ஆகும். பல வெளிநாடுகளில் கார் விற்பனையில் முன்னணியில் இருக்கும் கியா நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் செல்டோஸ் கார் மூலமாக நுழைந்தது.

kia sonet cars sales milestone

செல்டோஸ், கியா நிறுவனத்தின் வெற்றிக்கரமான கார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான், இந்தியாவில் முதல் காராக செல்டோஸை கியா களமிறக்கியது. செல்டோஸை தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் 2 கார்களை கியா அறிமுகம் செய்தது. அவற்றுள் ஒன்றுதான் சொனெட் ஆகும். செல்டோஸுக்கு இணையாக கியா நிறுவனத்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்த கார் சொனெட் எனலாம்.

இன்னும் சொல்ல போனால், சமீப மாதங்களாக செல்டோஸை காட்டிலும் சொனெட் கார்கள் அதிகமாக மக்களால் வாங்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், சொனெட் காரின் காம்பெக்ட்டான உடலமைப்பு மற்றும் குறைவான விலை ஆகும். கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்தியாவில் இருந்து மொத்தமாக 4 லட்சத்து 49,812 சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

kia sonet cars sales milestone

இதில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை 3 லட்சத்து 57,743 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 92,069 ஆகும். அதாவது, கடந்த 4 வருடங்களில் 92,069 கியா சொனெட் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்து 49,812 என்பது 2020 செப்டம்பர் முதல் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் வரையில் விற்பனை செய்யப்பட்ட சொனெட் கார்களின் எண்ணிக்கை ஆகும்.

நடப்பு 2024 செப்டம்பர் மாத விற்பனை எண்ணிக்கையும் சேர்த்தால், நிச்சயமாக சொனெட் கார்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது 4.5 லட்சத்தை கடந்துவிடும். 2020 செப்டம்பர் - 2021 மார்ச் மாதம் வரையில் 63,717 சொனெட் கார்களும், 2021 ஏப்ரல் - 2022 மார்ச் வரையில் 73,864 சொனெட் கார்களும், 2022 ஏப்ரல் - 2023 மார்ச் வரையில் 94,096 சொனெட் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

kia sonet cars sales milestone

இருப்பினும், 2023 ஏப்ரல் - 2024 மார்ச் வரையில் சொனெட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 81,384ஆக சற்று குறைந்துள்ளது. 2024 ஏப்ரலில் இருந்து ஆகஸ்ட் வரையில் கடந்த 5 மாத காலக்கட்டத்தில் 44,582 சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2025 மார்ச் மாதம் முடிவதற்கு உள்ளாக இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட கியா காரகளில் சொனெட்டின் பங்களிப்பு மட்டும் 43.04% ஆகும். அதேநேரம், கடந்த 4 வருடங்களில் கியா இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார்கள் விற்பனையில் சொனெட்டின் பங்களிப்பு 37% ஆகும். சொனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் கார்களின் மூலமாக இந்தியாவின் 5வது மிக பெரிய கார் நிறுவனமாக கியா விளங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒட்டுமொத்த கார்களில் கியா கார்களின் பங்கு தற்சமயம் 9.40% ஆக உள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 10இல் ஒருவர் நிச்சயமாக கியா கார்களுள் ஒன்றை வாங்குகிறார். இந்திய கார்கள் மார்க்கெட்டில் கியா இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு சொனெட் காரும் நிச்சயமாக ஒரு காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, September 22, 2024, 23:16 [IST]
English summary
Kia sonet cars sales crossed 4 5 lakhs in india after 4 years
மேலும்... #kia #kia sonet #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X