இந்த ரேட்க்கு இப்டி ஒரு காரா! எதோ பைக் வாங்கற மாதிரி எல்லாரும் வாங்கீட்டு இருக்காங்க! ஷோரூம்ல கூட்டம் அள்ளுது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கியா சொனெட் காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி கியா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4,120 சொனெட் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை, நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10,073 ஆக உயர்ந்துள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி ஆகும்.

ஏனெனில் கியா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 5,953 சொனெட் கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. சதவீத அடிப்படையில் பார்த்தால், இது 144 சதவீத வளர்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Kia Sonet

கியா சொனெட் காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆகியவை ஆகும். இன்ஜின் ஆப்ஷன்களை போல், இந்த காரில், கியர் பாக்ஸ் ஆப்ஷன்களின் எண்ணிக்கையும் அதிகம்.

5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி என மொத்தம் 5 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்படுகின்றன. எனவே பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளையும் கியா சொனெட் கார் பூர்த்தி செய்ய கூடியதாக திகழ்கிறது.

Kia Sonet Top View

வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, அடாஸ் (ADAS - Advanced driver-assistance systems) ஆகியவை எல்லாம் இந்த காரின் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன.

இவை எல்லாம் தவிர, 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் ஆகிய வசதிகளும், கியா சொனெட் காரில் கொடுக்கப்படுகின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுடன், கியா சொனெட் போட்டியிட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடப்பு 2024ம் ஆண்டின் தொடக்கத்தில், சொனெட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை, கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, கியா சொனெட் காரின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பதற்கு உதவி செய்துள்ளது என்பது எங்களுடைய கருத்து.

More from DriveSpark

Article Published On: Sunday, September 29, 2024, 23:03 [IST]
English summary
Kia sonet sales report august 2024 144 per cent growth
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+