அவ்ளோ பெரிய நிறுவனத்தை ஒரு கார் தனி ஆளா தூக்கி நிறுத்தீருச்சு! இந்த விலைக்கு குடுத்தா யார்தான் வாங்காம இருப்பா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) உள்ளிட்ட கார்களுடன், கியா சொனெட் போட்டியிட்டு வருகிறது. இது இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கை வழங்கி கொண்டுள்ள கார் ஆகும்.

நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம், கியா நிறுவனம் இந்திய சந்தையில் 17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20,022 ஆக இருந்த கியா கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23,523 ஆக உயர்ந்துள்ளது.

Kia Sonet

கியா நிறுவனத்தின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு, சொனெட் கார்தான் மிக முக்கியமான காரணம் என்றால் மிகை அல்ல. நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கியா நிறுவனம் விற்பனை செய்த 23,523 கார்களில், சொனெட் கார்களின் எண்ணிக்கை மட்டும் 10,335 ஆகும்.

இதன் மூலம் நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கியா கார் என்ற பெருமையை சொனெட் பெற்றுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா சொனெட் காரின் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாயாக உள்ளது.

Kia Sonet Top View

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 15.77 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். கியா சொனெட் காரில், கனெக்டட் கார் தொழில்நுட்பம், சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், 7 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன.

இதுதவிர 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், லெவல் 1 அடாஸ், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட வசதிகளும், கியா சொனெட் காரில் வழங்கப்படுகின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை 1.5 லிட்டர் டர்போ டீசல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஆகியவை ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி உள்ளிட்ட கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

இருப்பதிலேயே அதிகபட்சமாக கியா சொனெட் காரின் 1.5 லிட்டர் டர்போ டீசல் / 6 ஸ்பீடு மேனுவல் வேரியண்ட்கள், ஒரு லிட்டருக்கு 22.30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மைலேஜ் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இந்த இன்ஜின் / கியர் பாக்ஸ் காம்பினேஷன் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சொனெட் காரில் சக்தி வாய்ந்த இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் அதிநவீன வசதிகளுக்கும் பஞ்சமில்லை. மேலும் விலை நிர்ணயமும் சரியாகவே செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும். எனவேதான் விற்பனையில் சாதித்து கொண்டுள்ளது என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 6, 2024, 22:40 [IST]
English summary
Kia sonet sales report september 2024 price engine features mileage
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+