ஐய்யய்யோ அந்த பிரிவுலையா இந்த புதுமுக காரை களமிறக்க போறாங்க.. அங்க பொழைக்கிறதே ரொம்ப கஷ்டமாச்சே!

இந்தியாவின் ஹை-டிமாண்ட் (நல்ல வரவேற்பு) கொண்ட வாகன பிரிவாக காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) கார் பிரிவு இருக்கின்றது. இந்த பிரிவின் மிகப் பெரிய ஜாம்பவான் கார் மாடல்களாக டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3X0) உள்ளிட்டவை இருக்கின்றன. இதுபோல இன்னும் சில கார் மாடல்களும் இந்த களத்தில் மிகப் பெரிய போட்டியாளன்களாக இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே இந்த கார் மாடல்கள் அனைத்திற்கும் போட்டியளிக்கும் விதமாக கியா நிறுவனம் ஓர் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சிரோஸ் (Syros) கார் மாடலே அது ஆகும். இந்த காம்பேக்ட் எஸ்யூவி காரின் அறிமுக நாள் பற்றிய விபரமே தற்போது வெளியாகி உள்ளது.

Kia syros launch date revealed

வருகின்ற டிசம்பர் 19 ஆம் தேதி அன்றே இந்த கார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த கார் மாடல் அதன் போட்டியாளர்களைச் சமாளிக்குமா என்கிற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழும்பி இருக்கின்றது.

குறிப்பாக, டாடா நெக்ஸான் மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்ற அதிகம் சேலாகும் கார்களின் தாக்கத்தை இது தாங்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது. இருப்பினும், இந்த காரில் இடம் பெற இருப்பதாகக் கூறப்படும் அம்சங்கள் அதன் போட்டியாளர்களை சிரோஸ் அசால்டாக கையாள உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

மிக முக்கியமாக இந்த காரை ஓர் டால் பாய் வாகனமாகவே கியா தயார் செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த கார்குறித்து வெளியிடப்பட்ட டீசர் படங்கள் அமைந்திருக்கின்றது. அதாவது, மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலை போல உயரமான தோற்றம் கொண்ட காராக சிரோஸ் இருக்கும்.

ஆனால், இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடல் ஆகும். இந்த காரில் சந்தையை வளைத்து போடும் விதமாக பல்வேறு அம்சங்களை கியா வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், இரண்டு 10.25 அங்குல திரைகள் இந்த காரில் இடம் பெற இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதில் ஒன்று தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலாகவும் செயல்படும். இத்துடன், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன், பயணிகளைக் கவரும் அம்சங்களான வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் அடாஸ் அம்சங்களும் இந்த காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுதவிர, ஆறு ஏர் பேக்குகள், இஎஸ்சி, டிராக்சன் கன்ட்ரோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, அட்ஜெஸ்டபிள் ஹெட்ரெஸ்ட், வயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்களும் சிரோஸ் காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.

இந்த அம்சங்களே புதிய கியா சிரோஸ் கார் மாடலை காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவின் ஆக சிறந்த வீரராக மாற்ற இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் சொனெட் எஸ்யூவி-க்கு மேல் இடத்திலேயும், செல்டோஸ் எஸ்யூவிக்கு கீழ் இடத்திலும் இந்த கார் நிலை நிறுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த கார் மாடலுக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலை உணர்ந்தே தற்போது காம்பேக்ட் எஸ்யூவி பிரிவை மையப்படுத்தி சிரோஸ் காரை கியா விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்த விபரங்கள் டிசம்பர் 19 ஆம் தேதி அன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 28, 2024, 20:39 [IST]
English summary
Kia syros compact suv set to debut in india on december 19 with modern features
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+