சந்தோஷம்யா.. டீசல் எஞ்சினிலும் இந்த கார் விற்பனைக்கு வருதா! மாருதி, டாடாவ தூக்கி சாப்பிட இதவிட வேற என்ன வேணும்

இந்தியாவின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக கியா (Kia) நிறுவனம் மாறியிருக்கின்றது. சொல்லப்போனால் டாப் 5 கார் பிராண்டுகளில் ஒன்றாக கியா உள்ளது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியிலேயே அந்த நிறுவனம் தற்போது களமிறங்கி இருக்கின்றது. அதாவது, புதுமுக வாகனங்களின் வாயிலாகவே முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியிலேயே கியா ஈடுபட்டு வருகின்றது. ஏற்கனவே, பிராண்டின்கீழ் செல்டோஸ் (Seltos), சொனெட் (Sonet), கேரன்ஸ் (Carens) மற்றும் கார்னிவல் (Carnival) என பலதரப்பட்ட கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இவற்றின் வரிசையிலேயே விரைவில் ஓர் புதுமுக கார் மாடலை இணைக்க இருக்கின்றது. சிரோஸ் (Syros) எனும் கார் மாடலையே அது விரைவில் விற்பனைக்கு களமிறக்க இருக்கின்றது. இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவையே இந்த கார் மாடல் அலங்கரிக்க இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

Kia syros multiple engine options

ஏற்கனவே போட்டி மிகுந்த பிரிவாக காம்பேக்ட் எஸ்யூவி கார் (Compact SUV Car) பிரிவு காட்சியளிக்கின்றது. இந்த பிரிவிலேயே புதிய போட்டியாளராக சிரோஸ் தன்னுடைய கால் தடத்தைப் பதிக்க இருக்கின்றது. மேலும், இது மிக சிறந்த போட்டியாளராக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக பல முக்கிய வசதிகளைத் தாங்கிய காராக சிரோஸ் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், எஞ்சின் விஷயத்திலும் நிறைய ஆப்ஷன்கள் இந்த காரில் வழங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. மிக முக்கியமாக இந்தியர்கள் பலர் விரும்பும் டீசல் எஞ்சின் ஆப்ஷனும் சிரோஸ்-இல் வழங்கப்பட இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் இரண்டு விதமான பெட்ரோல் ஆப்ஷன்களும் வழங்கப்பட இருக்கின்றது. ஒன்று வழக்கமான பெட்ரோல் மோட்டாராகவும், மற்றொன்று டர்போ பெட்ரோல் எஞ்சினாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி, 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே சிரோஸ் கார் மாடலில் வழங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

ஆனால், இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இப்போதைக்கு இந்த கார் மாடலின் டீசர் படத்தை மட்டுமே கியா வெளியிட்டு இருக்கின்றது. அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கும் நிலையிலேயே அதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு டீசர் படங்கள் வெளியிடப்பட்ட வண்ணம் உள்ளது.

புதிய சிரோஸ் விற்பனைக்கு வரும்பட்சத்தில் அந்த கார் செல்டோஸ் மற்றும் சொனெட் இந்த இரண்டு கார்களுக்கும் இடையில் நிலை நிறுத்தப்படும். மேலும், இதன் உருவம் மாருதி சுஸுகியின் வேகன்ஆர் கார் மாடலை ஒத்ததாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, இந்தியாவின் மற்றுமொரு 'டால் பாய்' -ஆக இந்த காரின் வருகை அமைய இருக்கின்றது.

வேகன்ஆர் போல டால் பாயாக இந்த கார் இருக்கப் போவதால் இதில் அதிகபட்ச லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம். அதாவது, மிக அதிக இட வசதிக் கொண்ட காராக கியாவின் சிரோஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இந்த காருக்கு இட வசதியை அதிகம் எதிர்பார்ப்போர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தங்கள் பக்கம் ஈர்க்கும் பொருட்டே அதிக இட வசதிக் கொண்ட டால் பாய் கார் மாடலாக சிரோஸ் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, November 22, 2024, 5:00 [IST]
English summary
Kia syros expected to launch soon with diverse engine options and modern features
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+