இன்னும் 9 நாட்களில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மற்றுமொரு டால் பாய் உருவம் கொண்ட கார்.. வேட்டையன் ரெடி!!
கியா (Kia) நிறுவனம் வருகின்ற 19 ஆம் தேதி அன்று புதுமுக கார் மாடல் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. சிரோஸ் (Syros) எனும் கார் மாடலையே அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த பிரிவிற்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த பிரிவின் மிக சிறந்த போட்டியாளன்களாக டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) உள்ளிட்ட கார் மாடல்கள் உள்ளன.
இவற்றிற்கு போட்டியளிக்கும் நோக்கிலேயே சிரோஸ் எஸ்யூவி கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, கியா. இந்த காரின் அறிமுகத்திற்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ளன. இந்த நிலையிலேயே அதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது, கியா நிறுவனம்.

இதன் அடிப்படையில், சிரோஸ் காரின் டீசர் படங்களை கியா தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. சமீப சில காலமாகவே இந்த பணியில் கியா தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. முக்கியமாக, வெளிப்புறத் தோற்றத்தையும், அதன் ஸ்டைலையும் வெளிக்காட்டுகின்ற வகையிலான டீசர் படங்களை மட்டுமே அது வெளியிட்டு வந்த நிலையில், தற்போது காரில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்களை விவரிக்கின்ற மாதிரியான படங்களையும் வெளியிட தொடங்கி இருக்கின்றது.
இன்று வெளியிடப்பட்ட டீசர் வீடியோவில் காரின் உட்பக்கத்தை வெளிக்காட்டி இருக்கின்றது, கியா. இந்த வீடியோவின் வாயிலாக கியா சிரோஸ் கார் மாடலின் உட்பக்கத்தில் என்ன மாதிரியான புதிய அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது. முக்கியமாக இதன் உள்பக்கம் சமீபத்தில் விற்பனைக்கு வந்த எக்ஸ்டர் காரை பிரதிபலிக்கும் வகையில் இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
லெதர் போர்த்தப்பட்ட இருக்கை, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பவர்டு மற்றும் வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டம் மற்றும் பின் பக்கத்தில் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இடம் பெற இருப்பதாகவே இந்த டீசர் வீடியோ தெரிவிக்கின்றது.
இதுதவிர, அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (Advanced Driver Assistance System) அம்சமும் இந்த காரில் இடம் பெற இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. எனவே இந்த அம்சங்களுக்காகவே கியா சிரோஸ் இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவிலான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, இப்போது காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களாக இருக்கும் டாடா நெக்ஸான் மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவிற்கு கடுமையான போட்டியாளனாக இது விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரில் கியா நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு விதமான எஞ்சின் தேர்வுகளும் வழங்கப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதும் டீசல் எஞ்சின் கொண்ட கார் மாடல்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலை உணர்ந்தே கியா நிறுவனம் சிரோஸ் கார் மாடலில் டீசல் ஆப்ஷனை வழங்க இருக்கின்றது. மேலும், இதன் லுக் மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலை போல டால் பாயாக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், இட வசதியில் எந்த சிக்கலும் ஏற்படாது என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








