இவ்ளோ கம்மியான விலையில் கியா காரா! எல்லாரும் கண்ண மூடிட்டு வாங்க போறாங்க! அதிர்ச்சியில் டாடா, ஹூண்டாய்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா க்ளாவிஸ் (Kia Clavis). டாடா பன்ச் (Tata Punch) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) ஆகிய எஸ்யூவி (SUV) கார்களுக்கு போட்டியாக, கியா க்ளாவிஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அனேகமாக நடப்பு 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம், கியா க்ளாவிஸ் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் கியா க்ளாவிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன்னதாக கியா க்ளாவிஸ் காரை பற்றிய புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த கார் க்ளாவிஸ் என்ற பெயரில் வரப்போவதில்லை என்பதுதான் அந்த தகவல். அதற்கு பதிலாக கியா சைரோஸ் (Kia Syros) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் சைரோஸ் என்ற பெயரை கியா நிறுவனம் தற்போது பதிவு செய்திருப்பதுதான் இதற்கு காரணம். இந்தியாவில் கியா நிறுவனத்தின் எம்பிவி (MPV) ரக கார்களின் பெயர்கள் 'C' என்ற எழுத்தில் தொடங்குகின்றன. கேரன்ஸ் (Carens) மற்றும் கார்னிவல் (Carnival) ஆகிய கார்கள் இதற்கு உதாரணம்.
மறுபக்கம் எஸ்யூவி ரக கார்களின் பெயர்கள் 'S' என்ற எழுத்தில் தொடங்குகின்றன. செல்டோஸ் (Seltos) மற்றும் சொனெட் (Sonet) ஆகிய கார்கள் இதற்கு உதாரணம். புதிதாக வரவிருப்பது, எஸ்யூவி ரக கார் ஆகும். அதன் முந்தைய பெயரான க்ளாவிஸ் என்பது 'C' என்ற எழுத்தில் தொடங்குகிறது. எனவே 'S' என்ற எழுத்தில் தொடங்கும்படி, சைரோஸ் என்ற பெயரை கியா சூட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கியா சைரோஸ் கார் முதலில் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உடன் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். ஆனால் 2025ம் ஆண்டின் மைய பகுதியில், கியா சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் நேரடி போட்டி மாடலான டாடா பன்ச் காரில், ஐசி இன்ஜின் உடன், எலெக்ட்ரிக் ஆப்ஷனும் இருப்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.
மறுபக்கம் மற்றொரு போட்டி மாடலான ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் தற்போதைய நிலையில் ஐசி இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. எனினும் எதிர்காலத்தில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். எனவே இந்த 2 கார்களுக்கும் கடுமையான போட்டியை வழங்கும் வகையில், கியா சைரோஸ் காரிலும், எலெக்ட்ரிக் வெர்ஷன் வரவுள்ளது.
வசதிகளை பொறுத்தவரையில், பனரோமிக் சன்ரூஃப், அடாஸ், 360 டிகிரி கேமரா, வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்றவை கியா சைரோஸ் காரின் முக்கிய அம்சங்களாக இருக்கலாம். அத்துடன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளையும் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சைரோஸ் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் அல்லது 7 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், நிச்சயமாக டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் கார்களுக்கு, கியா சைரோஸ் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications








