வேற்று கிரக வாசிகள் வாகனம் போல் மிதக்கும் கார்! வெறும் 8 லட்ச ரூபாய்க்கு விக்க போறாங்களா! தேதியை நோட் பண்ணுங்க
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). வரும் டிசம்பர் 19ம் தேதி (December 19) கியா சைரோஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சைரோஸ் காரின் டீசர்களை கியா நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட தொடங்கியுள்ளது. இந்த வரிசையில் புத்தம் புதிய கியா சைரோஸ் காரின் புதிய டீசர் வீடியோ (Teaser Video) ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், விண்கல் ஒன்று வானத்தை பிளந்து கொண்டு வந்து, காராக மாறி, பூமியில் மிதப்பதை போல் காட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்திற்கான வாகனம் என்ற அர்த்தத்தில் கியா நிறுவனம் இந்த டீசரை உருவாக்கியிருக்கலாம் என தெரிகிறது. இந்த வித்தியாசமான டீசர் வீடியோ, கியா சைரோஸ் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது.

கியா சைரோஸ் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். இதில் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 118 பிஹெச்பி மற்றும் 172 என்எம் டார்க் ஆக இருக்கலாம்.
இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மறுபக்கம் டீசல் இன்ஜினின் பவர் அவுட்புட் 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் ஆக இருக்கலாம். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

அதே நேரத்தில் அடாஸ் (ADAS), முன் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், பனரோமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 360 டிகிரி கேமரா, ரியர் ஏசி வெண்ட்கள் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகள் (Features) எல்லாம் கியா சைரோஸ் காரில் வழங்கப்படலாம்.
அத்துடன் ட்யூயல் டிஸ்ப்ளே சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதில் ஒரு டிஸ்ப்ளே டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக செயல்படும். மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். அத்துடன் ட்யூயல் டோன் அப்ஹோல்ஸ்ட்ரியும் கியா சைரோஸ் காரில் இடம்பெறலாம்.
வெளிப்புற டிசைனை (Design) பொறுத்தவரையில் முன் பகுதியில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பின் பகுதியில் 'L' வடிவ எல்இடி டெயில்லைட்கள், ரூஃப் ரெயில், சுறா துடுப்பு ஆன்டெனா, ஸ்டாப் லேம்ப் மற்றும் ஸ்பாய்லர் போன்ற அம்சங்களை எல்லாம் கியா சைரோஸ் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.
இந்திய சந்தையில் கியா சொனெட் (Kia Sonet) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்களுக்கு இடையே கியா சைரோஸ் நிலைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) ஆகிய கார்களுடன் கியா சைரோஸ் போட்டியிடும்.
அத்துடன் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகிய கார்களுக்கும் கியா சைரோஸ் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் கியா சைரோஸ் காரின் ஆரம்ப விலை 8-8.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். கியா சைரோஸ் காரை பற்றிய முழுமையான தகவல்கள் வரும் டிசம்பர் 19ம் தேதி நமக்கு தெரிய வந்துவிடும்.


Click it and Unblock the Notifications








