இந்த வீடியோ மட்டும் வராம போயிருந்தா விஷயம் தெரிஞ்சிருக்காது! ஷோரூம்ல இப்பவே துண்ட போட்டு வெச்சர வேண்டியதுதான்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). இது காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். கியா நிறுவனத்தின் கார்கள் லைன்-அப்பில் கியா சொனெட் (Kia Sonet) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்களுக்கு இடையே, கியா சைரோஸ் காம்பேக்ட் எஸ்யூவி நிலைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கியா சொனெட் மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு இடைப்பட்ட ரகத்தில், கியா சைரோஸ் கார் இருக்கலாம்.
இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ள கியா சைரோஸ் கார், வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் மிக குறுகிய காலம் மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது கியா சைரோஸ் காரின் டீசர் வீடியோக்கள் வெளியாக தொடங்கியுள்ளன.

இதன் மூலம் கியா சைரோஸ் காரை பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் நமக்கு தெரிய வந்து கொண்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு டீசர் வீடியோவின் மூலமாக கியா சைரோஸ் காரில், பனரோமின் சன்ரூஃப் (Panoramic Sunroof) வசதி வழங்கப்படவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதி உறுதியாகி விட்ட நிலையில் இதுதவிர, 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், பார்க்கிங் சென்சார்கள் ஆகிய வசதிகளும் கியா சைரோஸ் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அடாஸ் (ADAS - Advanced Driver-assistance Systems) பாதுகாப்பு தொகுப்பையும், கியா சைரோஸ் கார் கொண்டிருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஒட்டுமொத்தத்தில் கியா சைரோஸ் பல்வேறு அதிநவீன வசதிகள் நிரம்பிய ஒரு காராகவே இருக்கும்.
செயல்திறனை பொறுத்தவரையில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் ஆகும். இந்த இன்ஜின்கள் உடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் கியா சைரோஸ் காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது. அதாவது பெட்ரோல், டீசல் வெர்ஷன். இதற்கு பிறகு, கியா சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என நாங்கள் கருதுகிறோம்.
இது நடக்கும்பட்சத்தில், கியா சைரோஸ் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை, ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. ஏனெனில் கியா நிறுவனம் சைரோஸ் காரை ஓரளவிற்கு குறைவான விலையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது இது நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற காராக இருக்கும்.


Click it and Unblock the Notifications








