நாளை அறிமுகமாகிறது வேகன்ஆர் போன்ற உயரமான உருவம் கொண்ட கார்! 6 அடி இருந்தாலும் சௌகரியமா ஒக்காந்து பயணிக்கலாம்!

இந்தியாவின் எஸ்யூவி கார் (SUV Car) மார்க்கெட்டை அலங்கரிக்கும் விதமாக கியா (Kia) நிறுவனம், தனது புதுமுக கார் மாடல் ஒன்றை நாளைய (டிசம்பர் 19) தினம் வெளியீடு செய்ய இருக்கின்றது. சிரோஸ் (Syros), இதுவே அந்த புதுமுக எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காரை இதுவரை கியா நிறுவனம் முழுமையாகக் காட்சிப்படுத்தியது இல்லை. நாளையே இந்த காரை அது முழுசாக காட்சிப்படுத்த உள்ளது. இதனால்தான் நாளைய தினத்திற்காக இந்தியர்கள், குறிப்பாக, எஸ்யூவி கார் பிரியர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், விற்பனையில் கியாவின் மற்ற தயாரிப்புகளை போலவே இதுவும் சக்சஸ்ஃபுல் கார் மாடலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப ஏகப்பட்ட பிரத்யேக சிறப்பம்சங்களைத் தாங்கிய கார் மாடலாகவே சிரோஸ்-ஸை கியா தயார் செய்திருக்கின்றது.

Kia syros to globally debut tomorrow

இதையே, கியா சமீப சில காலமாக வெளியிட்டு வரும் டீசர் படம் (Teaser Pic)-களும் உறுதிப்படுத்துகின்றன. ஆமாங்க, கியா நிறுவனம் இந்த காரின் பக்கம் இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தைத் திசை திருப்பும் விதமாக தொடர்ச்சியாக சிரோஸ்-இன் டீசர் படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்தது.

ஒவ்வொரு படமும் காரின் ஒவ்வொரு சிறப்பம்சங்களை விவரிக்கக் கூடியதாகவே இருந்தன. இந்த சிறப்பம்சங்களை ஆர்வத்திலேயே பலர் சிரோஸ்-இன் வருகைக்காக காத்திருக்கத் தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக, அதன் டால் பாய் தோற்றத்தை முழுமையாக காண வேண்டும் என்பதில் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Kia syros badge

இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி டால் பாய் ஸ்டைலில் மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடல் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் 6 அடி உயரம் கொண்டவர்களாலும் சிரமமின்றி அமர்ந்து பயணிக்க முடியும். லெக்ரூம் மிகப் பெரிய அளவில் கிடைக்கும். இத்தகைய வசதிகளும் கியா சிரோஸ் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து, புதிய சிரோஸ் காரில் இரண்டு டிஜிட்டல் திரைகள் 10 அங்குலத்திற்கும் அதிகமான அளவில், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, 6 ஏர் பேக்குகள், போஸ் சவுண்டு சிஸ்டம், பவர்டு டிரைவர் இருக்கை, வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

இதுதவிர, பார்க்கிங் சென்சார்கள் மற்றும் அடாஸ் தொழில்நுட்பம் போன்றவையும் புதிய கியா சிரோஸ் காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் கியா-வின் சொனெட் (Sonet) கார் மாடலுக்கு மேல் இடத்திலேயும், செல்டோஸ் (Seltos)-க்கு கீழ் இடத்திலும் நிலை நிறுத்தப்படும். இரண்டும் நிறுவனத்தின் புகழ்பெற்ற எஸ்யூவி ரக கார் மாடல்கள் ஆகும்.

ஆகையால், இந்த கார் செல்டோஸைக் காட்டிலும் மலிவு விலைக் கொண்டதாகவும், அதேவேளையில், சொனெட்டைக் காட்டிலும் சற்றே காஸ்ட்லியான கார் மாடலாகவும் இருக்கும் என யூகிக்கப்படுகின்றது. அதேவேளையில், அநேகர் நுகரும் வகையில் இந்த காரை சற்றே பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கொண்டு வர கியா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய சிரோஸ் காருக்கு நிர்ணயிக்கப்பட இருக்கும் விலையானது பலரால் ஏற்கக் கூடியதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. மேலும், சிறப்பம்சங்கள் விஷயத்தில் முன்னதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட மற்ற கியா கார் மாடல்களுக்கு சற்றே டஃப் கொடுக்கும் விதமாக புதிய சிரோஸ் இருக்கும் என தெரிகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு உறுதியான தகவலும் இதுவரை வெளியாகவில்லை. நாளைய தினத்திலேயே சிரோஸ் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 18, 2024, 15:10 [IST]
English summary
Kia syros set to make global debut in india tomorrow with key features from sonet and seltos
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+