குடும்பமாக எல்லாரும் ஷோரூமுக்கு படையெடுக்க போறாங்க! கியா தயார் செய்யும் தரமான புதிய கார்!!

கியா (Kia), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக சில புதிய எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. அவற்றுள் சிரோஸ் (Syros) எஸ்யூவி காரும் ஒன்றாகும். இன்னும் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கியா சிரோஸ் கார் இந்திய சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரத்யேகமாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சமீப காலங்களில் இந்தியாவில் வெற்றி பெற்ற வெளிநாட்டு கார் நிறுவனங்களுள் கியாவும் ஒன்றாகும். ஹூண்டாயை போன்று பக்கா கொரியன் கார் நிறுவனமான கியா, இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் செல்டோஸ் கார் மூலமாக நுழைந்தது. அதன்பின், கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு கார்களை கியா இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

kia syros spotted while testing

அந்த வரிசையில் அடுத்ததாக, சிரோஸ் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய கியா தயாராகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் சிரோஸ் கார் தொடர்பான டீசர் படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் கியா வெளியிட்டு இருந்தது. அதில், இருளில் நிறுத்தி வைக்கப்பட்ட சிரோஸ் காரின் டிஆர்எல்-களை பார்க்க முடிந்தது. அதாவது, அந்த டீசரில் காரின் தோற்றத்தை கியா வெளிக்காட்டவில்லை.

அந்த அளவிற்கு, இந்தியாவிற்கான சிரோஸ் காரின் தோற்றத்தை வெளியே கசிந்துவிடாமல் கியா பத்திரமாக பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில்தான், சிரோஸ் கார் ஒன்று முழுவதும் கருப்பு நிற துணியால் மறைக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பிரத்யேகமாக நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்துள்ளது.

kia syros spotted while testing

இந்த வீடியோவில் காரின் தோற்றத்தை பார்க்க முடியவில்லை என்றாலும், கார் எந்த அளவிற்கு பெரியது என்பதை அறிய முடிகிறது. இதன்படி பார்க்கும்போது, விற்பனையில் இருக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி காரை காட்டிலும் சிரோஸ் எஸ்யூவி கூடுதல் உயரமானதாக உள்ளது. இதனால், சிரோஸ் காருக்குள் அதிக இடவசதியை பெறலாம் என எதிர்பார்க்கலாம்.

இந்த வீடியோவில், காரின் முன்பக்கத்தை பார்க்க முடியவில்லை; பின்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது. காரின் பின்பக்க பம்பர் மிகவும் மெல்லியதாக உள்ளதுபோல் தெரிகிறது. இதனால், சிரோஸ் காரை 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளத்தில் களமிறக்க கியா திட்டமிடலாம். இதன் மூலமாக, கியா நிறுவனத்திற்கு விதிக்கப்படும் வரி கணிசமாக குறையும். இதன்படி பார்க்கும்போது, கியா சொனெட் மற்றும் செல்டோஸ் கார்களுக்கு இடையில் சிரோஸ் கார் நிலைநிறுத்தப்படலாம்.

kia syros spotted while testing

எங்களுக்கு தெரிந்தவரையில், புதிய கியா சிரோஸ் எஸ்யூவி கார் அடுத்த 2025ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம். தோற்றத்தை பொறுத்தவரையில், சிரோஸ் கார் பெட்டகம் வடிவில் உள்ளது. இருப்பினும், வீல் ஆர்ச்சுகள் வளைவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் பொருட்களை கட்டி வைக்க பயன்படும் கம்பிகள் ஸ்கார்பியோ கார்களில் உள்ளதை போன்று உள்ளன. காரின் ஜன்னல் கண்ணாடிகள் அளவில் பெரியதாக உள்ளன.

தற்போது சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள சிரோஸ் காரில் 4-ஸ்போக் அலாய் சக்கரங்கள் உள்ளன. வீடியோவில், காரின் பின்பக்க டெயில்லைட்களின் பாதியை மட்டுமே பார்க்க முடிகிறது. மற்றப்படி, இந்த ஸ்பை வீடியோவில் காரின் உட்பக்கத்தை காண முடியவில்லை. மாடர்ன் கியா கார் என்பதால், 2-ஸ்போக் ஃபிளாட்-பாட்டம் மல்டிஃபங்சன் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் இரு திரைகளை கொண்ட டேஸ்போர்டு செட்-அப்பை எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கியா சிரோஸ் காரின் சிறப்பம்சமே அதன் உயரமான தோற்றம் ஆகும். இதனால், பெட்டகம் வடிவில் உள்ள இந்த எஸ்யூவி கார் அதிக உயரம் கொண்டவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். பவர்ஃபுல்லான டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை இந்த காரில் கியா வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இந்திய மார்க்கெட்டில் மற்றொரு வெற்றிக்கரமான கியா காராக சிரோஸ் விளங்குவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 24, 2024, 21:59 [IST]
English summary
Kia syros suv car spotted while testing in india expected launch design all details here
மேலும்... #kia #kia motors #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X