புல்லட்டை போலவே பலர் இந்த காரை அதோட சத்தத்துக்காகவே வாங்குவாங்க! ஏஆர் ரஹ்மானின் இசைக்கே டஃப் கொடுக்கும் போல!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia) இந்தியாவில் சீக்கிரமே ஓர் புதுமுக எஸ்யூவி (SUV) ரக காரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. சிரோஸ் (Syros) எனும் எஸ்யூவி ரக கார் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வெளியீட்டு நிகழ்வு சீக்கிரமே அரங்கேற இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்துகின்ற விதமாகவே கியா நிறுவனம் சில டீசர் வீடியோ (Teaser Video)-வை தற்போது வெளியிட்டு இருக்கின்றது.

முன்னதாக புதுமுக கார் மாடலின் பக்கவாட்டு பகுதியின் டீசரை வெளியிட்ட நிலையில், தற்போது முன் பக்கத்தை வெளிக்காட்டக் கூடிய டீசர் வீடியோவையே கியா வெளியிட்டு உள்ளது. இந்த டீசர் படத்தின் வாயிலாக இது ஓர் உயரமான உருவத்தைக் கொண்ட காராக இருக்கும் என்பது தெரிகின்றது.

Kia syros suv front look teaser

மேலும், பெட்டி போன்ற தோற்றத்தையும் இந்த கார் மாடல் கொண்டிருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதன் வாயிலாக இந்த எஸ்யூவி காரின் தோற்றமான மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேகன்ஆர் (Maruti Suzuki Wagon R) ஹேட்ச்பேக்கை லேசாக பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என யூகிக்க முடிகின்றது.

அதேவேளையில், இதன் லுக் முற்றிலும் தனித்துவமானதாக இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே டீசர் படங்களும் அமைந்திருக்கின்றன. மிக முக்கியமாக, முன் பக்கம் என கூறிக் கொண்டு வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் படம், அந்த காரில் என்ன மாதிரியான ஹெட்லைட் இடம் பெற இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.

மூன்று புள்ளிகள் நேர்கோட்டில் வைக்கப்பட்டதைப் போன்ற லைட்டும், பேப்பரில் அடிக்கப்பட்ட ஸ்டேப்ளர் பின்னை பிரதிபலிக்கக் கூடிய ஓர் லைட்டும் இந்த காரில் வழங்கப்பட இருப்பதையே இந்த டீசர் படம் உறுதி செய்திருக்கின்றது. இத்துடன் இந்த கார் சிரோஸ் எனும் பெயரில் விற்பனைக்கு வர இருப்பதையும் இந்த டீசர் வீடியோவின் கடைசியில் உறுதி செய்திருக்கின்றனர்.

தொடர்ந்து, இந்த காரில் ரேஸ் கார்களுக்கு இணையான ஒலி வெளியாகும், அது கார் பிரியர்களைக் கவரக் கூடியதாக இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. எனவே புல்லட் பைக்குகளை அதன் சைலென்சர் சத்தத்திற்காக எப்படி பலர் வாங்கிக் கொண்டிருக்கின்றார்களோ, அதைபோலவே இந்த காரையும், அதன் சைலென்சர் சத்தத்திற்காக வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Kia syros suv teaser

இந்த காரில் எதிரொலிக்கும் திறன் கொண்ட வீல்கள் பயன்படுத்தப்பட இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது. இதுதவிர, ஃபிளாட்டான மேற்கூரை, உறுதியான பிள்ளர்கள், எல் வடிவ ஹெட்லைட், டோரோடு டோராக இருக்கக் கூடிய கைப் பிடிகளும் சிரோஸ் கார் மாடலில் இடம் பிடிக்க இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இப்போதைக்கு இந்த தகவல்களே வெளியாகி உள்ளன.

விரைவில் சிரோஸ் எஸ்யூவி கார் பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்தியாவில் சொனெட் மற்றும் செல்டோஸ் ஆகிய இரண்டு எஸ்யூவி கார் மாடல்களுக்கும் டிமாண்ட் அதிகம். இதேபோல், சிரோஸ் எஸ்யூவிக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் கியா நிறுவனம் சமீபத்திலேயே அதன் புதிய தலைமுறை கார்னிவல் சொகுசு எம்பிவி ரக காரையும், உலக புகழ்பெற்ற இவி9 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்தே தற்போது மேலும் ஓர் புதுமுக எஸ்யூவி காரையும் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதுமுக எஸ்யூவி கார் வாயிலாக இந்தியர்களை வளைத்துப் போடும் முயற்சியில் கியா நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இதற்கு நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளுக்கு கிடைப்பதைப் போல நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, November 11, 2024, 23:45 [IST]
English summary
Kia syros suv is expected to debut soon slotting between the sonet and seltos
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+