இந்த கார அவங்க களமிறக்கிறதே டொயோட்டா காரோட மார்க்கெட்ட காலி பண்ணதான்! வச்சு செய்றதுக்குனே தயார் பண்ணிருக்காங்க

கியா நிறுவனம் டாஸ்மேன் எனும் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் பிக்-அப் டிரக் வகை வாகனம் ஆகும். பயணிகள் பயணிக்க மற்றும் சரக்குகளை ஏற்றி செல்ல என இரண்டிற்கும் இந்த வாகனத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய வாகனத்தையே கியா தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் முதல் பிக்-அப் டிரக் வகை கார் மாடல் ஆகும். இந்த காரையே தற்போது கியா நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டே இந்த வாகனத்தை கியா நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.

2025 ஆம் ஆண்டில் இந்த பிக்-டிரக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனம் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டொயோட்டா நிறுவனத்தின் ஹைலக்ஸ் கார் மாடலுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். டொயோட்டாவின் மிக சிறப்பாக விற்பனையாகும் பிக்-அப் டிரக் வகை வாகனமாக ஹைலக்ஸ் காட்சியளிக்கின்றது.

Kia s first ever pickup tasman fully unveiled

உலக சந்தையில் மிக அமோகமான வரவேற்பை இந்த வாகனம் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு நிலவிக் கொண்டிருக்கும் டிமாண்டை காலி செய்யும் நோக்கிலேயே கியா அதன் டாஸ்மேன் வாகனத்தை தயார் செய்திருக்கின்றது. இந்த வாகனத்தின் வருகை டொயோட்டா ஹைலக்ஸ்-க்கு மட்டுமல்ல இன்னும் பல பிக்-அப் டிரக்குகளுக்கு மிகப் பெரிய போட்டியாக அமைய உள்ளது.

அந்தவகையில், ஃபோர்டு ரேஞ்சர், மிட்சுபிஷி ட்ரைடன், நிஸான் நவரா, ஃபோக்ஸ்வேகன்அமரோக், இசுஸு டி-மேக்ஸ் என பல்வேறு மாடல்களுக்கும் டாஸ்மேனின் வருகை போட்டியாக அமைய உள்ளது. மிகவும் கட்டுமஸ்தான, அதேவேளையில், மிகவும் தனித்துவமான தோற்றத்தையே டாஸ்மேன் கொண்டிருக்கின்றது. இதன் உருவம் மற்றும் ஸ்டைலை வைத்து பார்க்கையில் இந்த வாகனம் தனிப்பயன்பாடு மற்றும் ஆஃப்-ரோடு பயன்பாடு என இரண்டிற்குமான வாகனமாகவும் டாஸ்மேன் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

Kia s first ever pickup tasman dashboard

இதற்கேற்ப டாஸ்மேன் பாலைவனத்தில் நிற்கும் படங்களையே தற்போது கியா நிறுவனம் பகிர்ந்திருக்கின்றது. தொடர்ந்து, 2 வீல் டிரைவ் அம்சத்துடன் 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் இந்த வாகனத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுமட்டுமில்லைங்க, பனி, மண் சாலை, பாறைகள் மிகுந்த சாலை மற்றும் மணல் பரப்பு ஆகியவற்றிற்கான தனி டிரைவிங் மோட்களும் இந்த வாகனத்தில் வழங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

மேலும், ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்காக இந்த வாகனத்தில் எலெக்ட்ரானிக் லாக்கிங் டிஃபரன்சியல் மற்றும் எக்ஸ்-டிரெக் மோட் ஆகிய அம்சங்களும் இதில் வழங்கப்பட உள்ளது. ஆகையால், தன்னுடைய போட்டியாளர்களுடன் சேர்த்து ஆஃப்-ரோடு பயணங்களையும் இந்த வாகனம் துவம்சம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க இன்னும் பிரத்யேக அம்சங்களையும் இந்த வாகனம் தாங்கியிருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

Kia s first ever pickup tasman seat

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. 2.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 22 லிட்டர் டர்போ டீசல் ஆகியவையே அவை ஆகும். இரண்டும் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டவை ஆகும்.

அந்தவகையில் பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 281 பிஎஸ் மற்றும் 421 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதேபோல், டீசல் 210 பிஎஸ் மற்றும் 441 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த வாகனம் பிரீமியம் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களையும் மிக தாராளமாக கொண்டதாக இருக்கும் என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது.

அந்தவகையில், 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 12.3 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 5 அங்குல க்ளைமேட் கனட்ரோலுக்கான திரை உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது. ஆகையால், பயன்பாட்டிலும் இந்த வாகனம் மிகவும் அசத்தலானதாக இருக்கும் என தெரிகின்றது.

இதுமட்டுமில்லைங்க, ரைடு அனுபவத்தை மிகவும் சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மேன் கர்டோன் ஆடியோ சிஸ்டம், ஃபோல்டிங் டேபிள், பயோ-பியு-ஆல் தயார் செய்யப்பட்ட லெதர் இருக்கை, ரெக்லைனர் இருக்கை மற்றும் ஸ்லைடிங் வகை கார்கோ ஃப்ளூர் உள்ளிட்ட அம்சங்களும் இந்த வாகனத்தில் இடம் பெற இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தது போன்று பலதரப்பட்ட சிறப்பம்சங்களை கியா டாஸ்மேனில் இடம் பெற இருப்பதனாலேயே அக்கார் டொயோட்டா ஹைலக்ஸ்க்கு மிகப் பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டொயோட்டாவின் இந்த பிக்-அப் டிரக் இந்தியாவிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதற்கு இங்கும் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 2, 2024, 22:52 [IST]
English summary
Kia unveils tasman brands first pickup truck set to compete with toyota hilux
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X