ரூ.30,000 இருந்தால் போதும் வீட்டிற்கு ஓட்டி செல்லலாம் - பெட்ரோல், டீசல் செலவு சுத்தமாக கிடையாது...
கைனெட்டிக் க்ரீன் எனர்ஜி (Kinetic Green Energy), இந்தியாவில் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. இந்த நிறுவனத்தில் இருந்து சஃபர் ஸ்மார்ட் (Safar Smart) என்கிற பெயரில் எலக்ட்ரிக் 3-சக்கர வாகனம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு சஃபர் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஆட்டோவில் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறுகிய காலம் மட்டுமே விற்பனையில் இருக்கவுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவை பற்றிய கூடுதல் விபரங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு வருடத்திலும் வருட இறுதி பண்டிகை காலத்தின்போது தான் அதிகளவில் வாகனங்கள் விற்பனையாகுகின்றன. இதன் காரணமாகவே, இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக புதிய வாகனங்கள் வருட இறுதி மாதங்களில் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. புதிய வாகனங்களை கொண்டுவர முடியாவிடினும், குறைந்தப்பட்சம் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வாகனங்களின் ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

அந்த வகையில்தான், கைனெட்டிக் க்ரீன் எனர்ஜி & பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அதன் சஃபர் ஸ்மார்ட் என்கிற பயணிகள் ஆட்டோ ரிக்ஷாவில் புதியதாக லிமிடெட் எடிசனை அறிமுகம் செய்துள்ளது. சஃபர் ஸ்மார்ட் ஆட்டோ ரிக்ஷா கந்தக அமிலம் மற்றும் லித்தியம் என 2 விதமான பேட்டரி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டிலும் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது லிமிடெட் எடிசன் என்பதால், குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனையில் இருக்கும். 3-சக்கரங்களை கொண்ட பயணிகள் ஆட்டோ ரிக்ஷாவாக இருப்பினும், சஃபர் ஸ்மார்ட் லிமிடெட் எடிசன்களை கார்கோ பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியும். கைனெட்டிக் சஃபர் ஸ்மார்ட் ஆட்டோவின் வழக்கமான விலையை காட்டிலும் புதிய லிமிடெட் எடிசனின் விலை வெறும் ரூ.5,000 மட்டுமே அதிகமாகும்.
ரூ.5,000க்கு மியுசிக் சிஸ்டம், ஃப்ளோர் மேட்கள் மற்றும் சக்கரங்களில் கேப்களை புதிய லிமிடெட் எடிசனில் கூடுதலாக பெறலாம். புதிய லிமிடெட் எடிசன் ஆட்டோவை அறிமுகம் செய்திருப்பதுடன், கைனெட்டிக் க்ரீன் எனர்ஜி நிறுவனம் அதன் அனைத்து எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கும் பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் நவராத்திரியின் முதல் நாளான இன்று (அக்டோபர் 3) முதல் கைனெட்டிக் எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கான சலுகைகளை கைனெட்டிக் டீலர்ஷிப் ஷோரூம்களில் பெறலாம். முக்கியமாக, தனது எலக்ட்ரிக் ஆட்டோக்களை வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான ஃபைனாசிங் ஆப்ஷன்களை வழங்க கைனெட்டிக் க்ரீன் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சோழமண்டலம் ஃபைனான்ஸ் மற்றும் ரெவ்ஃபின் ஃபைனான்ஸ் என்கிற இரு ஃபைனான்ஸ் நிறுவனம் நிறுவனங்களுடன் கைனெட்டிக் நிறுவனம் கூட்டணி சேர்ந்துள்ளது.
இதன்படி, கைனெட்டிக் க்ரீன் நிறுவனத்தின் சஃபார் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஆட்டோவை கந்தக அமில பேட்டரி உடன் இனி ரூ.29,000 என்கிற முன்தொகை உடன் வாங்கலாம். மாதத்தவணை திட்டங்கள் ரூ.8,200இல் இருந்து ஆரம்பமாகிறது. மறுப்பக்கம், லித்தியம் இரும்பு பேட்டரி இந்த எலக்ட்ரிக் ஆட்டோவை ரூ.32,000 முன்தொகை உடனும், ரூ.8,500இல் இருந்து மாதத்தவணை திட்டத்திலும் வாங்கலாம்.
அதேபோல், பேட்டரியை சஃபர் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஆட்டோவிற்கான உத்தரவாதமும் மாறுப்படுகிறது. அதாவது, கந்தக அமில பேட்டரியை கொண்ட சஃபர் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஆட்டோவிற்கு 1 வருட உத்தரவாதமும், லித்தியம் இரும்பு பேட்டரி உடன் 3 வருட உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள கைனெட்டிக் க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூமை தொடர்பு கொள்ளவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மக்களிடத்தில் கொண்டுவருவதில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் 3-சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, எலக்ட்ரிக் ஆட்டோக்கள் நல்ல இலாபத்தை வழங்குவதாக ஆட்டோ டிரைவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், எரிபொருள் செலவை இவை பெரிதும் மிச்சப்படுத்துகின்றன. கைனெட்டிக் க்ரீன் எனர்ஜி நிறுவனத்தின் ஃபான்சிங் சலுகைகள் மூலம் சஃபர் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஆட்டோவை சொந்தமாக்குவது இன்னும் எளிதாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








