இனி இவி பேட்டரிகளை சொந்தமாக வாங்க வேண்டாம்! கம்மி ரேட்ல வாடகைக்கு கிடைக்கப்போகுது!
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை இனி வாகன ஓட்டிகள் சொந்தமாக வாங்காமல் வாடகைக்கு எடுக்கும் முறையை தனியார் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் கொல்கத்தா போன்ற பகுதிகளில் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை ஓட்டி வரும் ஓட்டுனர்களுக்கு மிகக் குறைந்த விலையில் நீடித்து உழைக்கும் லித்தியம் அயான் பேட்டரி வாடகைக்கு கிடைக்கப் போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டு வருகிறது என்றே சொல்லலாம். மக்கள் பல எலெக்ட்ரிக் வாகனங்களை விரும்பி வாங்கி வருகிறார்கள். பெட்ரோல், டீசல் வாகனங்கள் விற்பனை குறைந்து எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தொழிற்நுட்ப புரட்சிகள் தற்போது நடந்து வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் தேர்வு செய்வதில் தற்போது இருக்கும் மிகப்பெரிய சிக்கல் வாகனத்தின் விலை தான் வாகனத்தின் விலை பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இணையாக இருப்பதால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அதன் பேட்டரி தான்.
எலெக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் அயான் பேட்டரியை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே நீண்ட நேர சார்ஜை தாங்கும் வகையிலான வாகனத்தை உருவாக்க முடியும். இதனால் ஒரு முறை சார்ஜ் போட்டால் அதிக தூரம் பயணிக்கும் அளவிற்கு ரேஞ்ச் தரும் வகையிலான வாகனங்களை தயாரிக்க முடிகிறது. இந்த பேட்டரியின் விலையை குறைக்க தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் பல்வேறு விதமான முயற்சியை செய்து வருகின்றன.

இந்நிலையில் நியூரான் எனர்ஜி என்ற நிறுவனம் தற்போது உர்ஜா மொபிலிட்டி என்ற நிறுவனத்துடன் சேர்ந்து லித்தியம் அயான் பேட்டரிகளை எலெக்ட்ரிக் வாகன ஓட்டிகளுக்கு வாடகைக்கு விடும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கொல்கத்தா போன்ற நகரங்களில் நம்மூரில் எப்படி ஆட்டோ ஓடுகிறதோ அந்த ஊரில் டூடூ எனப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
அந்த வாகனங்களில் எல்லாம் லித்தியம் ஆசிட் ரக பேட்டரிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அந்த வாகனங்கள் குறைவான ரேஞ்ச் தரும் வாகனங்களாகவே தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் அந்த வாகன ஓட்டிகளுக்கு நியூரான் எனர்ஜி நிறுவனம் லித்தியம் அயான் பேட்டரிகளை வாடகைக்கு விட புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

இது குறித்து நியூரான் எனர்ஜி நிறுவனத்தின் சிஇஓ பிரார்த்திக் காம்ந்தர் கூறும் போது : "மேற்கு வங்கத்தில் நாங்கள் எங்கள் தொழிலை முதல் முறையாக துவங்கியுள்ளோம். இங்கு உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு லீஸ் முறையில் உர்ஜா மொபிலிட்டியின் பைனான்ஸ் பார்ட்னர் உடன் சேர்ந்து லித்தியம் அயான் பேட்டரிகளை வழங்குகிறோம். விரைவில் மற்ற ஊர்களுக்கும் எங்கள் தயாரிப்புகளை கொண்டு செல்வோம்.
எங்கள் நிறுவனத்தின் லித்தியம் அயான் பேட்டரிகள் எல்லாம் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட பேட்டரிகளாக உருவாக்கப்பட்டன. இது மட்டுமல்ல இந்த பேட்டரிகளை எங்கள் நிறுவனம் எப்பொழுதும் மானிட்டர் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. எங்கள் நிறுவனம் நினைத்தால் இந்த பேட்டரிகள் செயல்படாத முடியும். தடுக்க கூடிய தொழில்நுட்பத்தை உட்பகுத்தி இந்த பேட்டரிகளை தயாரித்துள்ளோம்.
மொத்தம் இந்தியா முழுவதும் 50 லட்சம் பேட்டரிகளை இப்படியாக வாடகைக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் இந்த பேட்டரிகளை சொந்தமாக வாங்காமல் இஎம்ஐ முறையில் மாத தவணை செலுத்தும் வகையில் இந்த பேட்டரிகளை வாங்கி தங்கள் வாகனங்களில் பொருத்தி கொள்ள முடியும்.
தற்போது வாகனங்களில் பயன்படுத்தப்படும் லிட் ஆசிட் பேட்டரிகள் விலையை விட லித்தியம் அயான் பேட்டரிகளின் விலை இருமடங்காக இருப்பதால் பலர் இந்த லித்தியம் பேட்டரிகளை வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு கொண்டு வருவதற்காக தான் இந்த முறையை நாங்கள் வழங்கி உள்ளோம். லித்தியம் அயான் பேட்டரிகளை பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.
எங்கள் லித்தியம் அயான் பேட்டரிகளை வாகன ஓட்டிகள் வாடகைக்கு வாங்கினால் மாதம் ரூபாய் 4500 இஎம்ஐயாக செலுத்த வேண்டும். எங்கள் முறைப்படி நீங்கள் எவ்வளவு தூரம் லித்தியம் அயான் பேட்டரிகளை பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு பணம் செலுத்தினால் போதும் என்ற திட்டத்தை வைத்திருக்கிறோம். அதிகபட்சமாக பயன்படுத்தும் போதுதான் மாதம் ரூபாய் 4500 தகவலை என்பது உங்களுக்கு வரும்" என்று கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மிக அதிகமாக இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகன வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் லித்தியம் அயான் பேட்டரி தயாரிப்பு மிக முக்கிய பங்காக இருக்கிறது. இதை வாடகைக்கு விடும் முறையில் ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. நிச்சயம் மக்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









