எத்தனை பேரது வாழ்க்கையை மாற்ற போகுதோ... புது தொழில் துவங்க ஏற்ற வாகனம்!!

கோமகி எலக்ட்ரிக் வாகனங்கள் (Komaki Electric Vehicles) நிறுவனம் இந்தியாவின் முன்னணி இவி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. குறைந்த எடையில், பல்வேறு விதமான உடலமைப்புகளில் இந்த நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய கோமகி நிறுவனத்தில் இருந்து புதியதாக ஒரு எலக்ட்ரிக் வாகனம் கேட் 3.0 நெக்ஸ்ட் (Cat 3.0 NXT) என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் வாகனத்தின் விலை உள்பட இந்த வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் விரிவடைந்து வருவதாக தொடர்ந்து கூறி வருகிறோம். குறிப்பாக, எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களில் புதியது புதியதாக வந்துள்ளதை பார்க்க முடியும்.

komaki cat 3 0 nxt launched

அதேபோல், எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்களுக்கும் டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பொருட்களை டெலிவிரி செய்வதற்கும், சிறு சிறு அரசாங்க துப்புரவு பணிகளுக்கும் எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடியும். இவை பெரும்பாலும் 3 சக்கரங்களை கொண்ட எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கின்றன.

இவ்வாறான 3-சக்கர எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் கோமகி நிபுணத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இத்தகைய கோமகி நிறுவனத்தில் இருந்து புதிய கேட் 3.0 நெக்ஸ்ட் என்கிற எலக்ட்ரிக் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1 லட்சத்து 19,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

komaki cat 3 0 nxt launched

கிராபேன் பேட்டரி வேரியண்ட் மற்றும் லித்தியம் பாஸ்பேட் பேட்டரி வேரியண்ட் என 2 விதமான வேரியண்ட்களில் இந்த எலக்ட்ரிக் வாகனம் விற்பனை செய்யப்பட உள்ளது. மேற்கூறப்பட்டுள்ள ரூ.1,19,999 விலை ஆனது கிராபேன் பேட்டரி உடன் ஆகும். லித்தியம் பாஸ்பேட் பேட்டரி உடன் இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் விலை ரூ.1 லட்சத்து 49,999 ஆகும்.

மேலும், புதிய கேட் 3.0 நெக்ஸ்ட் எலக்ட்ரிக் வாகனத்திற்கு தீபாவளி பண்டிகை கால சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கேட் 3.0 நெக்ஸ்ட் வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.7,500 பணம் தள்ளுபடியை பெறலாம். இந்த குறுகிய கால சலுகை ஆனது அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வரையில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

komaki cat 3 0 nxt launched

கோமகி கேட் 3.0 நெக்ஸ்ட் எலக்ட்ரிக் வாகனம் ஆனது சிறிய மற்றும் நடுத்தர வணிக தொழில்களில் தினந்தோறும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. இந்த வாகனத்தில் வழங்கப்படும் கிராபேன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலமாக 180கிமீ தொலைவிற்கு வாகனத்தை ஓட்டி செல்லலாம் எனவும், லித்தியம் பாஸ்பேட் பேட்டரியில் 200கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு ஓட்டி செல்லலாம் எனவும் கோமகி நிறுவனம் தெரிவிக்கிறது.

ரிக்‌ஷா வாகனத்தை போன்று இருக்கும் கோமகி கேட் 3.0 நெக்ஸ்ட் வாகனத்தில் அதிகப்பட்சமாக 500 கிலோ வரையில் எடைக் கொண்ட பொருட்களை கொண்டு செல்லலாம். அதேநேரம், இந்த வாகனத்தை பயணிகளை ஏற்றி செல்லவும் பயன்படுத்தலாம். மிகவும் வலிமையான உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 3 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோமகி கேட் 3.0 நெக்ஸ்ட் போன்ற எலக்ட்ரிக் வாகனங்கள் லாஸ்ட் மைல் டெலிவிரிக்கு பயன்படுத்துவதற்கு ஏற்றவை ஆகும். ரூ.1.20 லட்சத்தில் விலையும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், இந்த வாகனம் நிறைய பேருக்கு புதிய தொழில்களை உருவாக்கிக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, October 25, 2024, 11:42 [IST]
English summary
Komaki cat 3 0 nxt electric 3 wheeler launched in india price features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X