கார்களுக்கு இடையே அடிதடி நடந்து பாத்திருக்கீங்களா! இந்த காரோட வருகையால் சீக்கிரமே அதுவும் நடக்கும்போல!
பிரீமியம் கார் பிரியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக ஸ்கோடா (Skoda) நிறுவனத்தின் புதிய கார் மாடலாக கைலாக் (Kylaq) இருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். மேலும், இதுவே நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடலின் அறிமுக தேதியே தற்போது வெளியிடப்பட்டு இருக்கின்றது. வருகின்ற நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்றே இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.
அதேவேளையில், இந்த பிரிவில் மிகப் பெரிய போட்டியும் நிலவிக் கொண்டிருக்கின்றது. சொல்லப் போனால் டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) போன்ற புகழ்பெற்ற கார் மடல்கள் இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இத்தகைய கார் மாடல்களுக்கு போட்டியளிக்கும் நோக்கிலேயே ஸ்கோடா கைலாக் விற்பனைக்கு வர இருக்கின்றது. எனவே இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி கார் பிரிவு வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் சூடுபிடித்துக் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப இந்த கார் மாடலை வைத்து மிகப் பெரிய பிளானை ஸ்கோடா நிறுவனம் தீட்டி வருகின்றது.
மாதம் ஒன்றிற்கே 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் யூனிட்டுகள் வரை கைலாக் கார் மாடலை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. இவை இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காருக்கு மிகவும் குறைவான விலையே ஸ்கோடா நிர்ணயம் செய்ய இருக்கின்றது.
இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின் வாயிலாக இந்த கார் ரூ. 8 லட்சம் அல்லது அதற்கும் குறைவான ஆரம்ப விலையிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்கோடா நிறுவனம், இந்த காரை தன்னுடைய எம்க்யூபி ஏ0 ஐஎன் பிளாட்பாரத்தை தழுவியே உருவாக்கி இருக்கின்றது.
இந்த பிளாட்பாரத்தை பயன்படுத்தியே அதற்கு மிகவும் மாடர்னான தோற்றத்தை நிறுவனம் வழங்கி இருக்கின்றது. ஆனால், இது எப்படி இருக்கும் என்பது தகவலையோ, படங்களையோ அது வெளியிடவில்லை. விரைவில் அதுபற்றிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், அகலமான முன் பக்க கிரில், ஸ்பிளிட் வகை ஹெட்லேம்ப் மற்றும் குஷாக் கார் மாடலைக் காட்டிலும் குறைவான வீல் பேஸ் ஆகியவற்றைக் கொண்டதாக கைலாக் கார் மாடல் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
தொடர்ந்து, இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. எஞ்சினைப் போலவே இந்த கைலாக் காரில் இடம் பெற இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்கள் கசிந்திருக்கின்றன.
அந்தவகையில், அடாஸ் போன்ற நவீன கால தொழில்நுட்பங்கள் இந்த காரில் இடம் பெற இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதேபோல், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, வெண்டிலேட் வசதிக் கொண்ட மற்றும் லெதரால் அலங்கரிக்கப்பட்ட இருக்கை ஆகியவையும் வழங்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
மேலும், கூடுதல் அம்சங்களாக வயர்லெஸ் சார்ஜர், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட டிரைவர் இருக்கை, பன்முக ஏர் பேக்குகள், இஎஸ்சி மற்றும் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் டிராக்சன் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் இதில் இடம் பெற இருப்பதாகக் கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கைலாக் காருக்கு இந்தியாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த காரை ஒருத்தருக்கு பரிசாக வழங்க இருக்கின்றது, ஸ்கோடா. சமீபத்தின் இக்காரின் பெயரை கண்டறியும் போட்டியை அது தொடங்கியது. இதன்படி வெற்றியாளரான கேரளாவைச் சேர்ந்த ஓர் நபருக்கே கைலாக் பரிசாக வழங்கப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








