20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க

இத்தாலி நாட்டைச் சேர்ந்த சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஆட்டோமொபிலி லம்போர்கினி (Automobili Lamborghini) அதன் எம்பளத்தை (Logo) மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு தசாப்தங் (பத்து ஆண்டு)-களுக்கு பிறகு நிறுவனம் அதன் லோகோவை மாற்றி இருக்கின்றது.

நிறுவனத்தின் புதிய கொள்கையின் காரணத்தினாலேயே இந்த சின்னம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. முன்பைக் காட்டிலும் அழகானதாகவும் மற்றும் பிராண்டை இன்னும் கவர்ச்சியானதாக காண்பிக்க வேண்டும் என்கிற நோக்கிலும் லம்போர்கினி லோகோ மாற்றப்பட்டு உள்ளது. ஆனால், அது மிகப் பெரிய மாற்றத்தைச் செய்யவில்லை.

Lamborghini logo

அதே காளை மாடும், தற்காப்பு கேடயமே புதிய லோகோவிலும் இடம் பெற்றிருக்கின்றது. ஆனால், அதன் தோற்றத்தில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. நிறுவனம் Direzione Cor Tauri எனும் ஒரு பரந்த உருமாற்ற உத்தியின் ஒரு பகுதியாகவே இந்த சின்ன மாற்றத்தைச் செய்து இருக்கின்றது.

இது, நிறுவனத்தின் எதிர்காலப் பாதைக்கான மிக முக்கியமான முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றது. மிக சிறிய மாற்றமே செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், அது முன்பைக் காட்டிலும் மிகவும் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. மேலும், கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களே முதன்மையான வண்ணமாக இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Lamborghini changes logo

அதேநேரத்தில், மஞ்சள் மற்றும் தங்க நிறங்களும் புதிய சின்னத்தின் உச்சரிப்பு நிறமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால், லம்போர்கினியின் லோகோவை டிஜிட்டல் தளம் மற்றும் அதன் வாகனங்கள் அனைத்திலும் தெளிவாக தெரியும் நிலையை அடைந்திருக்கின்றது. இதற்காக நிறுவனம் லோகோவின் அகலத்தை லேசாக பெரிதாக்கி இருக்கின்றது.

இதனை தெளிவாகக் காண வேண்டும் என்பதற்காக பின்புளத்தில் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதேநேரத்தில், நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் டச் பாயிண்ட் சென்டர்களில் காளை மாடு மட்டும் இருக்கும். அதாவது, பாதுகாப்பு கேடயம் இல்லாமல் மாடு மட்டும் இருக்கும்.

தற்போது தயார் செய்யப்பட்டு இருக்கும் புதிய சின்னத்திலேயே லம்போர்கினி கார்கள் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதுதவிர, நிறுவனத்தின் விற்பனையகங்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த மையங்களிலும் புதிய சின்னமே அலங்கரிக்க இருக்கின்றன. லம்போர்கினி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலக நாடுகளில் மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக, அம்பானி போன்ற பெரும் செல்வந்தர்கள் மத்தியிலேயே இந்த பிராண்டின் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே 2026 ஆம் ஆண்டு வரையிலான அனைத்து கார்களும் விற்று தீர்ந்துவிட்டதாக சமீபத்தில் லம்போர்கினி நிறுவனம் அறிவித்தது. இந்த அளவிற்கே லம்போர்கினி கார்களுக்கு உலக செல்வந்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக உருஸ் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். அதிக வேக திறனை வெளிப்படுத்தும் எஸ்யூவி ரக கார் மாடல் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடல் இரண்டு விதமான தேர்வுகளில் உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

உருஸ் மற்றும் உருஸ் பெர்ஃபார்மெண்டே ஆகியவையே அவை ஆகும். உருஸ் மாடலைக் காட்டிலும், அதிக கவர்ச்சி மற்றும் அதிக ஸ்போர்ட்டி தோற்றம் மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதே உருஸ் பெர்ஃபார்மெண்டே ஆகும். இந்தியாவில் 4.22 கோடி ரூபாக்கும் அதிகமான விலையில் இந்த சொகுசு எஸ்யூவி ரக கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

முழுக்க முழுக்க செல்வந்தர்களை மையமாகக் கொண்டே இந்த வாகனத்தை லம்போர்கினி நிறுவனம் தயாரித்திருக்கின்றது. அதிக இட வசதி, அதிக சொகுசு வசதி மற்றும் நவீன கால தொழில்நுட்பங்கள் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் நிறுவனம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. விரைவில் இந்த கார் மாடல் உட்பட நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகள் மற்றும் எதிர்கால தயாரிப்புகள் அனைத்தும் நிறுவனத்தின் புதிய லோகோவிலே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லம்போர்கினி உருஸ் கார் மாடலுக்கே நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அம்பானி போன்ற பெரும் செல்வந்தர்கள் மற்றும் முன்னணி திரை நட்சத்திரங்கள் இந்தியாவில் இந்த கார் மாடலை பயன்படுத்தி வருகின்றனர். ரஜினியின் மகள்கூட இந்த காரை பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2024, 10:26 [IST]
English summary
Lamborghini changes logo what is the changes has made
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X