பெட்ரோல், மின்சாரம் ரெண்டிலும் ஓடும்.. பெட்ரோலே போடலனாலும் இந்த கார் ஓடும்.. உருஸ் எஸ்இ அறிமுகம்!
லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக உருஸ் (Urus) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலக உருஸ் இருக்கின்றது. இந்த கார் மாடலை பல விதமான வெர்ஷன்களில் லம்போர்கினி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே மேலும் ஓர் புதிய வெர்ஷன் உருஸ்-இல் லம்போர்கினி இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த புதிய வெர்ஷன் உருஸ் எஸ்இ (Urus SE) எனும் பெயரில் கிடைக்கும். இப்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டு இருக்கின்றது. விரைவில் விற்பனைக்கும் கொண்டு வரப்பட இருக்கின்றது.

மற்ற அனைத்து உருஸ்களைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக இந்த உருஸ் எஸ்இ உருவாக்கப்பட்டு இருக்கின்றது. அத்துடன் அதிக மைலேஜ் வழங்கும் பொருட்டு பிளக்-இன் ஹைபிரிட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, இந்த கார் எரிபொருள் மற்றும் மின்சாரம் இரண்டிலும் ஓடும்.
இதற்காக இரண்டு விதமான மோட்டார்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. உருஸ் எஸ் மாடலை தழுவியே உருஸ் எஸ்இ உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், சில மாற்றங்களை இந்த காரில் செய்திருக்கின்றது. அதில் மிக முக்கியமான ஒன்றாக பிளக்-இன் ஹைபிரிட் சிஸ்டம் மற்றும் புதிய திறன் அமைப்பும் உள்ளது.

இதுதவிர, பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வெளி - உள் பக்கங்களில் புதிய அலங்கரிப்பு வேலைப்பாடுகள் ஆகியவற்றையும் லம்போர்கினி செய்திருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் இரண்டு ட்வின் டர்போசார்ஜர்களைக் கொண்ட 4.0 லிட்டர் வி8 எஞ்சினே இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 620 எச்பி மற்றும் 800 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது ஆகும். இந்த எஞ்சின் ஹைபிரிட் சிஸ்டத்துடன் இணைந்து இயங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, பிளக்-இன் ஹைபிரிட் சிஸ்டத்தின்கீழ் பெரிய பேட்டரி பேக் மற்றும் மின்சார மோட்டார் ஒன்று வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் மோட்டார் மட்டும் 180 குதிரை திறனையும், 150 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதுதவிர, இதன் பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். இதற்கு அந்த பேட்டரியை தனியாக சார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
உருஸ் எஸ்இ பிளக்-இன் ஹைபிரிட் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 312 கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 3.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை உருஸ் எஸ்இ எட்டிவிடும். இத்தகைய திறனை இந்த வெளியேற்றுகின்ற காரணத்தினாலேயே உலகின் அதிக பவர்ஃபுல்லான எஸ்யூவி கார்களில் ஒன்றாக உருஸ் அறியப்படுகின்றது. இந்த காரில் 10 விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஸ்ட்ரடா (Strada), ஸ்போர்ட் (Sport), கோர்ஷா (Corsa) சாலை மற்றும் டிராக்கிற்கான மோட் (road and track), நெவே (Neve), சபியா (Sabbia), டெர்ரா (Terra) ஆஃப்-ரோடு பயணங்களுக்கான மோட் (off-road) மற்றும் இவி மோட் (EV Drive), ஹைபிரிட் (Hybrid), ரீசார்ஜ் (Recharge) மற்றும் பெர்ஃபார்மன்ஸ் (Performance) ஆகியவையே அவை ஆகும்.
மற்ற உருஸ்களிடம் இருந்து லேசாக மாறுபட்டுக் காட்சியளிக்கும் வேண்டும் என்பதற்காக உருஸ் எஸ்இ காரில் சில மாற்றங்களை லம்போர்கினி செய்து உள்ளது. இதனால், அந்த காரின் முன் மற்றும் பின் பக்கத்தின் தோற்றங்கள் இன்னும் முரட்டுத் தனமானதாகவும், ஆக்ரோஷமானதாகவும் மாறி இருக்கின்றது.
அத்துடன், புதிய லுக் கொண்ட ஹெட்லைட், புதிய பம்பர் மற்றும் புதிய பின் பக்க லைட்டுகள் உருஸ் எஸ்இ-யில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் டேஷ்போர்டும் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றது. அத்துடன் பெரிய தொடுதிரையும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இத்தகைய அம்சங்கள் கொண்ட மற்றும் அதிக திறனை வெளியேற்றும் காராகவே உருஸ் எஸ்இ தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக நாடுகளிலும் இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இதன் பக்கம் இன்னும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு லம்போர்கினி உருஸ் எஸ்இ அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு என்னமாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









