1 மணிநேரத்துக்கு ஒரு லம்போர்கினி காரை யாராவது ஒருத்தர் வாங்குறாங்க!! இலாபம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!

லம்போர்கினி (Lamborghini), இத்தாலியை சேர்ந்த உலகின் முன்னணி ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி நிறுவனம். இத்தகைய நிறுவனம் கடந்த 1 வருடத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை உலகம் முழுவதும் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. எவ்வாறு இது சாத்தியமாகியது? வழக்கத்தை காட்டிலும் இது எத்தனை கார்கள் அதிகம்? அதனை பற்றி வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2023-24ஆம் நிதியாண்டு இந்த மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இதனால், அனைத்து விதமான வணிக நிறுவனங்களும் தங்களது வரவு, செலவுகளை கணக்கிட இப்போதே ஆரம்பித்துவிட்டன. இந்த வகையில், உலகின் முன்னணி லக்சரி கார் நிறுவனமான லம்போர்கினி இந்த நிதியாண்டில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கைகள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

lamborghini sold 10000 cars world-wide

இதன்படி பார்க்கும்போது, 2023-24ஆம் நிதியாண்டு ஆனது லம்போர்கினி நிறுவனத்துக்கு எப்போதும் இல்லாத சிறந்த நிதியாண்டாக அமைந்துள்ளது. 2023 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து இப்போது வரையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை உலகளவில் லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஒரு நிதியாண்டில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை லம்போர்கினி விற்பனை செய்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

இந்த 2023-24ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 266 கோடி யூரோவை வருவாயாக லம்போர்கினி பெற்றுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.24 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும். முந்தைய 2022-23ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் லம்போர்கினி நிறுவனத்தின் வருவாய் 12.1% அதிகரித்துள்ளது. அதேபோல், லம்போர்கினி நிறுவனத்தின் இலாபமும் 2017ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

lamborghini sold 10000 cars world-wide

நடப்பு 2023-24ஆம் நிதியாண்டில் லம்போர்கினி பெற்றுள்ள இலாப சதவீதம் 27.2% ஆகும். அதாவது, இந்த நிதியாண்டின் வருவாயான ரூ.24 ஆயிரம் கோடியில் 27.2%-ஐ இலாபமாக லம்போர்கினி பெற்றுள்ளது. அதாவது, 72.3 கோடி யூரோவை (ரூ.6,530 கோடி) ஆப்ரேட்டிங் இலாபகமாக லம்போர்கினி பெற்றுள்ளது. கடந்த 2022-23ஆம் நிதியாண்டு உடன் ஒப்பிடுகையில் இது 17.8% அதிகமாகும்.

ஒரு நிதியாண்டில் லம்போர்கினி நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் இலாபம் 70 கோடி யூரோவை தாண்டுவது இதுவே முதல்முறையாகும். இந்த 72.3 கோடி யூரோ இலாபம் ஆனது அனைத்து விதமான செலவீனங்களும் கழிக்கப்பட்ட பின் லம்போர்கினிக்கு கிடைத்துள்ள ஆப்ரேட்டிங் இலாபம் ஆகும். இந்த 2024ஆம் ஆண்டில், மேம்படுத்தப்பட்ட ஹூராகென் காரையும், உலகளவில் வேகமாக பிரபலமாகிவரும் உருஸ் காரின் பிளக்-இன் ஹைப்ரீட் வெர்சனையும் அறிமுகம் செய்ய லம்போர்கினி திட்டமிட்டுள்ளது.

lamborghini sold 10000 cars world-wide

கடந்த 2023ஆம் ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த அதன் ரெவல்ட்டோ காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதற்குமுன் விற்பனையில் இருந்த அவெண்டடர் காருக்கு பதிலாக ரெவால்டோ கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.8.89 லட்சமாக உள்ளது. லம்போர்கினி ரெவால்டோ காரில் 6.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 803 பிஎச்பி மற்றும் 712 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 3 எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலமாக 1,001 பிஎச்பி வரையிலான பவர் அவுட்-புட்டை இந்த காரில் பெறலாம். என்ஜின் இயக்க ஆற்றல் 8-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக காரின் 4 சக்கரங்களுக்கும் செல்கிறது.

lamborghini sold 10000 cars world-wide

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருடத்திற்கு 10,000க்கும் அதிகமான கார்கள் என்றால், ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 30 கார்களை உலகில் லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களுடன் ஒப்பிட்டால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றாலும், லம்போர்கினி நிறுவனத்துக்கு கிடைக்கக்கூடிய வருவாய் நிச்சயமாக அதிகமாக இருக்கும். ஏனெனில், ஒவ்வொரு லம்போர்கினி காரும் கோடி ரூபாய்களில் விலைகளை கொண்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 23, 2024, 8:00 [IST]
English summary
Lamborghini sold more than 10000 cars in one year for first time
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X