நீங்க அம்பானியாக இருந்தாலும் லம்போர்கினி காரை உடனே வாங்க முடியாது!! காசு மேட்டர் இல்ல... இதுதான் காரணம்!

லம்போர்கினி (Lamborghini) சூப்பர் கார்கள் வருகிற 2026ஆம் ஆண்டு வரையில் அனைத்தும் புக் ஆகிவிட்டதாக ஓர் சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், லம்போர்கினியின் எதிர்கால திட்டங்களை பற்றியும், எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபலமான சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி வருடத்திற்கு வருடம் கார்கள் விற்பனையில் வளர்ச்சிக் கண்டு வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 10,000க்கும் அதிகமான கார்களை லம்போர்கினி விற்பனை செய்துள்ளது. அத்துடன், அடுத்த 2 வருடங்களுக்கான லம்போர்கினி கார்கள் ஏற்கனவே புக் ஆகிவிட்டன.

lamborghini sold out its supercars

அதாவது, உலகளவில் இதுவரையில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள தங்களது கார்களை கஸ்டமர்களுக்கு லம்போர்கினி டெலிவிரி செய்யவே 2026ஆம் ஆண்டு முடிந்துவிடுமாம். லம்போர்கினி கார்களுக்கு சமீப காலத்தில் கிடைத்துவரும் இந்த வரவேற்பு ஆனது ரெவல்டோ காரின் அறிமுகத்திற்கு பிறகு இன்னும் அதிகரித்துள்ளது. ரெவல்டோ ஆனது லம்போர்கினியின் முதல் ப்ளக்-இன் ஹைப்ரீட் கார் ஆகும்.

இவ்வாறு ஹைப்ரீட் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும், முழு-எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் லம்போர்கினி நிறுவனம் பொறுமை காக்கிறது. இதன் காரணமாக, முதல் முழு-எலக்ட்ரிக் லம்போர்கினி கார் 2028ஆம் ஆண்டில்தான் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் இறங்குவதற்கு முன்னர், கார்களில் பொருத்தப்படும் தொழிற்நுட்பங்களில் மேம்பட வேண்டும் என்பது லம்போர்கினியின் விரும்பமாக உள்ளது.

lamborghini sold out its supercars

அதாவது, இப்போது இருக்கும் தொழிற்நுட்பங்களை கொண்டு எலக்ட்ரிக் கார்களை உருவாக்க லம்போர்கினி விரும்பவில்லை. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்களில் பொருத்தப்படும் பேட்டரி திறனில் அட்வான்ஸ்டு நிலையை அடைய வேண்டும் என்பது லம்போர்கினி நிறுவனத்தின் நோக்கமாக உள்ளது. "நாங்கள் நாளை (எதிர்காலத்தில்) டெலிவிரி செய்வது சீனாவில் இருந்து மார்க்கெட்டில் பயன்படுத்துவதை விட பெரிய பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும்" என லம்போர்கினி சிஇஓ ஸ்டீபன் விங்கிள்மேன் தெரிவித்துள்ளார்.

லம்போர்கினியின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் ஏஜி, எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. இருப்பினும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி கூலிங் சிஸ்டத்தை உற்பத்தி செய்வதில் ஃபோக்ஸ்வேகன் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. அத்தகைய சூழலை சந்திக்க கூடாது என்பதில் லம்போர்கினி நிறுவனம் தெளிவாக உள்ளது.

lamborghini sold out its supercars

இதனால், எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் இறங்குவதை முடிந்தவரையில் தாமதப்படுத்தினாலும், கார்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவது லம்போர்கினி நிறுவனத்தை எலக்ட்ரிக்கை நோக்கி நகர்த்துகிறது. இதன்படி, கடந்த 60 வருடத்திலேயே மிக பெரிய தொகையை முதலீடு செய்ய இந்த இத்தாலிய லக்சரி கார் நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்த பெரிய முதலீட்டு தொகையில், இத்தாலியில் உள்ள தனது கார்கள் உற்பத்தி தொழிற்சாலையை முழுவதுமாக டிகார்பனைசேஷன் செய்ய லம்போர்கினி திட்டமிட்டுள்ளது. அதாவது, தனது கார்கள் உற்பத்தி முறைகளில் எந்த இடத்திலும் கார்பன் வெளியேற்றம் இருக்கக் கூடாது என லம்போர்கினி விரும்புகிறது. இதற்காக, 2026ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 500 புதிய பணியாளர்களை பணியில் அமர்த்த லம்போர்கினி திட்டமிட்டுள்ளது.

lamborghini sold out its supercars

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2026ஆம் ஆண்டு வரையிலான லம்போர்கினி கார்கள் அனைத்தும் புக் ஆகி இருப்பது, இந்த கார் நிறுவனத்திற்கு உலகளவில் வாடிக்கையாளர்கள் வழங்கும் வரவேற்பை வெளிக்காட்டுவதாக உள்ளது. இருப்பினும், எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் உடனடியாக இறங்காதது லம்போர்கினியின் முதிர்ச்சியை காட்டுகிறது. இந்த பொறுமையினால், எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையிலும் உலகின் முன்னணி நிறுவனமாக லம்போர்கினி விளங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 31, 2024, 22:50 [IST]
English summary
Lamborghini super cars sold out until 2026 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X