ரூ2 கோடிக்கு விற்பனைக்கு வரும் இந்த காரில் அப்படி என்னதான் இருக்குது? எப்ப வருது தெரியுமா?
லேண்ட்ரோவர் நிறுவனம் தற்போது தனது டிஃபெண்டர் ஆக்ட்டா என்ற காரை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் பவர்ஃபுல்லான காராக அறிமுகமாக உள்ளது. இந்த கார் இங்கிலாந்தில் வரும் 11-ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது. இந்த காரில் உள்ள இஞ்சின் திறன் எவ்வளவு? மற்றும் இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கிறது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
லேண்ட்ரோவர் நிறுவனம் தனது டிஃபெண்டர் அக்ட்டா என்ற காரை இன்று அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் வரும் 11ஆம் தேதி இங்கிலாந்தில் வைத்து முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. இந்த கார் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் களமிறங்குகிறது. உலகம் முழுவதும் இந்த காருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த காரின் இன்ஜினை பொறுத்தவரையில் 4.4லிட்டர் ட்வின் டர்போ மைல்டு ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 626எச்பி பவரையும் 750 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளது. டிஃபெண்டர் காலிலேயே அதிக பவர்ஃபுல் இன்ஜின் கொண்ட காராக இந்த கார் தான் இருக்கிறது. இந்த கார் 0-100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த லேண்ட்ரோவர் டிஃபெண்டர் ஆக்ட்டா கார் சாதாரண லேண்ட்ரோவர் டிஃபெண்டர் காரில் இருந்து ஏகப்பட்ட அப்டேட்களை பெற்றுள்ளது. முக்கியமாக இதன் சேஸிஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் 6d டைனமிக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த நிறுவனத்தின் சிறப்பான தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது.இந்த காரின் வெளிப்புற வடிவமைப்பை பொறுத்தவரை ரக்கடான லுக் கிடைக்கிறது .

இந்த கார் வித்தியாசமான 4வீல் டிரைவ் அம்சம் கொண்ட காராக இருக்கிறது. சற்று உயரமான அகலமான ஸ்டேன்ஸில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வீல் ஆர்ச்கள் நீட்டிக்கப்பட்டதாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் இதன் லுக் வித்தியாசமாக இருக்கிறது. இந்த காரில் புதிய வடிவமைப்பு கொண்ட பம்பர் வழங்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்றம் மற்றும் இறக்கம் ஆகிய பகுதிகளில் நல்ல அப்ரோச்சை தரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கார் மற்ற டிஃபெண்டர் மாடல் கார்களை விட அதிக ஆழம் கொண்ட தண்ணீரில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒரு மீட்டர் வரை ஆழம் கொண்ட தண்ணீர் தேங்கி கிடந்தாலும், அந்த இடத்தில் சாதாரணமாக கடந்து செல்லும் வகையில் இருக்கிறது. இந்த கார் டிஃபெண்டர் காரின் ஆக்ட்டா மோடு கொண்ட கார் என்பதால் இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன.

முக்கியமாக ஆஃப் ரோடு பெர்ஃபார்மென்ஸ் சிறப்பாக இருக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏபிஎஸ் மற்றும் லான்ச் கண்ட்ரோல்கள் இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சீட்டுகள் எல்லாம் மேம்பட்ட வடிவமைப்பு கொண்டதாக இருக்கிறது. இதன் வடிவமைப்பு சிறப்பான ரைடிங் அனுபவத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சீட் வடிவமைக்கப்பட்டுள்ள மெட்டீரியல் எல்லாம் நீடித்து உழைக்கக்கூடிய வகையிலும், அதிக கலர் ஆப்ஷன் கொண்ட வகையிலும் இருக்கிறது.
மேலும் இந்த காரில் தனித்துவமான பெயிண்ட் ஆப்ஷன்கள் கார்பன் பைபர் டீடெயில் உள்ளிட்ட பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக இந்த கார் ரூபாய் 2.65 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் குறித்த விலை விபரங்கள் இனி தான் தெரியவரும். பெரும்பாலும் இது ரூ 2.85 கோடி என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இந்த கார் இந்தியாவுக்கு வருவது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு பிறகு இது குறித்து அப்டேட்கள் எல்லாம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தாலும் பெரிய எண்ணிக்கையில் விற்பனையாகாது. வெகு சில கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாக வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிஃபெண்டர் காருக்கு என்று மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த காரை பார்க்க மிக பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் இருந்த காரை வாங்கக்கூடும். பல்வேறு அப்டேட்களுடன் இந்த கார் வருவதால் நிச்சயம் இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.


Click it and Unblock the Notifications









