என்னது தேவைக்கு ஏற்ப கண்ணாடி தானாவே அட்ஜெஸ்ட் ஆகுமா!.. பெங்களூருல காட்சி தர இருக்கும் வின்ஏஐ-ன் ஏஐ சாதனங்கள்!
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் வெகு விரைவில் சிஏஇவி எக்ஸ்போ நடைபெற இருக்கின்றது. வாகனத்துறையில் நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்வு இதுவாகும். நாளை மற்றும் நாளை மாறு நாள் (மார்ச் 14-15) வரை இந்த நிகழ்வை நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. ஒன்அரேபியா அறிக்கையின்படி, இந்த நிகழ்வில், வாகன துறைக்கான ஏஐ தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தரும் நிறுவனம் வின்ஏஐ கலந்துக்கொண்டு அதன் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாகன பயன்பாட்டை நம்ப முடியாத அளவிற்கு மேம்படுத்தக் கூடிய பல விதமான தொழில்நுட்பங்களை இந்த நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. அந்தவகையில், அதன் புதிய தொழில்நுட்பங்களான இன்டீரியர் சென்ஸ் மற்றும் சரவுண்ட் சென்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களை இந்த எக்ஸ்போவில் காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கர்நாடகா டிரேட் சென்டரிலேயே எக்ஸ்போ நடைபெற இருக்கின்றது. இங்கு பூத் எச்பி 102-103 ஆகியவை வின்ஏஐ-க்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன.

தொழில்நுட்பத்தை அனுபவித்து பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் (Interactive Experience): வின்ஏஐ அதன் தொழில்நுட்பத்தை வெறும் பார்வைக்காக மட்டுமின்றி அனுபவித்து பார்ப்பதற்கான வாய்ப்புகளை இந்த எக்ஸ்போவில் ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் வாயிலாக வின்ஏஜ இன் தயாரிப்புகள் மொபிலிட்டியை (வாகன பயன்பாட்டை) எந்த அளவிற்கு ஸ்மார்ட்டானதாக மேம்படுத்தும் என்கிற புரிதலைப் பெற்றுக் கொள்ள முடியும்.
புதுமையான பாதுகாப்பு தீர்வுகள் (Innovative Safety Solutions): வின்ஏஐ இப்போது உள்ள பாதுகாப்பு வழங்கும் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் தூக்கி சாப்பிடும் வகையில் அதன் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கி இருக்கின்றது. அந்தவகையில், அது தயார் செய்திருப்பதே இன்டீரியர்-சென்ஸ் ஆகும். டிரைவர் மற்றும் பயணிகள் என அனைவருக்கும் பலநிலைகளில் இது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே டிஓஎம்எஸ் எனும் தொழில்நுட்பம் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. டிரைவர் மற்றும் பயணிகளை மானிட்டரிங் செய்யும் சிஸ்டமே இதுவாகும். டிரைவர் தூங்குவது, கவனக் குறைவாக இருப்பது மற்றும் நேரத்திற்கு ஏற்ப எச்சரிக்கைகளை வழங்குவது இதன் பணியாகும். இத்துடன் மிர்ரர் சென்ஸ் மற்றும் டிரங்க் சென்ஸும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் டிரங்க் சென்ஸ் என்பது ஓட்டுநர் குடித்திருந்தால் அவரை வாகனம் ஓட்டுவதை தவிர்க்கச் செய்யும்.
இந்த தொழில்நுட்பம் இப்போதே உருவாக்கத்தில் உள்ளது. எலெக்ட்ரானிக் சென்சார்கள் வாயிலாக இது செயல்படும். இதற்கு அடுத்தபடியாக மிர்ரர் சென்ஸ் உள்ளது. இந்த தொழில்நுட்பத்திற்கு சிஇஎஸ் 2024 புதுமைக்கான விருதே கிடைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கண்ணாடிகள் ஆகும். இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் தானாகவே அந்த கண்ணாடிகள் அட்ஜெஸ்ட் ஆகிக் கொள்வதே அதன் சிறப்பு ஆகும்.
அட்வான்ஸ்டு சரவுண்ட் வியூ மானிட்டரிங் சிஸ்டம் (Advanced Surround View Monitoring): மேம்படுத்தப்பட்ட சுற்றுப்புறத்தைக் கண்கானிக்க உதவும் சிஸ்டமே இதுவாகும். இதன் அடிப்படையில் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா வாகனத்தில் பொருத்தப்படும். இது காரை சுற்றிலும் அரங்கேறும் நிகழ்வுகளைக் கண்கானித்து அதுகுறித்த தகவல்களை எச்சரிக்கையாக காருக்குள் வழங்கும். திரையில் படமாகவும் மற்றும் எச்சரிக்கை சமிக்ஞையாகவும் இது வழங்கப்படும்.
இந்த அம்சத்தின் வாயிலாக பார்க் செய்வது தொடங்கி வாகனங்களின் போக்குவரத்தைக் கண்கானித்தல் வரை என அனைத்தும் சுலபமாக மாறும். மிக முக்கியமாக பிளைண்ட் ஸ்பாட் என்கிற ஒன்றையே இல்லாததாக மாற்றுவதே இந்த அட்வான்ஸ்டு சரவுண்ட் வியூ மானிட்டரிங் சிஸ்டத்தின் பணியாகும். இதுமாதிரியான லேட்டஸ்ட் ஏஐ சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதனாலேயே வின்ஏஐ வாகனத்துறையில் முன்னணியில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மாதிரியான தொழில்நுட்பங்களையே வின்ஏஐ விரைவில் பெங்களூருவில் காட்சிப்படுத்த இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் நிறுவனம் இன்னும் பல சுவாரஷ்யமான தகவல்களையும் பார்வையாளர்களுடன் பகிர்ந்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்தியர்கள் மத்தியில் சிஏஇவி எக்ஸ்போ மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








