உல்லாச கப்பலை மிச்சும் வசதிகள்... இவ்வளவு பெரிய காரில் வெறும் 4 சீட் தான்!! மினி தியேட்டரே உள்ள இருக்கு!

லெக்ஸஸ் (Lexus) நிறுவனம் அதன் புதிய அல்ட்ரா-லக்சரி எம்பிவி காராக எல்.எம் 350எச் (LM 350h) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய லெக்ஸஸ் காரை பற்றியும், மற்ற லெக்ஸஸ் கார்களை காட்டிலும் இது ஏன் கொஞ்சம் ஸ்பெஷலானது என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.

உலகளவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக இருப்பது லெக்ஸஸ் ஆகும். நம் இந்தியாவிலும் சில கார் மாடல்களை லெக்ஸஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. நம் நாட்டு சந்தையை பொறுத்தவரையில், லெக்ஸஸ் கார்கள் கொஞ்சம் விலைமிக்கவையாகவே மக்களால் பார்க்கப்படுகின்றன. இருப்பினும், மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் கொஞ்ச சதவீத மக்கள் தங்களது காரை வாங்கினாலே போதும் என்கிற மனநிலையில் லெக்ஸஸ் உள்ளது.

lexus lm350h launch in india

இந்த நிலையில், இந்தியாவில் லெக்ஸஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக எல்.எம் 350எச் என்கிற சொகுசு கார் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனை கார் என சொல்வதை விட லக்சரி வேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு பெரியதானது மற்றும் பிரம்மாண்டமானது புதிய லெக்ஸஸ் எல்.எம் 350எச் ஆகும். ஆதலால், இந்த புதிய லெக்ஸஸ் காரில் சவுகரியத்துக்கு எந்தவொரு குறைச்சலும் இருக்காது.

உலகிலேயே சில வசதிகளை முதல்முறையாக பெற்றுள்ள புதிய தலைமுறை எல்.எம் 350எச் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இந்தியாவில் ரூ.2 கோடி மற்றும் ரூ.2.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. உலகில் பல வெளிநாட்டு மார்க்கெட்களில் வரவேற்பை பெற்றுள்ள இந்த லக்சரி லெக்ஸஸ் எம்பிவி கார் இந்தியாவில் 4-சீட் மற்றும் 7-சீட் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

lexus lm350h launch in india

உலகிலேயே முதல்முறையாக லெக்ஸஸ் எல்.எம்350 எச் கார் பெற்றிருக்கும் வசதிகளாவன, 48-இன்ச் அல்ட்ரா வைடு ஸ்க்ரீன், அகச்சிவப்பு கதிர்களை தடுக்கும் சென்சாரை கொண்ட ஏசி, பவர் சீட் லாங் ஸ்லைட் ரெயில், பல்வேறு விதங்களில் செயல்படக்கூடிய டிப்-அப் சீட், அதிர்வுகளை உணர்ந்து செயல்படக்கூடிய பிஸ்டன் வால்வு உள்ளிட்டவை ஆகும். இவை இல்லாமல் சில வசதிகள், லெக்ஸஸ் கார்களிலேயே முதல்முறையாக எல்.எம்350எச் காரில் வழங்கப்படுகின்றன.

நீக்கக்கூடிய ரிமோட் பேனல், ஆர்ம்ரெஸ்ட் & ஓட்டோமேன் ஹீட்டர்ஸ், தனித்தனியாக முன் & பின்பக்க ஆடியோ அவுட்புட் சிஸ்டம், உட்பக்கம் முழுவதற்கும் ஒரே மாதிரியான க்ளைமேட் கண்ட்ரோல், மென்மையாக செயல்படும் கதவுகள், பவர் ஸ்லைடிங் கதவுகளுக்கான சீ-சா ஹேண்டில் ஸ்விட்ச், எளிமையான டிரைவிங்கிற்காக வைகல் பிரேக்கிங் கண்ட்ரோல், காரின் க்ரில் பகுதியில் சாடின் எஃபெக்ட், முன்பக்க சஸ்பென்ஷனுக்கு ஹோலோ கால்ம்ஷெல் போன்றவை லெக்ஸஸ் கார்களிலேயே முதன்முதலாக எல்.எம்350எச் காரில் வழங்கப்பட்டுள்ளன.

lexus lm350h launch in india

இந்த காரின் முன்பக்கத்தில் மெல்லியதான ட்ரிபிள்-பீம் எல்இடி ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஹெட்லைட்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள க்ரில் பகுதி என்ஜினிற்கு தேவையான காற்றை வழங்க உதவுவது மட்டுமின்றி பயண அனுபவத்தையும் மேம்படுத்தும் என லெக்ஸஸ் தெரிவித்துள்ளது. எல்.எம்350எச் ஆனது லெக்ஸஸின் ஹைப்ரீட் கார் ஆகும்.

அதாவது, இந்த காரில் 2.5 லிட்டர் இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் உடன் நிக்கல் உலோக ஹைட்ரைடு பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. என்ஜின் மூலமாக மட்டும் அதிகப்பட்சமாக 184 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றலை கார் பெற முடியும். இந்த பவர்டிரெயின் சிஸ்டத்தில் இ-ஃபோர் டெக்னாலஜி எனப்படுகின்ற லெக்ஸஸின் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

lexus lm350h launch in india

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய லெக்ஸஸ் காரின் சிறப்பம்சமே இதன் அளவில் பெரிய தோற்றம் ஆகும். அத்துடன், சவுகரிய அம்சங்களும் தாராளமாக இருக்கும் என்பதால், பணக்காரர்கள் லாங் டிரைவ் செல்வதற்கு ஏற்ற காராக எல்.எம்350எச் இருக்கும். இந்த புதிய லெக்ஸஸ் காருக்கான புக்கிங் மிக விரைவில் துவங்கப்பட உள்ளது. விருப்பப்படுவோர், எல்.எம்350எச் காரை பற்றிய கூடுதல் விபரங்களை லெக்ஸஸ் இந்தியா நிறுவனத்தின் விர்ட்யூவல் ஷோரூம் வெப்சைட்டில் அறியலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, March 15, 2024, 21:58 [IST]
English summary
Lexus announces launch of lm 350h in india price features all details here
மேலும்... #லெக்ஸஸ் #lexus #luxury car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X