கஸ்டமர்களை காந்தம் மாதிரி ஈர்க்குது! காரின் விலை கோடி ரூபாயாக இருந்தாலும் மக்கள் வாங்கி குவிக்கிறாங்க!!
லெக்ஸஸ் (Lexus), உலகின் முன்னணி லக்சரி கார் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவிலும் லெக்ஸஸ் தனது கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் கார்கள் விற்பனையில் 14% வளர்ச்சியை லெக்ஸஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது. தற்போதுவரையில், இந்த 2024ஆம் ஆண்டில் லெக்ஸஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ள கார்களின் எண்ணிக்கை எத்தனை? என்னென்ன மாதிரியான கார்களை லெக்ஸஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது என்பது உள்ளிட்ட விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியா, லக்சரி கார் நிறுவனங்களுக்கும் சிறந்த சந்தையாக விளங்குகிறது. அதாவது, லக்சரி கார்களை வாங்குபவர்களும் நம் நாட்டில் நிறைய பேர் இருக்கின்றனர். இதன் காரணமாக, நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் கார்களை முடிந்தவரையில் இங்கேயே உற்பத்தி செய்ய லக்சரி கார் நிறுவனங்கள் விரும்புகின்றன. இந்த வகையில், லெக்ஸஸ் நிறுவனமும் அதன் சில கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த டொயோட்டாவின் லக்சரி கார்கள் நிறுவனமாக 1989ஆம் ஆண்டில் இருந்து லெக்ஸஸ் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் லெக்ஸஸ் இ.எஸ் செடான் காருக்கும், லெக்ஸஸின் மற்ற லக்சரியான எஸ்யூவி கார்களுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, லெக்ஸஸ் இ.எஸ் என்கிற லக்சரி செடான் கார் ஆனது இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் லெக்ஸஸ் விற்பனை செய்த மொத்த கார்களில் 55% ஆகும்.
அதாவது அந்த அளவிற்கு, லெக்ஸஸ் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் தேர்வு லெக்ஸஸ் இ.எஸ் காராக உள்ளது. அதேபோல், லெக்ஸஸ் ஆர்.எக்ஸ், என்.எக்ஸ் மற்றும் எல்.எக்ஸ் போன்ற லெக்ஸஸின் லக்சரி எஸ்யூவி கார்களின் விற்பனையும் கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களை காட்டிலும் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் சுமார் 60% அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் முழு கவனம் செலுத்துவதால், இந்த வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிவித்துள்ள லெக்ஸஸ் இந்தியா நிறுவனத்தின் துணை தலைவர் டன்மே பட்டாச்சார்யா, புதிய லெக்ஸஸ் என்.எஸ்350எச் ஓவர்டிரெயில் காரை அறிமுகம் செய்தது மற்றும் வாரண்டி புரோகிராமை அதிகப்படுத்தியது போன்றவை தங்களது வளர்ச்சிக்கு காரணம் என கூறியுள்ளார்.
இந்தியாவில் லெக்ஸஸ் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்பு 3 வருட அல்லது 1 இலட்சம் கிமீ உத்தரவாதத்தை லெக்ஸஸ் இந்தியா நிறுவனம் வழங்கி வந்தது. அதாவது, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரையில் உத்தரவாதம் செல்லுப்படியாகும். இந்த உத்தரவாத காலத்தை கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் சுமார் 8 வருடங்கள் அல்லது 1 லட்சத்து 60,000கிமீ ஆக இந்த நிறுவனம் அதிகரித்துள்ளது.

லெக்ஸஸ் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம், இ.எஸ் செடான் கார் மற்றும் என்.எக்ஸ், ஆர்.எக்ஸ், எல்.எக்ஸ் எஸ்யூவி கார்களுடன் எல்.எம் என்கிற லக்சரியான எம்பிவி கார் ஒன்றும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட என்.எக்ஸ் 350எச் ஓவர்டிரெயில் காரும் இந்தியாவில் விற்பனையில் உள்ளது.
மற்ற கார் நிறுவனங்களை போன்று, லெக்ஸஸின் எதிர்கால திட்டமும் எலக்ட்ரிக் தான். 2035ஆம் ஆண்டிற்குள் உலகளவில் விற்பனை செய்யும் கார்கள் அனைத்தையும் முற்றிலுமாக எலக்ட்ரிக்கிற்கு மாற்றும் திட்டத்தில் லெக்ஸஸ் உள்ளது. அதற்கு முன்னதாக, ஐரோப்பாவில் இந்த மாற்றத்தை 2030ஆம் ஆண்டிற்கு உள்ளாகவே கொண்டுவர லெக்ஸஸ் விரும்புகிறது. இந்தியாவில் ஹைப்ரீட் கார்களை மட்டுமே லெக்ஸஸ் விற்பனை செய்கிறது, எலக்ட்ரிக்கில் இன்னும் ஒரு காரை கூட அறிமுகம் செய்யவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் எஸ்யூவி கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதாவது, எஸ்யூவி ரக கார்களை வாங்குவது மார்க்கெட்டில் ஒரு டிரெண்ட்டாக மாறி வருகிறது. ஆதலால், இதில் லெக்ஸஸ் நிறுவனமும் பயன்பெறுவதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. லெக்ஸஸ் கார்களின் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 14% அதிகரித்து இருப்பது, இந்தியாவில் சொகுசு கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதை வெளிக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications









