பெட்ரோல் தீர்ந்து போனாலும் கவலையில்லை... தீபாவளியை டார்க்கெட் செய்யும் புது லெக்ஸஸ் கார்!!

லெக்ஸஸ் (Lexus) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய சொகுசு காராக இ.எஸ் 300எச் லக்சரி பிளஸ் எடிசன் (ES 300h Luxury Plus Edition) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பிரபலமான லெக்ஸஸ் இ.எஸ் 300எச் காரின் புதிய ஸ்பெஷல் எடிசனாக இந்த லக்சரி பிளஸ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெயருக்கேற்ப, இது விலைமிக்க இ.எஸ் 300எச் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெக்ஸஸ் இ.எஸ் 300எச் காரின் டாப் லக்சரி வேரியண்ட்டில் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் புதிய லக்சரி பிளஸ் எடிசன் காரில் கிடைக்கும். இந்த புதிய லெக்ஸஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இந்தியாவில் கார்கள் விற்பனை அதிகரிக்கும் என்பதை அறிந்து, கார் நிறுவனங்கள் புதிய புதிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. முற்றிலும் புதியதாக ஒரு காரை அறிமுகம் செய்ய முடியாவிடினும், குறைந்தப்பட்சம் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் காரில் புதிய ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

lexus es300h luxury plus edition

அந்த வகையில், லெக்ஸஸ் இந்தியா நிறுவனம் அதன் புதிய லெக்ஸஸ் இஎஸ் 300எச் லக்சரி பிளஸ் எடிசன் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மற்ற லெக்ஸஸ் இஎஸ் 300எச் கார்களில் இருந்து வித்தியாசப்பட்டு தெரிய வேண்டும் என்பதற்காக, இந்த புதிய காருக்கு ஏகப்பட்ட புதிய ஆக்ஸஸரீகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், விலையில் எந்த மாற்றமும் இல்லை.

அதாவது, லெக்ஸஸ் இஎஸ் 300எச் காரின் லக்சரி வேரியண்ட்டின் அதே ரூ.69.70 லட்சம் என்கிற விலையில் தான் புதிய இ.எஸ் 300எச் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய இஎஸ் 300எச் லக்சரி பிளஸ் எடிசன் காரின் முன்பக்கத்தில் சில்வர் நிறத்தில் க்ரில், டெயில்லைட்களில் க்ரோம் கார்னிஷ் மற்றும் காருக்குள், ஒளிரக்கூடிய ஸ்கஃப் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

காருக்கு உள்ளே ஸ்டேரிங் சக்கரத்தில் வழங்கப்பட்டுள்ள லெக்ஸஸ் லோகோ எல்இடி தரத்தில் ஒளிரக்கூடியதாகவும், அதேபோல் முன் கதவுகளில் ஒளிரக்கூடிய லெக்ஸஸ் லோகோக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், காருக்குள் பின் இருக்கை பயணிகளுக்காக இருக்கைகளில் தலையணை இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் சேர்க்கப்பட்டுள்ளது.

மற்றப்படி, பவர்டிரெயின் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. லெக்ஸஸின் ஹைப்ரீட் காரான இஎஸ் 300எச் -இல் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 240-வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. என்ஜின் + மோட்டார் இவை இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக 214 பிஎச்பி மற்றும் 221 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்குகின்றன.

இந்த பவர்டிரெயின் சிஸ்டத்துடன் இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஹைப்ரீட் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்களில் மட்டுமே இ-சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் லெக்ஸஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான காராக இஎஸ் 300எச் விளங்குகிறது. எந்த அளவிற்கு என்றால், இந்தியாவில் விற்பனையாகும் லெக்ஸஸ் கார்களுள் பாதிக்கு மேல் இஎஸ் 300எச் ஆகும்.

வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் முழு காராக உருவாக்கப்படும் லெக்ஸஸ் இஎஸ் 300எச் காருக்கு விற்பனையில் ஆடி ஏ4, மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்கள் போட்டியாக விளங்குகின்றன. இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால், இஎஸ் 300எச் காரின் விலைகளை லெக்ஸஸ் நிறுவனத்தால் குறைவாக நிர்ணயிக்க முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லெக்ஸஸ் இஎஸ் 300எச் ஆனது இந்தியாவில் ஏற்கனவே பிரபலமான காராக விளங்குகிறது. இத்தகைய காரில் புதிய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது இந்த லெக்ஸஸ் காரின் விற்பனையை அதிகரிக்கும். புதிய இஎஸ் 300எச் லக்சரி பிளஸ் எடிசன் கார் ஆனது லெக்ஸஸ் லோகோ உடன் பெடில் லேம்ப்கள் மற்றும் ஒளிரக்கூடிய ஸ்கஃப் தட்டுகள் என தோற்றத்தில் மட்டுமின்றி, பயணிகளின் சவுகரியத்திலும் மேம்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 7, 2024, 8:00 [IST]
English summary
Lexus india launches new es300h luxury plus edition price features all details here
மேலும்... #lexus #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+