பணக்காரர்கள் இப்போதே ஷோரூமில் குவிய போறாங்க!! இந்த மாதிரி ஹைப்ரீட் காருக்கு எப்போதுமே டிமாண்ட் இருக்கு!
லெக்ஸஸ் (Lexus) நிறுவனம் அதன் புதிய என்.எக்ஸ் 350எச் ஓவர்டிரெயில் (NX 350h Overtrail) லக்சரி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சொகுசு காரின் விலை மற்றும் மற்ற சிறப்பம்சங்களை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் லக்சரி கார்கள் பிரிவு லெக்ஸஸ் ஆகும். அதாவது, டொயோட்டா நிறுவனம் அதன் சொகுசு கார்களை லெக்ஸஸ் பிராண்டின்கீழ் விற்பனை செய்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் புதிய லெக்ஸஸ் காராக என்.எக்ஸ்350எச் ஓவர்டிரெயில் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய லெக்ஸஸ் என்.எக்ஸ்350எச் ஓவர்டிரெயில் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.71.17 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமான லெக்ஸஸ் என்.எக்ஸ் 350எச் கார் உடன் ஒப்பிடுகையில், புதிய ஓவர்டிரெயில் மாடல் ஆனது தோற்றத்தில் காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் உள்ளது. இதனால், இரண்டிற்கும் இடையே தோற்றத்தில் சில வேறுப்பாடுகள் உள்ளன.
லெக்ஸஸ் என்.எக்ஸ் 350எச் ஓவர்டிரெயில் காரில் புதிய பிரத்யேகமான பெயிண்ட் ஆப்ஷனாக மூன் டெசர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பாலைவன மணலின் நிறத்தில் கார் கிடைக்கும். அதேநேரம், காரை சுற்றிலும் க்ரில், கதவு மிரர்கள், டோர் ஃப்ரேம், ரூஃப் ரெயில்கள் மற்றும் கதவு கைப்பிடிகள் என நிறைய இடங்களில் பிளாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

காரின் அலாய் சக்கரங்கள் மேட் ஃபினிஷிங்கில் கருப்பு நிறத்தில் உள்ளன. இந்த சக்கரங்களில் பயண சவுகரியத்துக்காக உயர் தரத்திலான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சக்கரங்கள் நன்கு பெரியதாக உள்ளதால், தரைக்கும் காரின் அடிப்பகுதிக்கும் இடையே தூரம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த காரில், ரைடிங் ஸ்டைல் & சாலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளக்கூடிய சஸ்பென்ஷன் உள்ளது.
காருக்கு உள்ளே கேபின் முழுவதுமாக கருப்பு & வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. லெக்ஸஸ் நிறுவனத்தின் 4ஆம் தலைமுறை ஹைப்ரீட் சிஸ்டம் புதிய என்.எக்ஸ் 350எச் ஓவர்டிரெயில் காரில் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த காரில் 2.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக இவற்றின் வாயிலாக 240 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். என்.எக்ஸ் 350எச் காரின் ஏரோடைனாமிக்கில் லெக்ஸஸ் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. அதேபோல், காரின் தொழிற்நுட்பங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, டாடா கம்யூனிகேஷன் மாடுலே (DCM) போன்ற கனெக்டட் தொழிற்நுட்பங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல், கார் திருடு போகாமல் தடுக்க இ-கால், திருடப்பட்ட வாகனத்தை டிராக் செய்தல், ரிமோட் இம்பொபைலிசேஷன், டிரைவர் அலர்ட் மற்றும் ஃபைண்ட் மை கார் உள்ளிட்ட தொழிற்நுட்ப வசதிகளும் இந்த சொகுசு காரில் இடம்பெற்றுள்ளன. கார் எப்போது சர்வீஸ் செய்யப்பட்டது, சர்வீஸுக்கு ஆகும் செலவு, சர்வீஸ் ரிமைண்டர் உள்ளிட்ட டேடாகளையும் இந்த காரில் சேமித்து வைக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு தொழிற்நுட்ப அம்சங்கள் மிக்கதாக புதிய லெக்ஸஸ் என்.எக்ஸ் 350எச் லக்சரி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன், மாடர்ன் கார்களில் வழக்கமாக வழங்கப்படும் அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. ஆதலால், என்.எக்ஸ் 350எச் காரின் தோற்றத்தில் இருந்து தொழிற்நுட்ப அம்சங்கள் வரையில் அனைத்தையும் லெக்ஸஸ் நிறுவனம் பார்த்து, பார்த்து கவனமுடன் வடிவமைத்துள்ளது.


Click it and Unblock the Notifications









