இப்படிப்பட்ட கார்கள் இருக்கிறதே பலருக்கு தெரியாது - எங்கிருந்து தான் கஸ்டமர்கள் வருகிறார்கள் என்றே தெரியல!!

லெக்ஸஸ் (Lexus), உலகின் முன்னணி சொகுசு கார் நிறுவனங்களுள் ஒன்று. பிரபலமான டொயோட்டாவின் துணை பிராண்டாக லெக்ஸஸ் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் கார்கள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், நம் நாட்டில் லெக்ஸஸ் என்கிற கார் பிராண்டில் இருந்து கார்கள் விற்பனை செய்யப்படுவதே பலருக்கு தெரிவதில்லை. இருந்த போதிலும், இந்தியாவில் கார்கள் விற்பனையில் அபரிதமான வளர்ச்சியை லெக்ஸஸ் கண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் பலருக்கு தெரியாவிடினும் லெக்ஸஸ் நிறுவனத்திற்கு உலகளவில் நம் நாடு முக்கியமான சந்தைகளுள் ஒன்றாகும். அதற்கேற்றாற்போல், இந்தியாவில் லெக்ஸஸ் கார்கள் விற்பனை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் இந்த 2024ஆம் ஆண்டில் லெக்ஸஸ் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.

lexus india registers 10 growth

கடந்த 2023ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களை காட்டிலும் நடப்பு 2024ஆம் ஆண்டில் அதே 9 மாதங்களில் 10% அதிக கார்களை லெக்ஸஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. அதேபோல், இந்த 2024ஆம் ஆண்டில் ஏப்ரல்- ஜூன் மாதத்தில் விற்பனை செய்த கார்களை காட்டிலும் ஜூலை- செப்டம்பரில் லெக்ஸஸ் இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 8% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் லெக்ஸஸ் காராக முதலிடத்தை லெக்ஸஸ் இஎஸ் பிடித்துள்ளது. இந்தியாவிலேயே மேட்-இன்-இந்தியா காராக உற்பத்தி செய்யப்படும் லெக்ஸ்ஸ இஎஸ் கார்கள் லெக்ஸஸ் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 52% பங்களிப்பை கொண்டுள்ளன. அதாவது, இந்தியாவில் வாங்கப்படும் லெக்ஸஸ் கார்களுள் பாதிக்கு மேற்பட்டவை லெக்ஸஸ் இஎஸ் கார்களாகும்.

lexus india registers 10 growth

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதை இது வெளிக்காட்டுகிறது. லெக்ஸஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த லக்சரி செடான் ரக காராக இஎஸ் விளங்குகிறது. அதேநேரம், இந்தியாவில் லெக்ஸஸ் நிறுவனத்தின் எஸ்யூவி கார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. லெக்ஸஸில் இருந்து ஆர்.எக்ஸ் மற்றும் என்.எக்ஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. நிறுவனத்தின் மொத்த விற்பனையில் இவற்றின் பங்களிப்பு 23% ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் லெக்ஸஸின் மாடர்ன் காரான எல்.எம் ஒட்டுமொத்த விற்பனையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவில் லெக்ஸஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதன் அசத்தலான வாரண்டி திட்டங்கள் ஒரு காரணமாகும். இந்தியாவில் லெக்ஸஸ் நிறுவனம் அதன் கார்களுக்கு 8 வருட அல்லது 1.6 லட்ச கிமீ உத்தரவாதத்தை வழங்குகிறது. இந்த வாரண்டி திட்டத்தை கடந்த 2024 ஜூன் மாதத்தில் தான் லெக்ஸஸ் அறிமுகம் செய்தது.

lexus india registers 10 growth

இதன் உடன் 5 வருடத்திற்கான ரோடு சைடு அசிஸ்டன்ஸையும் தனது காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு லெகஸஸ் வழங்குகிறது. இதனை 2024 பிப்ரவரி மாதத்தில் லெக்ஸஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த வரிசையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொழிற்சாலையிலேயே கார்களுக்கு உயர் தரத்திலான கோட்டிங்கை வழங்கும் திட்டத்தை லெக்ஸஸ் அறிமுகம் செய்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான புது புது திட்டங்களினால் தான் இந்தியாவில் லெக்ஸஸ் கார்களின் விற்பனை இந்த 2024ஆம் வருடத்தில் 10% அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இஎஸ் செடான் காரையும் அவ்வப்போது லெக்ஸஸ் நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது. சமீபத்தில் கூட லெக்ஸஸ் இஎஸ் லக்சரி பிளஸ் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 9, 2024, 22:47 [IST]
English summary
Lexus registers 10 percent growth in car sales in india check all details here
மேலும்... #lexus #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X