இந்திய சாலையில் தென்பட்ட லிஜியர் மைலி குட்டி இ-கார்.. பைக் விலையில் விற்பனைக்கு வர போகுதா!!
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் லிஜியர் (Ligier)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக மைலி (Myli) இருக்கின்றது. இந்த கார் மாடலே இந்திய சாலையில் தென்பட்டு இருக்கின்றது. சோதனையோட்டத்திற்கு இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்ட யூனிட் இது என்பது தெரிய வந்திருக்கின்றது. காரில் இடம் பெற்றிருந்த ஸ்டிக்கர்களும் அதையே உறுதி செய்கின்றன. லிஜியர் மைலி, ஓர் குட்டியான உருவ அமைப்பைக் கொண்ட மின்சார கார் மாடல் ஆகும். இரண்டு கதவுகளை மட்டுமே அது கொண்டிருக்கும்.
டோர் மட்டுமல்ல இருக்கையும் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து செல்கின்ற வகையில் இருக்கும். இத்தகைய காரே இந்தியாவில் சோதனையோட்டத்திற்காக பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த இறக்குமதி செய்யப்பட்ட வாகனமே, பிக்-அப் டிரக் வாகனத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. அப்போது எடுக்கப்பட்ட படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.

அராய் (ARAI)-இன் சோதனைக்காக இந்த கார் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. விற்பனைக்கான அனுமதியைப் பெறும் நோக்கிலேயே இவ்வாறு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே விரைவில் லிஜியர் மைலி குட்டி எலெக்ட்ரிக் கார் சந்தையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV)-க்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். குறிப்பாக, விலையில் மிகவும் சவாலானதாக லிஜியர் மைலி அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாக அதன் குட்டியான தோற்றம் மற்றும் இரண்டு சீட்டர் வசதி உள்ளிட்டவை இருக்கின்றன.

Source: 91wheels ஏற்கனவே இந்தியாவில் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சிட்ரோன் (Citroen) நிறுவனம் கால் தடம் பதித்து, அதன் மின்சார மற்றும் ஐசிஇ கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை. குறைவான விலையில் அது அதன் பிரீமியம் தர கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற போதிலும், இந்தியர்கள் சிட்ரோன் கார்களுக்கு பெரிய அளவில் வரவேற்பை வழங்காத நிலையே தென்படுகின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே மற்றுமொரு பிரெஞ்சு நாட்டு நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளையில், லிஜியர் இந்தியாவில் கால் தடம் பதித்தால் மக்களின் மனதைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனெனில், இந்தியாவில் இப்போது மின்சார கார்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதைவைத்தே லிஜியர் இந்தியாவில் சக்சஸ்ஃபுல் பிராண்டாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக சந்தையில் இந்த கார் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கூட் (G.OOD), ஐடியல் (I.DEAL), இ-பிக் (E,PIC) மற்றும் ரிபெல் (R.EBEL) ஆகியவையே அவை ஆகும்.
இதன் ஆரம்ப ரேஞ்ச் திறன் 63 கிமீ ஆகும். அதேவேளையில், இதன் உயர் நிலை தேர்வு அதிகபட்சமாக 123 கிமீ வரையில் ஓர் முழு சார்ஜில் பயணிக்கும். இத்தகைய குறைவான ரேஞ்ச் திறனைக் கொண்ட காராகவே உலக சந்தையில் இந்த கார் விற்பனையில் இருக்கின்றது.
இத்தகைய காரே தற்போது இந்தியாவில் அதன் தரிசனத்தை வழங்கி இருக்கின்றது. இரண்டு சக்கர வாகன பயன்பாட்டாளர்களைக் குறி வைத்தே இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது எப்போது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இருப்பினும் விற்பனைக்கு வரும்பட்சத்தில் பிரீமியம் டூ-வீலர்களுக்கே சவால்விடும் விலையில் அது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 4 லட்சம் அல்லது ரூ. 5 லட்சம் என்கிற விலையிலேயே அது விற்பனைக்கு என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. விலை குறைவானதாக இருந்தாலும் இன்றைய நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் பலவும் அதில் இருக்கும்.
அந்தவகையில், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்ட 10 அங்குல தொடுதிரை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எச்டி திறன் கொண்ட கேமிரா உள்ளிட்ட அம்சங்களே லிஜியர் மைலி காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுபோன்று இன்னும் பல்வேறு அம்சங்கள் லிஜியர் மைலி காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குட்டியான எலெக்ட்ரிக் கார்களைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய கார்களுக்கே நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவே, லிஜியர்-க்கு நல்ல டிமாண்ட் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், இந்தியாவில் இது இன்னும் அதிக ரேஞ்ச் தரக் கூடியதாக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








