சொகுசா பின்னிருக்கையில் அமர்ந்து பயணிக்கணுமா? இந்தா பிடிங்க 5கார்கள் லிஸ்ட்! எப்படி ராஜா பகதூர் மாதிரி இருக்கா
டிராவல் பண்ணும்போது சொகுசாக அமர்ந்து பயணிக்க விரும்புபவரா நீங்க? உங்களைப் போன்றவர்களுக்கு என்றே இந்தியாவில் உள்ள வாகன உற்பத்தியாளர்கள் அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் வசதியை கார்களில் மிக அதிகளவில் வழங்கத் தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில், கார்களில் அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்குவதில் இருக்கைகளே முதல் இடத்தில் இருக்கின்றன.
இந்த இருக்கைகள் விஷயத்தில் எந்த கார் மாடல்கள் பெஸ்ட்டானது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, ரூ. 13 லட்சத்திற்கும் குறைவான விலையில் அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் பின்னிருக்கையைக் கொண்ட கார்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz): மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் வசதிக் கொண்ட பின்னிருக்கைளைக் கொண்ட கார்களின் பட்டியலில் மாருதி சுஸுகியின் இந்த தயாரிப்பும் இடம் பிடித்திருக்கின்றது. இது ஓர் சி பிரிவு செடான் வகை கார் மாடல் ஆகும்.
இந்த காரை இந்திய வாகன உலகம் அம்பாசிடர் காருக்கு மாற்றாக பார்க்கின்றது. இதனால்தான் இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் பலரின் பயன்பாட்டிற்கு இந்த காரே அதிகாரப்பூர்வ வாகனமாக வழங்கப்படுகின்றது. மாருதி சுஸுகி சியாஸ் இந்தியாவில் ரூ. 9.40 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரில் ஒட்டுமொத்தமாக ஐந்து பேர் வரை பயணிக்க முடியும். அதேவேளையில் பின்பக்கத்தில் மட்டும் மூன்று பேர் வரை பயணிக்க முடியும். ஆனால், இரண்டு பேராக பயணிக்கும்போது மிக மிக சிறந்த ரைடு அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக, ஹேண்ட் ரெஸ்ட் போன்றவற்றை பயன்படுத்திய வண்ணம் பயணித்துக் கொள்ள முடியும். இதுதவிர, ஹெட்ரெஸ்ட்டும் பின்னிருக்கையாளர்களுக்கு என இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை இந்த காரில் மாருதி சுஸுகி பின்னிருக்கையாளர்களுக்கு என பிரத்யேகமாக வழங்கி இருக்கின்றது.

ஹோண்டா சிட்டி (Honda City): இந்தியாவின் மற்றுமொரு சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் பின்னிருக்கைகளைக் கொண்ட செடான் வகை கார் மாடலே சிட்டி ஆகும். இது இந்தியாவில் ரூ. 11.70 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹோண்டா நிறுவனத்தின் மிக சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக சிட்டி காட்சியளிக்கின்றது. இந்த காரின் பின்னிருக்கையில் கப் ஹோல்டருடன் தாங்கிய ஹேண்ட் ரெஸ்ட் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், மூவருக்கான ஹெட் ரெஸ்ட்டும் வழங்கப்பட்டு உள்ளது. இவையே சொகுசான ரைடு அனுபவத்தை பின்னிருக்கையாளர்களுக்கு வழங்க உதவியாக இருக்கின்றன.

ஹோண்டா எலிவேட் (Honda Elevate): இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் நீண்ட காலம் கழித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் எஸ்யூவி ரக காரே எலிவேட் ஆகும். இதுவே நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் காராகவும் காட்சியளிக்கின்றது. மிக சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ், பெட்டி போன்ற உடல் அமைப்பு ஆகியவற்றை இந்த கார் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே இந்த காரின் பக்கம் இந்தியர்கள் ஈ போல் தற்போது மொய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுமட்டுமில்லைங்க இந்த காரில் உள்ள தொழில்நுட்ப அம்சங்களும் இந்தியர்களைக் கவரக் கூடியதாகவே இருக்கின்றன. மேலும், இந்த காரில் உள்ள பெஸ்ட்டான அம்சங்களில் பின்னிருக்கையும் ஒன்றாகும். மிகவும் சாஃப்ட்டான இருக்கை இதுவாகும். முன் பக்கத்தில் இருவரும், பின்னிருக்கையில் மூவரும் அமர்ந்து பயணிக்க முடியும். இருவர் மட்டுமே பயணிக்கும்போது ஹேண்ட் ரெஸ்ட்டை இந்த காரில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 (Maruti Suzuki XL6): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிகம் பிரீமியம் தர அம்சங்கள் எம்பிவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த காரில் ஆறு பேர் வரை தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். இரண்டாவது வரிசை மட்டுமின்றி மூன்றாவது வரிசை இருக்கையில் உள்ளவர்களும் தாராளமான இட வசதியுடன் அமர்ந்து பயணிக்க முடியும்.
இதனால்தான் இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு வரவேற்பு மிக சிறப்பாக கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மாருதியின் நெக்ஸா ஷோரூம் வாயிலாகவே எக்ஸ்எல்6 விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 11.61 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

கியா கேரன்ஸ் (Kia Carens MPV): இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் சற்று விலை குறைவான எம்பிவி ரக கார் மாடல்களில் கேரன்ஸும் ஒன்றாகும். இந்த காரில் ஆறு முதல் ஏழு பேர் வரை பயணிக்க முடியும். குறிப்பாக, இதன் நடு (இரண்டாவது) வரிசை இருக்கை அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கக் கூடியதாக இருக்கின்றது.
இதிலும் ஹெட்லெஸ்ட் மற்றும் ஹேண்ட் ரெஸ்ட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், இதன் இருக்கையும் அதிக மிருதுவானதாகக் காட்சியளிக்கின்றது. ஆகையால், நெடுந்தூர பயணங்களுக்கு ஏற்ற எம்பிவியாகவும் கியா கேரன்ஸ் காட்சியளிக்கின்றது. இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 10.45 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் ரூ. 13 லட்சத்திற்கும் விலை குறைவான அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் பின்னிருக்கைகளைக் கொண்ட கார்களையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். இந்த லிஸ்ட் அதிக சொகுசான ரைடு அனுபவத்தை பின்னிருக்கையில் அமர்ந்தபடி அனுபவிக்க விரும்பும் மற்றும் இந்த மாதிரியான காரை விரும்புபவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்புகின்றோம்.


Click it and Unblock the Notifications









