காசு கேட்டா இல்லன்னு சொல்லுறாங்க ஆனா காஸ்ட்லி காரா வாங்கி குவிச்சிருக்காங்க! எப்படி தெரியுமா?
இந்தியாவில் கடந்த நிதியாண்டில் சொகுசு கார்களின் விற்பனையை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பால்வீர் சிங் தில்லான் கூறியுள்ளார். கடந்த 2022-23-ம் நிதியாண்டை விட 2023-24ம் நிதியாண்டில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
சொகு கார்களின் விற்பனை என்பது குறைவாக தான் இருக்கும். ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனையில் சொகுசு கார்களின் விற்பனை என்பது 2 சதவீதம் தான் இருக்கும். இப்படியாக கடந்த நிதியாண்டில் மொத்தம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சொகுசு கார்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளதாக ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதுவே கடந்த 2022-23-ம் நிதியாண்டில் மொத்தம் 48,500 கார்கள் மட்டுமே விற்பனையாகிய இருந்ததாகவும், தற்போது அதைவிட கூடுதலாக விற்பனையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆட்டோமொபைல் செக்டார் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே வருவதாகவும், ஒரு பக்கம் வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், மறுபக்கம் சொகுசு கார்களை மக்கள் அதிகம் விரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆடி நிறுவனம் கடந்தாண்டு 7,931 வாகனங்களை விற்பனை செய்து 89 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவே கடந்த 2022 ஆம் நிதியாண்டில் 4,187 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதே போல மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் கடந்த 2022 நிதியாண்டில் 1582 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 17,408 வாகனங்களை விற்பனை செய்து 10% வளர்ச்சியை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனமும் கடந்த நிதியாண்டில் 14,172 வாகனங்களை விற்பனை செய்து மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் சொகுசு கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் எல்லாம் இந்த நிதியாண்டில் இரட்டை இலக்க அளவிலான வளர்ச்சியை பெற்றுள்ளன. இது இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை அதிகரித்து வருவதற்கு ஒரு நல்ல சிக்னலாக இருக்கிறது.
இந்தியாவில் என்னதான் பணக்காரர்கள் அதிகமாக இருந்தாலும், சொகுசு கார்களின் விற்பனை குறிப்பிட்ட அளவு தான் இருக்கிறது. இன்று மிடில் கிளாஸ் மக்கள் தான் அதிகமாக கார்களை வாங்கி வருகிறார்கள். சொகுசு கார்கள் முற்றிலுமாக கட்டமைக்கப்பட்ட காராக விற்பனைக்கு வருவதாக அதன் விலை அதிகமாக இருக்கிறது. அதன் காரணமாகவே பலர் இந்த கார்களை வாங்க தயங்கம் காட்டி வருகிறார்கள்.

இந்தியாவில் சொகுசு கார்களின் விற்பனை எதிர்காலத்தில் அதிகமாகும் பட்சத்தில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவிலேயே ஆலையை அமைத்து சொகுசு கார்களை தயார் செய்தால் இன்னும் அதிகமான சொகுசு கார்கள் குறைவான விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதற்கான சூழ்நிலைகள் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் சொகுசு கார்களின் விற்பனை அதிகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. மக்கள் இன்று எண்ட்ரி ரக கார்களை வாங்கி வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும். அதற்குத் தகுந்தார் போல் விற்பனையும் அதிகரிக்கும்.
இது குறி வைத்துதான் சொகுசு வாகனங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் தனது மார்க்கெட்டை பெரிதாக்க, விற்பனை அதிகரிக்க, பல்வேறு யுக்திகளை பயன்படுத்த தொடங்கியுள்ளன. இந்திய மார்க்கெட்டில் எதிர்காலத்தில் சொகுசு கார்களின் விற்பனை நிச்சயம் அதிகமாக ஏராளமான வாய்ப்புகள் நிச்சயம் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது வாகன விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா மாறியுள்ள நிலையில், அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா எப்படியாக மாறப்போகிறது என்பதை கணக்கிட்டு இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றன. அதில் சொகுசு கார் தயாரிக்கும் நிறுவனங்களின் முதலிடம் முக்கிய பங்கு வகிக்கிறது.


Click it and Unblock the Notifications









