மாருதி எர்டிகாவை பற்றி தெரிய வந்த உண்மை! இனி குடும்பத்தோட பயணிக்க ஒருத்தரும் இந்த கார தேர்ந்தெடுக்க மாட்டாங்க!
இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலாக எர்டிகா (Ertiga) இருக்கின்றது. இது ஓர் எம்பிவி (MPV) ரக கார் மாடல் ஆகும். இந்த காரை மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் எர்டிகா எம்பிவி காரை ஆப்பிரிக்க நாட்டிலும் சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலின் பாதுகாப்பு தரத்தையே ஆய்வு செய்யும் பொருட்டு குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு சமீபத்தில் அதனை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது.
இந்த ஆய்வில் மாருதி சுஸுகி எர்டிகா மண்ணைக் கவ்வி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐந்திற்கு ஒரு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே எர்டிகா கார் மாடல் பெற்றிருக்கின்றது. இது எர்டிகா எம்பிவி காரில் நிலவும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரம் பற்றிய மதிப்பாகும்.

அதேநேரத்தில் சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் ஐந்திற்கு இரண்டு ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது. இந்த மதிப்பெண்கள் எர்டிகாவின் மிக மிக மோசமான பாதுகாப்பு தரத்தை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. காரின் முன்பக்கத்தின் தரத்தை ஆய்வும் செய்யும்போது மணிக்கு 64 கிமீ வேகத்திலும், பக்கவாட்டு பகுதியின் தரத்தை ஆய்வும் செய்யும்போது மணிக்கு 50 கிமீ வேகத்திலேயே இயக்கப்பட்டு இருக்கின்றது.
குளோபல் என்சிஏபி-யின் இந்த ஒட்டுமொத்த ஆய்வில் எர்டிகா தரமற்ற வாகனம் என்றே தெரிய வந்திருக்கின்றது. தற்போது ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் எர்டிகா ஆப்பிரிக்க நாட்டிற்கானதாக இருந்தாலும், இந்த தகவல் இந்தியர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியர்கள் பலரின் பிரியமான எம்பிவி ரக கார் மாடலாக எர்டிகா இருக்கின்றது.

மேலும், பலர் குடும்பத்துடன் வெளியூர் அல்லது சுற்றுலா இந்த காரையே தேர்வு செய்துக் கொண்டிருக்கின்றனர். எனவே நாட்டின் பெஸ்ட் செல்லிங் எம்பிவி கார் மாடலாகவும் எர்டிகா காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடல், குறிப்பாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எர்டிகா பாதுகாப்பு விஷயத்தில் மண்ணைக் கவ்வியுள்ளது என்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
குறிப்பாக, இந்த காரில் பயணிக்கும்போது டிரைவரின் கால் பகுதிக்கு பாதுகாப்பற்ற சூழலே நிலவுகின்றது. விபத்தின்போது பெடல்கள் ஓட்டுநரின் கால்களை பதம் பார்க்கும் சூழல் ஏற்படலாம் என இந்த ஆய்வின் வாயிலாகக் கண்டறியப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், பெரியவர்களுக்கு தலை மற்றும் கழுத்து பகுதிகளுக்கு ஓரளவு நல்ல பாதுகாப்பே வழங்கும் சூழலே இந்த காரில் தென்படுகின்றது.
இதேபோல், மார்பு பகுதிக்கும் கணிசமான அளவு பாதுகாப்பே இந்த காரில் கிடைத்திருக்கின்றது. ஆனால், முன் பக்க பயணிக்கு கிடைக்கின்ற அளவிற்கு டிரைவருக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. இதுபோன்ற ஏற்ற இறக்கமான மதிப்புகள் காரணமாகவும், தரமற்ற கட்டுமானத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலுமே எர்டிகா மிக மிக குறைவான ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.
மாருதி சுஸுகி எர்டிகா இந்தியாவில் அரேனா டீலர்ஷிப்கள் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட எம்பிவி ரக கார் என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது. தனி நபர்கள் மற்றும் கால் டாக்சி (வாடகை வாகன) துறை என இரண்டிலும் இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
மேலும், இந்தியாவில் இந்த கார் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் ஒற்றை டீசல் ஆப்ஷன் கூட வழங்கப்படவில்லை. மாருதி சுஸுகி டீசல் கார் உற்பத்தியை கைவிட்டு நீண்ட காலம் ஆகிறது என்பது கவனிக்கத்தகுந்தது. 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மோட்டாரே எர்டிகாவில் வழங்கப்படுகின்றது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎஸ் பவரையும், 134 என்எம் டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. இந்த காரில் பெட்ரோல் தவிர, சிஎன்ஜி ஆப்ஷனையும் மாருதி வழங்குகிறது. இந்த சிஎன்ஜி ஆப்ஷன் மிக அதிக மைலேஜை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. கிலோ ஒன்றிற்கே 25 கிமீ வரையில் மைலேஜ் தருவதாகக் கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் பெரியவர்களுக்கான பதுகாப்பு விஷயத்தில் ஒரு ஸ்டாரையும், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் இரண்டு ஸ்டார்களையும் பெற்றிருப்பது ஒட்டுமொத்த மாருதி கார் பிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. எனவே வரும் நாட்களில் குடும்பத்துடன் இந்த காரில் பயணிப்பவர்கள் சற்றே சிந்தித்து பயணிப்பார்கள் என்றே நம்பப்படுகின்றது.
அதேவேளையில், இனி இந்தியா குளோபல் என்சிஏபி-யை பின்பற்றாது. அதற்கு பதிலாகவே பாரத் என்சிஏபி க்ராஷ் மதிப்பீடுகள் நாட்டிலேயே உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அமைப்பு சமீபத்தில் மாருதி கிராண்ட் விட்டாராவை கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியதாகவும், அது நல்ல மதிப்பெண் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








