இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இ-கிளாஸ் எல்டபிள்யூபி சொகுசு கார் நாளை அறிமுகம்! செல்ஃபி கேமிரா கொடுத்திருக்காங்களா
இந்தியாவின் சொகுசு வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக நாளைய (அக்டோபர் 9) தினம் நாட்டில் ஓர் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. உலக புகழ்பெற்ற ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz)-இன் தயாரிப்பே நாளைய தினம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக இ-கிளாஸ் எல்டபிள்யூபி (E-Class LWB) இருக்கின்றது. இதன் புதிய தலைமுறை (New gen) வெர்ஷனே இந்தியாவில் நாளை விற்பனைக்கு களமிறக்கப்பட இருக்கின்றது.
இந்தியர்களுக்காக இந்த கார் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றது. சமீபத்திலேயே உற்பத்தி பணிகள் நாட்டில் தொடங்கின என்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், இந்த புதிய தலைமுறை வெர்ஷனை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திவிட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே தற்போது புதிய இ-கிளாஸ் எல்டபிள்யூபி மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் பணிகளில் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் களமிறங்கி இருக்கின்றது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சக்கன் உற்பத்தி ஆலையில் வைத்தே இந்த காரின் உருவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மிகப் பெரிய மாற்றங்களைச் செய்தே இந்த காரை பென்ஸ் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்லே வேண்டும் என்றால் உருவத்தில் சற்று பெரியதாகவும், அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாகவும் இந்த கார் தற்போது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், கூடுதல் இட வசதியை வழங்கக் கூடிய காராகவும் புதிய தலைமுறை இ-கிளாஸ் எல்டபிள்யூபி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முந்தைய தலைமுறையை விட புதிய தலைமுறை இ-கிளாஸ் எல்டபிள்யூபி 13 மிமீ (1493) உயரம், 14 மிமீ (5092) நீளம் மற்றும் 15 மிமீ (3094) கூடுதலான வீல் பேஸ் ஆகியவற்றை இதுக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதன் அகலமாக 1800 மிமீட்டராக இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க இந்த காரை கூடுதல் கவர்ச்சியானதாக காண்பிக்கும் வேலைகளையும் மிகப் பெரிய அளவில் மெர்சிடிஸ் பென்ஸ் பார்த்திருக்கின்றது. அந்தவகையில், காரின் முகப்பு பகுதி மிகப் பெரிய மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, எல்இடி ஹெட்லைட், பக்கவாட்டு பகுதி மற்றும் பின் பக்கம் ஆகியவற்றிலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
தொடர்ந்து, காருக்குள்ளும் நிறுவனம் மாற்றங்களை செய்து இருக்கின்றது. 14.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.2 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. இதுதவிர, சமூக வலைதளங்களில் துடிப்பாக செயல்படும் வாடிக்கையாளர்களுக்காக இந்த காரில் பிரத்யேகமாக செல்ஃபி கேமிரா வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், பிரீமியமான டிராவல் அனுபவத்தை பெறும் விதமாக இந்த காரில் பர்மஸ்டர் 4டி சரவுண்டு சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 4 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சங்கள் தவிர இன்னும் பலதரப்பட்ட சிறப்பு மற்றும் லக்சூரி அம்சங்களையும் இந்த புதிய தலைமுறை இ-கிளாஸ் எல்டபிள்யூபி தன்னுள் தாங்கியிருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 201 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 2.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் மற்றும் 194 பிஎச்பி மற்றும் 440 என்எம் டார்க் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 2.0 லிட்டர் டீசல் மோட்டாரே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன், 48 வோல்டு திறன் கொண்ட மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பமும் இந்த காரில் இடம் பெறும் என கூறப்படுகின்றது. அது 23 பிஎச்பி மற்றும் 205 என்என் டார்க் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதே இந்த ஹைபிரிட் சிஸ்டம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டே இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. எனவே புதிய சொகுசு காரை வாங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பணக்காரர்களுக்கு புதிய பென்ஸ் இ-கிளாஸ் எல்டபிள்யூபி மாடலின் வருகை பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








