தமிழக தயாரிப்புதான் வேணும்னு அடம் பிடிக்கும் தெற்கு ஆப்பிரிக்கா! 996 யூனிட்டுகளை ஏத்தி அனுப்பி வச்சுருக்காங்க

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார் மாடல் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இந்த கார் மாடலே தெற்கு ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த கார் மாடல் தமிழகத்தில் உள்ள ஆலையில் வைத்தே தயாரிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே தமிழக ஆலையில் தயாரிக்கப்பட்ட சுமார் 996 யூனிட்டு எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி கார் மாடல்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த கார் மாடலுக்கு அங்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக நிலவி வந்ததன் அடிப்படையிலேயே தற்போது பெரும் எண்ணிக்கையில் அவை ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகள் பல ஏற்கனவே தெற்கு ஆப்பிரிக்காவில் விற்பனைச் செய்யப்படுகின்றன. அந்தவகையில், அங்கு விற்பனைக்கு இணைக்கப்படும் எட்டாவது ஹூண்டாய் கார் மாடல் ஆகும்.

Made in india hyundai exter south africa

கிராண்ட் ஐ10 நியாஸ் (Grand i10 Nios), அவுரா (Aura), ஐ20 (i20), ஐ20 என் லைன் (i20 N Line), வென்யூ (Venue), வென்யூ என் லைன் (Venue N Line) மற்றும் ஃபேஸ்லிஃப்ட் அல்கஸார் (facelift Alcazar) ஆகிய ஹூண்டாய் கார் மாடல்களே ஏற்கனவே தெற்கு ஆப்பிரிக்காவில் விற்பனைக்கக் கிடைக்கக் கூடிய மாடல்கள் ஆகும்.

இந்தியாவில் டாடா பஞ்ச் கார் மாடலுக்கு போட்டியாக ஹூண்டாய் எக்ஸ்டர் விற்பனையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இங்கு ரூ. 6 லட்சம் தொடங்கி ரூ. 10.43 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. அதேவேளையில், தெற்கு ஆப்பிரிக்காவிலோ இந்த கார் மாடல் சற்று காஸ்ட்லியான விலையிலேயே விற்கப்பட இருக்கின்றது.

அந்நாட்டு மதிப்பில் 2,69,900 ரேண்ட் தொடங்கி 3,34,900 ரேண்ட்-களுக்கே அது விற்கப்பட இருக்கின்றது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 12.95 தொடங்கி ரூ. 16.07 லட்சம் வரையிலான விலையில் தெற்கு ஆப்பிரிக்காவில் எக்ஸ்டர் விற்கப்பட உள்ளது. விலை அதிகமாக இருக்க மாதிரி தெரியுதே ஏதேனும் சிறப்பு வசதிகளை தெற்கு ஆப்பிரிக்காவிற்கான எக்ஸ்டர் பெற்றிருக்கின்றதா என நீங்கள் கேட்கலாம்.

ஆனால், அதுபோன்று எந்தவொரு பெரிய மாற்றத்தையும் நிறுவனம் செய்ததாக தெரியவில்லை. சொல்லப்போனால் இந்தியாவிற்கான எக்ஸ்டர் எப்படி இருக்கின்றதோ அப்படியே தெற்கு ஆப்பிரிக்காவிற்கான எக்ஸ்டரும் இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தெரிவிக்கின்றன. புரஜெக்டர் வகை ஹாலோஜென் ஹெட்லைட், எச் எனும் எழுத்தை பிரதிபலிக்கும் வசதிக் கொண்ட எல்இடி பகல் நேரத்திற்கான லைட், 15 அங்குல அலாய் வீல், எல்இடி ஹெட்லைட் மற்றும் பின் பக்கத்திலும் எச் எனும் எழுத்த பிரதிபலிக்கக் கூடிய மின் விளக்குகள் ஆகியவையே அக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

தொடர்ந்து, சில்வர் நிற அணிகலன்களை முன் மற்றும் பின் பக்கங்களில் இந்த கார் பெற்றிருக்கும். இதுதவிர அதிகம் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய காராகவும் இது விற்பனைக்கு களமிறக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில், 8 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட கிளஸ்டர், சிங்கிள் பேன் சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

இதேபோல், பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பின் பக்கத்தை பார்ப்பதற்கு ஏதுவான கேமிராவையும் இந்த காரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது. எஞ்சினை பொருத்த வரை ஹூண்டாய் எக்ஸ்டர் கார் மாடலில் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎஸ் மற்றும் 114 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.

இந்தியாவில் இதே எக்ஸ்டர் கார் மாடலில் பெட்ரோல் மட்டுமின்றி சிஎன்ஜி ஆப்ஷனும் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், விலை குறைவாகவும் இந்த கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுபோன்ற காரணங்களினால் இந்தியாவில் எக்ஸ்டர் காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஒரு லட்சம் யூனிட் விற்பனை எனும் மைல்கல்லை அந்த கார் மாடல் எட்டியிருக்கின்றது. விற்பனைக்கு வந்த ஓராண்டுக்குள்ளேயே கிடைத்த விற்பனை எண்ணிக்கையே இதுவாகும். இத்தகைய ஓர் சிறப்புமிக்க கார் மாடலையே ஹூண்டாய் நிறுவனம் தற்போது தெற்கு ஆப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக எக்ஸ்டர் காட்சியளிக்கின்றது. இனி வரும் நாட்களில் அதிகம் நிறுவனத்தால் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார் மாடல்களில் ஒன்றாகவும் எக்ஸ்டர் மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்தியாவை போலவே உலக நாடுகளிலும் இந்த காருக்கு நல்ல டிமாண்ட் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, September 23, 2024, 15:30 [IST]
English summary
Made in tn hyundai exter micro suv launched in south africa
மேலும்... #hyundai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+