மதுரை முத்து வாங்கிய காரை பார்த்து அசந்துபோன நெட்டிசன்கள்.. சூப்பர் ஸ்டாரே இந்த காரதாங்க பயன்படுத்துறாரு!

சின்னத்திரையில் தனக்கென தனியொரு ரசிகப் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரே மதுரை முத்து. மொக்கையான கடி ஜோக்கைச் சொல்லியே மக்களின் மனம் கவர்ந் நபராக அவர் மாறிவிட்டார் என்று கூறலாம். குறிப்பாக, இவரின் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக்கு பலர் தீவிர ரசிகர்களாகவே மாறிவிட்டனர்.

இந்த அளவிற்கு பிரபலமான ஓர் சின்னத்திரை நடிகரே தற்போது மிக மிக விலையுயர்ந்த கார் மாடல் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சின்னத் திரை நடிகர் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross) காரையே வாங்கி இருக்கின்றார்.

Madurai muthu toyota innova hycross

இந்தியர்களின் ஃபேவரிட்டான எம்பிவி ரக கார் மாடல்களில் ஒன்றாக இன்னோவா இருக்கின்றது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்கூட தன்னுடைய பெரும்பாலான பயணங்களுக்கு இந்த காரையே பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்து. முன்னதாக இன்னோவா க்ரிஸ்டா காரை பயன்படுத்தி வந்த அவர் தற்போது இன்னோவா ஹைகிராஸ் பயன்பாட்டிற்கு மாறி இருக்கின்றார்.

பிரீமியம், சொகுசான ரைடுக்கு பெயர்போன கார் மாடலாக இது விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இன்னோவா ஹைகிராஸ் காரை மதுரை முத்து வாங்கி இருக்கின்றார். அவர் இன்னோவா ஹைகிராஸின் இசட்எக்ஸ் ஹைபிரிட் (Hybrid ZX) தேர்வையே வாங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இதன் விலை ரூ. 30.34 லட்சத்திற்கும் அதிகம் ஆகும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 35 லட்சத்தை நெருங்கக் கூடாதும். இத்தகைய விலை உயர்ந்த காரையே மதுரை முத்து தற்போது வாங்கி இருக்கின்றார். இந்த கார் கொள்முதல் பற்றிய தகவலை அவரே அவருடைய இன்ஸ்டா பதிவின் வாயிலாக தெரிவித்து இருக்கின்றார்.

காரை தன்னுடைய குடும்பத்துடன் சென்று டெலிவரி எடுக்கும் படங்களையும் அவர் அந்த பதிவில் பகிர்ந்திருக்கின்றார். இந்தியாவில் இன்னோவா இரண்டு விதமான அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இன்னோவா க்ரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் ஆகியவையே அவை ஆகும். இதில் இன்னோவா க்ரிஸ்டாவில் டீசல் எஞ்சின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது.

இதேபோல், இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலில் பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. இத்துடன் ஹைபிரிட் தொழில்நுட்பமும் வழங்கப்படுகின்றது. இதனால்தான் பலர் இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். பெட்ரோலை சிக்கனமாக செலவிட்டு அதிக மைலேஜிற்கு வழிவகுக்கும் தொழில்நுட்பமே ஹைபிரிட் சிஸ்டம் ஆகும்.

லிட்டர் ஒன்றிற்கு இது 23.24 கிமீ வரையில் மைலேஜ் தரும். இதன் ஹைபிரிட் அல்லாத வெர்ஷன் லிட்டர் ஒன்றிற்கே 16.13 கிமீ வரையில் மட்டுமே மைலேஜை வழங்கும். இதனால்தான் பலர் அதிகம் மைலேஜ் தரக் கூடிய ஹைபிரிட் வசதிக் கொண்ட இன்னோவா ஹைகிராஸை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இது வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் தேர்வுகளைக் காட்டிலும் குறைவாகவே மாசையும் வெளிப்படுத்தும். இதுதவிர அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய கார் மாடலாகவும் இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி காட்சியளிக்கின்றது. அதிகம் பிரீமியம் தர அம்சங்களைத் தாங்கியதாகவும் இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது.

இதுவும் இன்னோவா ஹைகிராஸ்க்கு வரவேற்பு இரட்டிப்பாக காணப்படுவதற்கான முக்கிய காரணியாக இருக்கின்றது. ஹைபிரிட் இன்னோவா ஹைகிராஸ் மற்றும் ஹைபிரிட் அல்லாத இன்னோவா ஹைகிராஸ் இரண்டிலுமே 2.0 பெட்ரோல் மோட்டாரே பன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஹைபிரிட் தேர்வில் கூடுதலாக ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கும்.

இது ஓர் செல்ஃப் சார்ஜ் வசதிக் கொண்ட ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகும். இந் காரில் ரைடு அனுபவத்தை மேலும் சிறப்பானதாக மாற்றும் நோக்கில், வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, மோட்டாரில் இயங்கும் வால் பகுதி கதவு, பின் பக்கத்திற்கான சன்ஷேட், மல்டி - ஸோன் ஏசி, எலெக்ட்ரோ குரோமிக் ஐஆர்விஎம் மற்றும் ஓட்டோமேன் இருக்கைகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமின்றி, பேடில் ஷிஃப்டர்கள் மற்றும் ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் சிஸ்டம் போன்ற நவீன கால சிறப்பம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இதை்தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கும் விதமாக சேஃப்டி சென்ஸ், லேன் டிரேஸ் அசிஸ்ட், டைனமிக் ரேடார் க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

அத்துடன், ஆறு ஏர் பேக்குகள், ப்ரீ கொலிசன் சிஸ்டம், ஆட்டோ ஹை பீம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 183.72 பிஎச்பி மற்றும் 188 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் ரஜினிகாந்த் மட்டுமல்ல இன்னும் பல இந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களும் இந்த டொயோட்டா இன்னோவா காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் அதிக நீடித்து உழைக்கும் திறன் மற்றும் மிக சிறப்பான ரைடு அனுபவத்தை வழங்கும் வசதிக் கொண்டது என்பதாலேயே பலர் இந்த காரை தங்களின் வழக்கமான பயணங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 1, 2024, 16:00 [IST]
English summary
Madurai muthu bought toyota innova hycross mpv here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+