827 ஏக்கர் நிலத்தை கார் உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கிய அரசு.. எந்த நிறுவனத்திற்காக தெரியுமா?
பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்றிற்கு புதிய கார்களை உற்பத்தி செய்வதற்காக மாநில அரசு ஒன்று சுமார் 827 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனத்திற்கே இவ்வளவு பெரிய இடம் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. மஹாராஷ்டிரா மாநில அரசு இந்த நிறுவனத்திற்கு ஒதுக்கி இருக்கின்றது. சத்ரபதி சம்பஜி நகரிலேயே அது வாகன உற்பத்திக்கான இடத்தை ஒதுக்கி உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது. மிக சமீபத்திலேயே மஹாராஷ்டிரா மற்றும் டொயோட்டா நிறுவனம் இடையே ஓர் ஒப்பந்தத்தத்திற்கான கையொப்பம் ஆனது.
கடந்த ஜூலை 31 ஆம் தேதி அன்றே இந்த நிகழ்வு அரங்கேறியது. இந்த நிலையிலேயே கார் உற்பத்திக்காக நிறுவனத்திற்கு 827 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி மஹாராஷ்டிரா அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இந்த புதிய இடத்தில் உருவாக இருக்கும் உற்பத்தி ஆலையில் வைத்து டொயோட்டா நிறுவனம் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களையே தயாரிக்க இருக்கின்றது.

இதற்காக அந்நிறுவனம் ரூ. 21 ஆயிரம் கோடி முதலீடு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கான வாகனங்களாகவே இங்கு வைத்து தயாரிக்கப்படும் வாகனங்கள் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. விரைவில் உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகள் நிறைவுற்றுவிடும் என்றும், இதைத்தொடர்ந்து கார் உற்பத்தி பணிகளும் விரைவிலேயே தொடங்கிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி நிறுவனத்தின் புதிய ஆலையில் 2026 ஜனவரியில் வாகன உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர, புதிதாக 8 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 18 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் இந்த புதிய ஆலையால் கிடைக்க இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.
இந்தியாவில் தற்போது மாபெரும் வேலையில்லா திண்டாட்டம் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் லேசான உதவியை இந்த புதிய ஆலை வழங்கும் என்பது தெரிகின்றது. இதேபோல், நாட்டில் தற்போது மின்சார மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான தேவையும் பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது. நாட்டின் இந்த தேவையையும் டொயோட்டாவின் புதிய ஆலை தீர்த்து வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் டொயோட்டா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஹைபிரிட் வசதிக் கொண்ட அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் மாடலுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவே இந்த புதிய புதிய ஆலை வாயிலாக ஹைரைடர் போன்ற இன்னும் சற்று விலை குறைவான ஹைபிரிட் கார்களை உற்பத்தி செய்து டொயோட்டா விற்பனைக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட கார்கள் எரிபொருளைச் சிக்கனம் செய்யும் திறன் கொண்டவை. அத்தோடு மிகக் குறைவான கார்பனையே இந்த வகை வாகனங்கள் வெளியேற்றும். ஆகையால் சூற்றுச் சூழலுக்கு உகந்த நண்பனாகவும், நம்முடைய பாக்கெட்டிற்கும் நண்பனாகவும் இந்த வகை வாகனங்கள் உள்ளன.
இதனால்தான் இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் ஹைபிரிட் கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கான ஹைபிரிட் கார்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக புதிய ஆலையை உருவாக்கும் பணியில் டொயோட்டா களமிறங்கி இருக்கின்றது.
இந்தியாவில் ஹைபிரிட் கார்களுக்கு மட்டுமல்ல மின்சார வாகனங்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக டாடா நெக்ஸான் மற்றும் எம்ஜி கோமெட் இவி-யை கூறலாம். இந்த இரண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஆலையால், அதன் உற்பத்தி திறன் இன்னும் பலமடங்காக உயர இருக்கின்றது. இதன் விளைவாக நிறுவனத்தின் கார் மாடல்களின் காத்திருப்பு காலம் மிகப் பெரிய குறையக் கூடும். ஆகையால், டொயோட்டா கார்களின் விற்பனை மேலும் பலமடங்காக உயர்வதற்கான சூழல் புதிய ஆலையால் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








