இன்னிக்கு நைட்டே மஹிந்திரா ஷோரூம்ல போய் லைன்ல நிக்க போறாங்க! நாளை துவங்கப்போகும் புது கார் புக்கிங்

மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் அதிகாரப்பூர்வமான புக்கிங் நாளை அதாவது மே 15ம் தேதி முதல் துவங்குகிறது. ரூபாய் 21,000 முன்பு பணத்தில் இந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை நீங்கள் புக் செய்து கொள்ளலாம். இதன் டெலிவரி விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது எஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது இந்த கார் தனது எக்ஸ்யூவி 300 காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த காரின் அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் ஏற்கனவே மஹிந்திரா டீலர் ஷிப்களில் துவங்கி விட்டது.

mahindra 3xo booking

இந்நிலையில் நாளை 15ம் தேதி இதன் அதிகாரப்பூர்வமான புக்கிங் துவங்கப்படுகிறது. இந்த காரை ரூபாய் 21,000 முன்பணம் செலுத்தி அதிகாரப்பூர்வ டீலர் ஷிப்களில் வாடிக்கையாளர்கள் புக் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலையை பொறுத்தவரை ரூபாய் 7.49 லட்சம் முதல் ரூபாய் 15.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் பல்வேறு விதமான அப்டேட் செய்யப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்தவித மாற்றமும் இல்லாமல் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 காரில் எப்படி இருக்கிறதோ அதன்படியே இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

mahindra 3xo booking

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் முன்பக்கம் அக்ரஸிவான லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோக புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், இன்வெர்ட்டட் எல்இடி டே டைம் ரன்னிங் லைட்டுகள், இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இது காரில் புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது மற்றபடி இந்த காரில் எக்யூவி 300-ல் என்னென்ன அம்சங்கள் இருந்ததோ அதன்படியே இதன் வெளிப்புறத் தோற்றமும் இருக்கிறது.

இந்த காரின் டெயில் கேட் பகுதி முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுபோக செக்மெண்டிலேயே புதிதாக டூயல் பேன் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. இதன் லோயர் வேரியண்டில் சிங்கிள் பேன்சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரின் உட்புறம் அட்ரனஎக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் உள்ளது போல வழங்கப்பட்டுள்ளது. இதுபோக லெவல்2 அடாஸ் தொழில்நுட்பமும், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டூயல் சவுண்ட் கிளைமேட் கண்ட்ரோல் உள்ள அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

mahindra 3xo booking

இந்த காரில் உள்ள அடாஸ் தொழிற்நுட்பத்தை பொருத்தவரை அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், முன்பக்க கொலுஷன் வார்னிங், டிராபிக் சைன் ரெககனேஷன், ஹைபீம் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர், ஸ்மார்ட் பைலட் அசிஸ்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் கியர் ஆப்ஷனை பொறுத்தவரை மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய இரண்டு விதமான கியர் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இந்த காரை புக் செய்ய வேண்டும் என்றால் நாளை உடனடியாக அருகில் உள்ள மஹிந்திரா ஷோரூமக்கு விரைந்து செல்லுங்கள்.

மக்கள் பலர் நீண்ட நாட்களாக குறைந்த விலையில் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்றை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மஹிந்திரா நிறுவனம் இந்த காரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை முதல் இதன் புக்கிங் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தின் இந்த எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற கார் மார்க்கெட்டில் உள்ள டாடா நெக்ஸான், மாருதி சுசுகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனட் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. மற்ற கார்களை காட்டிலும் இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் இருப்பதால் இந்த காரை விரும்பி வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கிறார்கள். முக்கியமாக இதை இந்திய தயாரிப்பாக இருப்பதால் மக்கள் இந்த காரை வாங்க விரும்புகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 14, 2024, 12:47 [IST]
English summary
Mahindra 3xo booking commence from may 15 know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X