தார் மாடலைவிட தார் ராக்ஸ் விற்பனையில் வெளுத்து வாங்கும் போலையே.. 4X4 தொழில்நுட்பம் கொண்ட வேரியண்ட் அறிமுகம்!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக தார் ராக்ஸ் (Thar Roxx) இருக்கின்றது. இது 3 கதவுகள் கொண்ட தார் (Thar) கார் மாடலின் 5 டோர் வெர்ஷன் ஆகும். இந்த கார் மாடலிலேயே 4X4 அம்சம் கொண்ட வேரியண்டுகள் புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. அறிமுகமாக ரூ. 18.79 லட்சம் என்கிற விலையில் இருந்து அது விற்பனைக்குக் கிடைக்கும். எம்எக்ஸ்5, ஏஎக்ஸ்5எல் மற்றும் ஏஎக்ஸ்7எல் ஆகிய மூன்று வேரியண்டுகளிலேயே 4X4 வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
அனைத்தும் டீசல் மோட்டார் மட்டுமே ஆகும். பெட்ரோல் மோட்டாரில் 4X4 வசதி வழங்கப்படவில்லை. 4X2 வசதியுடன் மட்டுமே பெட்ரோல் மோட்டார் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் 4X4 வேரியண்டுகள் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்தியாவில் தார் ராக்ஸ் ரூ. 12.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து ரூ. 20.49 என்கிற அதிகபட்ச விலையிலேயே விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இந்த சூழலிலேயே தற்போது புதிதாக 4X4 வசதி கொண்ட தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இதனால் தார் ராக்ஸ் கார் மாடலின் அதிகபட்ச விலை ரூ. 22.49 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. 2.2 லிட்டர் டீசல் எஞ்சினில் 4X4 தொழில்நுட்பம் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த எஞ்சின் 175 எச்பி மற்றும் 370 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது.
இதே எஞ்சின் 4X2 வேரியண்டில் 152 எச்பி மற்றும் 330 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா நிறுவனம் இந்த 5 டோர் தார் ராக்ஸ் கார் மாடலில் 4எக்ஸ்ப்ளோர் சிஸ்டம் (4XPLOR System)-ஐ வழங்கி இருக்கின்றது. எலெக்ட்ரானிக் லாக்கிங் வசதி மற்றும் பன்முக நிலப்பரப்பை சமாளிக்கும் திறன் கொண்டதே இந்த சிஸ்டம் ஆகும்.
ஸ்நோ (Snow), சேண்ட் (Sand) மற்றும் மட் (Mud) ஆகிய நிலப்பரப்புகளுக்கான மோட்களையே இந்த 4எக்ஸ்ப்ளோர் சிஸ்டத்தின் வாயிலாக தார் ராக்ஸ் காரில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த 4x4 தேர்வில் பிரத்யேக ஸ்மார்ட் க்ராவ்ல் மற்றும் இன்டெல்லிடர்ன் எனும் அம்சங்களும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதில் முதல் ஒன்று ஆஃப்-ரோடுக்கான க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகும். இது மணிக்கு 2.5 கிமீ மற்றும் 30 கிமீ வேகத்தில் வாகனத்தை இயக்க உதவியாக இருக்கும். இரண்டாவது அம்சம் மிகவும் ஷார்ப்பான திருப்பங்களில் ஆபத்தின்றி வாகனத்தை திருப்பிக் கொள்ள உதவியாக இருக்கும்.
அதாவது, ஸ்டியரிங் வீலின் திருப்பத்திற்கு ஏற்ப ரியர் இன்னர் வீலை அது லாக் செய்யும். இத்தகைய தனித்துவமான அம்சங்களுடனேயே தார் ராக்ஸ் 4x4 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. தார் ராக்ஸ் கார் மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் மட்டுமில்லைங்க, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது.
இது அதிகபட்சமாக 162 எச்பி மற்றும் 330 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இது மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட மோட்டாரின் எஞ்சின் திறன் ஆகும். அதேவேளையில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட இதே மோட்டார் அதிகபட்சமாக 177 எச்பி பவரையும், 380 என்எம் டார்க்கை வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தார் கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இதற்கு வலுசேர்க்கும் விதமாகவே மஹிந்திரா நிறுவனம் தார் ராக்ஸ் கார் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இப்போது அதில் 4X4 வசதியையும் அறிமுகம் செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








