டெலிவரி எடுத்த கையோடு காரை தனி-தனியாக பிரித்த உரிமையாளர்!.. காரை தயாரிச்சவங்க பாத்தா ரத்த கண்ணீரே வந்திரும்!
மிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த கார் மாடல்களில் தார் ராக்ஸ்-ம் ஒன்றாகும். இது 3 டோர் தார் கார் மாடலின் 5 டோர் வெர்ஷன் ஆகும். இந்த காரின் டெலிவரி பணிகளை மஹிந்திரா நிறுவனம் சமீபத்திலேயே தொடங்கியது. சொல்லப் போனால் இந்த காரின் டெலிவரி பணிகள் தொடங்கி முழுமையாக இரண்டு வாரங்கள்கூட ஆகவில்லை. அதற்குள்ளாக இந்த காரை ஓர் நபர் தனி தனியாக பிரித்துப் போட்டதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் வீடியோவை யுட்யூபில் ஓர் வீடியோவும் வெளியாகி இருக்கின்றத.
அந்த வீடியோவில் புத்தம் புதிய தார் ராக்ஸ் கார் அடையாளம் காண முடியாத அளவிற்கு அக்குவேர் ஆணி வேராக தனி தனியாக கழட்டிப் போடப்பட்டு இருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பலர் தார் ராக்ஸ் காரை வாங்க தவம் இருந்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழலில் ஏன் இப்படி செய்தார்கள் என்பதே பலரின் கேள்வியாக அமைந்திருக்கின்றது. இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

தற்போது உருவம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தனி தனியாக கழட்டிப் போடப்பட்டு இருக்கும் இந்த தார் ராக்ஸ் ஓர் ஆரம்ப நிலை தேர்வு என கூறப்படுகின்றது. இதையே தற்போது உயர்நிலை தேர்வாக மாற்றும் முயற்சியில் அதன் உரிமையாளர் களமிறங்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே 5 கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் முழுமையாக கழற்றப்பட்டு இருக்கின்றது.
டெல்லியில் உள்ள 'கரோல் பாஹ் ஆஃப்டர்மார்க்கெட் நிறுவனம்'-மே தார் ராக்ஸ் ஆரம்ப நிலை வேரியண்டை உயர்நிலை தேர்வாக மாற்றும் முயற்சியை கையில் எடுத்திருக்கின்றது. தங்களின் தனித் திறனைக் காண்பிக்கும் விதமாக அதுகுறித்த வீடியோவையும் அவர்கள் யுட்யூப் வாயிலாக வெளியிட்டு இருக்கின்றனர். பழைய வாகனங்களை புதிது போல் மாற்றுவது மற்றும் வசதிகள் பெரிய அளவில் இல்லாத வாகனங்களை சொகுசு வாகனங்களுக்கு இணையானதாக மாற்றுவதிலும் கை தேர்ந்தவர்களே இந்த கரோல் பாஹ் ஆஃப்டர்மார்க்கெட் நிறுவனம் ஆகும்.
இதற்கு முன்னதாக இவர்கள் இதுமாதிரியான வேலைகள் பலவற்றை பார்த்திருக்கின்றனர். தார் ராக்ஸ் காரின் உள்பக்கம் முழுக்க முழுக்க வெள்ளை நிறத்தில் இருந்தது. இதை அவர்கள் தற்போது மோச்சா பிரவுன் நிறத்திற்கு அப்கிரேட் செய்திருக்கின்றனர். இதே நிறத்தை மஹிந்திரா நிறுவனம் இந்த காரில் வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்த நிறம் கொண்ட தாரின் டெலிவரி ஜனவரியிலேயே தொடங்கப்பட இருக்கின்றது. அவ்வளவு நாட்கள் காத்திருக்க முடியாது என்பதற்காகவே தற்போது வெளிப்புற சந்தை வாயிலாக தார் ராக்ஸ்-இன் உள்பக்க நிறத்தை அதன் உரிமையாளர் மாற்றி இருக்கின்றார்.
இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் வழங்கப்பட்டு இருந்த வழக்கமான ஸ்பீக்கர் மற்றும் மியூசிக் சிஸ்டத்தையும் அவர் அப்கிரேட் செய்திருக்கின்றார். பிரீமியம் தர ட்வீட்டர்களுடன் கூடிய நான்கு சேனல் ஆம்பிளிஃபையர் மற்றும் ஸ்பீக்கர்களை இதில் வழங்கி இருக்கின்றனர். இதுதவிர, புதிதாக எல்இடி புரஜெக்டர் வகை பனி மின் விளக்கு மற்றும் டெயில் லைட் உள்ளிட்டவற்றையும் தார் ராக்ஸ் காரில் சேர்த்திருக்கின்றனர்.
இதுபோன்று இன்னும் பல அப்கிரேஷன் வேலையையே இந்த காரில் பார்த்திருக்கின்றனர். இதனால், அந்த ஆரம்ப நிலை தார் ராக்ஸ் தற்போது கூடுதல் பிரீமியம் லுக்கிற்கு மாறி இருக்கின்றது. வேலைகள் அனைத்தும் முடிந்த நிலையில் கார் எப்படி இருக்கின்றது என்கிற காட்சிகளையும் அவர்கள் வீடியோவில் கண்பித்திருக்கின்றனர்.
இதுபோல், தார் ராக்ஸ் காரை மாடிஃபிகேஷன் செய்வது முதல் முறையல்ல. சமீபத்தில்கூடய இதே தார் ராக்ஸ் காரை அதன் உரிமையாளர் ஒருவர் முழுக்க முழுக்க மஞ்சள் நிறத்திற்கு மாற்றினார். இருக்கை, டோர் சைடு பேனல்கள் என பலவற்றிற்கு அவர் மஞ்சள் நிறத்தை சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மற்றுமொரு தார் ராக்ஸ் கார் மாடிஃபிகேஷன் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. அதுவும், டெலிவரி பெற்ற சில நாட்களிலேயே இந்த காரை இவ்வாறு மாடிஃபிகேஷனுக்கு உட்படுத்தி இருக்கின்றனர்.
இந்தியாவில் 5 கதவுகள் கொண்ட மஹிந்திரா தார் ராக்ஸ் ரூ. 12.99 லட்சம் தொடங்கி ரூ. 22.49 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். 4x4 தொழில்நுட்ப வசதியும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இரண்டு ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன. 2.0 லிட்டர் எம்-ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் எம்-ஹாவ்க் டர்போ டீசல் ஆகியவையே அவை ஆகும்.
இந்தியாவில் இந்த காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த காருக்கு புக்கிங் தொடங்கப்பட்ட முதல் 60 நிமிடங்களிலேயே, அதாவது, ஒரு மணி நேரத்திலேயே சுமார் 1.76 புக்கிங்குகளை தார் ராக்ஸ் பெற்றது. இத்தகைய அமோகமான வரவேற்பையே தார் ராக்ஸ் நாட்டில் பெற்று வருகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்தால் அவை அழகானதாகக் காட்சியளிக்கும். ஆனால், இது ஓர் தலைவலி பிடித்த வேலையாகும். மிக முக்கியமாக இன்சூரன்ஸ் கிளைமிங்கின்போது மிகப் பெரிய சிக்கல் ஏற்படக் கூடும். பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதுமாதிரியான ஆஃப்டர் மார்க்கெட் மாடிஃபிகேஷன்களை அனுமதிப்பதில்லை. அதனால்தான் மாடிஃபிகேஷனை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








