டீசரே வேற லெவல்ல இருக்கு.. 5 கதவுகள் கொண்ட தார் அழகாலையே போட்டியாளர்களுக்கு தர்ம அடி கொடுக்கும் போலையே!
ஆகஸ்டு 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதை முன்னிட்டு மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் தார் ராக்ஸ் (Thar Roxx) கார் மாடலின் டீசர் படங்களை வெளியீடு செய்திருக்கின்றது. ஐந்து கதவுகள் கொண்ட தார் விற்பனைக்கு வராமல் இருந்தது இந்த கார் மாடலின் மிகப் பெரிய குறையாக பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையிலேயே இதன் ஐந்து கதவுகளைக் கொண்ட வெர்ஷனை தார் ராக்ஸ் எனும் பெயரில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையிலேயே தார் ராக்ஸ் கார் மாடலின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈருக்கும் பொருட்டு தற்போது அதன் டீசர் படங்களை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் டீசர் படத்தின் வாயிலாக மூன்று கதவுகள் கொண்ட வெர்ஷனைக் காட்டிலும், ஐந்து கதவுகள் கொண்ட வெர்ஷன் மிகவும் கவர்ச்சியானதாக தயாரிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

மேலும், சற்று நீளமான உருவத்தைக் கொண்டதாகவும் அது இருக்கும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, மூன்று கதவு வெர்ஷனிடம் இருந்து மாறுபட்டு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக இதன் ஐந்து டோர் வெர்ஷனுக்கு பல்வேறு சிறப்புகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், எல்இடி லைட்டுகள், கிரில், வட்ட வடிவ பனி மின் விளக்கு, வால் பகுதி மின் விளக்கு, ஓஆர்விஎம் என பலவற்றை பிரத்யேகமாக வடிவமைத்து பயன்படுத்தி இருக்கின்றது, மஹிந்திரா.
இதனால்தான் கூடுதல் பரீமியம் மற்றும் அழகிய தோற்றம் கொண்டதாக 5 டோர் தார் ராக்ஸ் காட்சியளிக்கின்றது. அதிலும், இதன் ஓஆர்விஎம்-க்கு இரண்டு வண்ண பூச்சு வேலை பார்த்திருப்பது அக்காருக்கு பல மடங்கு அழகை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, 5 டோர் தார் ராக்ஸ்-க்கான அலாய் வீல்களும் பிரத்யேகமான தோற்றத்தையேக் கொண்டிருக்கின்றன.

ஆகையால், தார் ராக்ஸ் மிகவும் கவர்ச்சியான கார் மாடலாக விற்பனைக்கு வரவிருப்பது இப்போதே உறுதியாகி இருக்கின்றது. எனவே இந்த காருக்காக காத்திருப்பவர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள் என்பது தெளிவாக தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய எதிர்வினையை இந்த கார் மாடல் ஆற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தார் ராக்ஸ் காரில் 10.25 அங்குல திரை மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றன. குறிப்பாக, லெவல் அடாஸ் போன்ற நவீன கால தொழில்நுட்ப வசதியும் இந்த காரில் இதில் இடம் பெற இருப்பது உறுதியாகி உள்ளது.
இதற்கு சான்றாகவே முன்னாதக வெளியிடப்பட்ட டீசர் படங்கள் உள்ளன. அதில், கிரில்லின் மைய பகுதியில் அடாஸ் அம்சத்திற்கான சென்சார்கள் இடம் பெற்றிருப்பது உறுதியாகி இருக்கின்றது. எஞ்சினைப் பொருத்த வரை தார் 3 டோர் வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் அந்த மோட்டார் ஆப்ஷன்களே இதிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
1.5 லிட்டர் டீசல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஆகிய ஆப்ஷன்களே 5 கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் மாடலிலும் வழங்கப்பட இருக்கின்றது. இத்தகைய அம்சங்கள் கொண்ட காரையே மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் வைத்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங் பணிகளை மஹிந்திரா கார் விற்பனையாளர்கள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வ புக்கிங் கிடையாது. ஆகஸ்டு 15 அன்றே அதிகாரப்பூர்வமான புக்கிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அன்றைய தினமே தார் ராக்ஸ்-இன் விலையும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் போர்ஸ் கூர்காவிற்கு மிகப் பெரிய போட்டியாக மாறும். இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி மஹிந்திரா தார் ராக்ஸ் ரூ. 15 லட்சம் தொடங்கி ரூ. 25 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக தார் ராக்ஸ் மாறி இருக்கின்றது. எனவே இது விற்பனையில் ஜொலிக்கும் என நம்பப்படுகின்றது. குறிப்பாக, மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் போர்ஸ் கூர்கா ஆகிய போட்டி கார் மாடல்களுக்கு மிகக் கடுமையான சவாலை இந்த கார் மாடல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








