1.78 லட்சம் பேர் இந்த கம்பெனி காரை வாங்க வெயிட் பண்ணுறாங்க! அப்படி இந்த கம்பெனி கார்ல என்ன இருக்குது தெரியுமா?
மஹிந்திரா நிறுவனத்தின் காருக்கு தற்போது இந்திய மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவுக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி கார்களை இந்திய மக்கள் அதிகம் விரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் காரை வாங்க தற்போது 1.78 லட்சம் மக்கள் புக் செய்துவிட்டு காத்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படியாக மஹிந்திரா நிறுவனத்தில் எந்த கார்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
புதிதாக கார் வாங்க வேண்டும் என்றால் கார்களை விற்பனை செய்யும் ஷோரூம் சென்று கார்களை புக் செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் முதலில் புக் செய்தவர்களுக்கு தயாரிப்புக்கு தகுந்தார் போல் கார்கள் விற்பனை செய்யப்படும். குறிப்பிட்ட நிறுவனங்களின் கார்கள் புக் செய்து அதிக காலம் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கும். சூழ்நிலை இருக்கும் இப்படியாக மஹிந்திரா நிறுவனத்தின் தார், ஸ்கார்பியோ ஆகிய கார்களுக்கு நீண்ட கால காத்திருப்பு காலம் இருக்கிறது.

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தார் மற்றும் ஸ்கார்பியோ கார்களின் காத்திருப்பு காலத்தை தற்போது கணிசமான அளவு குறைத்துள்ளது. இந்த 2024ம் ஆண்டு முதல் மூன்று மாதத்தில் 2.22 லட்சம் என்ற அளவில் இந்த கார்களை வாங்க மக்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான விற்பனை விபரங்களை வைத்து பார்க்கும்போது 1.78 லட்சம் மக்கள் இந்த கார்களை வாங்க காத்திருப்பது தெரியவந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் கார் காரைப் பொறுத்தவரை முதல் மூன்று மாதம் 59 ஆயிரம் புக்கிங்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்தது. தற்போது இந்த பட்டியல் 42 ஆயிரமாக குறைந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் மாதம் 4000 கார்களை கூடுதலாக தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த காருக்கு மட்டும் கடந்த ஜூன் மாதம் 5000 பேர் புக் செய்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய கார்களின் காத்திருப்பு காலம் குறைவாக இருக்கிறது. இந்த கார்களை வாங்க தற்போது 58 ஆயிரம் பேர் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள். இது இதற்கு முந்தைய மூன்று மாத எண்ணிக்கை விட மிக குறைவாகும். கடந்த ஜூன் மாதம் மட்டும் இந்த கார்களை வாங்க 12,000பேர் புக் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காருக்கு மிகப்பெரிய அளவிலான புக்கிங் மற்றும் காத்திருப்பு காலம் இருந்தது. தற்போது இது கணிசமான அளவு குறைந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் இந்த காரின் தயாரிப்பை அதிகப்படுத்தியதால் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த காரை பெற முடிந்தது. தற்போது 13,000 பேர் இந்த காரை புக் செய்துவிட்டு டெலிவரிக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திராவின் பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகிய இரண்டு எஸ்யூவி கார்களின் காத்திருப்பு காலம் கணிசமான அளவு குறைந்துள்ளது. தற்போது இந்த கார்களை வாங்க சுமார் 8000 வாடிக்கையாளர்கள் புக் செய்துவிட்டு காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் நீண்ட ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் காராக உள்ளது.
அடுத்ததாக மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள 3எக்ஸ்ஓ என்ற காருக்கான புக்கிங் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது இந்த காரை வாங்க 55,000 பேர் செய்துவிட்டு காரின் டெலிவரிக்காக காத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த கார் புதிய கார் என்பதால் இந்த கார் மீது மக்கள் மோகம் அதிகமாக இருக்கிறது. இதனால் பலர் இந்த காரை புக் செய்து வருகிறார்கள்.
மஹிந்திரா நிறுவனம் பொதுவாக அதிக காத்திருப்பு காலத்தை கொண்ட கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் தங்கள் கார்களின் உற்பத்தியை அதிகரித்துள்ளதால் விற்பனை அதிகமாகியுள்ளது. அதே நேரம் கார்களுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் தனது வாகன விற்பனையை அதிகரிக்கவே திட்டமிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்நிறுவனம் தங்கள் வாகன தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரிக்க பல்வேறு விதமான திட்டங்களை போட்டு வருகிறது. வருங்காலங்களில் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களை அதிக காத்திருப்பு காலம் இல்லாமல் விரைவாக டெலிவரி செய்ய ஏற்பாடுகளை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications









